டெங்கு, காலரா பரவல் தீவிரம்- ஒரே நாளில் காய்ச்சலுக்கு 11 பேர் பலி

பல்வேறு மருத்துவ மனைகளிலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மாநிலம் முழுவதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெங்கு, காலரா பரவல் தீவிரம்- ஒரே நாளில் காய்ச்சலுக்கு 11 பேர் பலி
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு காய்ச்சல் பரவி மக்களை பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. டெங்கு, காலரா, எலிக்காய்ச்சல், வெஸ்ட்நைட் காய்ச்சல் போன்றவை மக்களை தாக்கி உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவ மனைகளிலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 438 பேர் டெங்கு அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேருக்கு எலிக்காய்ச்சலும், 4 பேருக்கு காலராவும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஓரே நாளில் 11 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பலியானவர்களில் கொல்லத்தை சேர்ந்த ஆசிரியர் அஜீஸ் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நிலம்பூர், வள்ளிக்குன்னு, பொதுக்கல்லு, எடக்கரை பகுதிகளிலும் காய்ச்சல் தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவனந்தபுரம் நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு காலரா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்குள்ளவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 26 வயது வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

இதனை தொடர்ந்து அங்கும் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com