என் மலர்
நீங்கள் தேடியது "டெங்கு கொசு"
- கொசு பெருகும் போது கொசுவால் பரவும் எல்லா நோய்களும் அதிகமாகும்.
- டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவரை கொசு கடிக்கும் போது கொசுவுக்குள், வைரஸ் செல்கிறது.
"கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா!"
என்ற நகைச்சுவையை எல்லோரும் கேட்டு இருப்பீர்கள்.
இப்போது இருக்கும் இந்த பருவநிலை, வெயிலும் மழையுமாக, கொசுவுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.
கொசு பெருகும் போது கொசுவால் பரவும் எல்லா நோய்களும் அதிகமாகும். 1897வது வருடம் டாக்டர் ரோனால்ட் ராஸ் என்பவர் தான் மலேரியா நோய் கொசுவால் தான் பரவுகிறது, கொசுவை ஒழித்தால் மலேரியா நோயை கட்டுப்படுத்தலாம் என்பதை கண்டுபிடித்தார். அதைத்தொடர்ந்து கொசுவால் பரவும் மற்ற நோய்கள் டெங்கு, சிக்கன் குனியா, யானைக்கால் நோய், எல்லோ ஃபீவர், ஜிக்கா போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. டெங்கு காய்ச்சல் எப்படி ஒருவருக்கு வந்தது என்பதை கீழே படியுங்கள்.
மோகனாவிற்கு திடீரென தலைவலி அதிகமாக இருந்தது. அடிக்கடி வருவது தானே தலைவலி என்று தன்னுடைய வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இரவில் காய்ச்சல் அதிகமானது. தன்நிலை மறந்து முனகத் தொடங்கினார். உடல் வலி மற்றும் வயிற்று பிரட்டல், வாந்தி. எதுவும் சாப்பிட முடியவில்லை. காய்ச்சல் மாத்திரை எடுத்தால் சரியாகிவிடும் என்று மாத்திரையை போட்டுக் கொண்டார். அன்று இரவு காய்ச்சல் கடுமையானது. உடல் வலி மிக அதிகம். எழும்பவே முடியவில்லை. கண்களை திறக்க முடியாத அளவுக்கு கண்ணுக்கு பின்னே கடும் வலி. அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். மூன்று நாட்கள் கழித்த பின் பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதியானது.

ஜெயஸ்ரீ சர்மா
அதே நேரத்தில் ரத்த தட்டுகளும் குறைய ஆரம்பித்தன. வயிற்றில் ஸ்கேன் செய்ததில் வயிற்றில், நெஞ்சுக்கூட்டில் நீர் சேர்ந்து இருந்தது மற்றும் இருதயத்தை சுற்றியும் நீர் சேர்ந்து இருந்தது. கல்லீரல் என்சைம்கள் ஆயிரத்தை கடந்திருந்தன. பொதுவாக முப்பது நாற்பது தான் இருக்கும்.
முழு உடல் பாதிப்பாக டெங்கு காய்ச்சல் பாதித்திருந்தது. ஆனால் அவருடைய அதிர்ஷ்டம் ரத்த தட்டுகள் மிகவும் குறையவில்லை. மோகனாவிற்கு டெங்குவிலிருந்து வெளியே வர இரண்டு வாரங்கள் ஆனது.
எப்படி வருகிறது?
டெங்கு ஒரு வைரஸ் காய்ச்சல். டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவரை கொசு கடிக்கும் போது கொசுவுக்குள், வைரஸ் செல்கிறது. கொசுவுக்குள் வைரஸ் பல மடங்காக பெருகிறது. இதே கொசு இன்னொரு வரை கடிக்கும் போது அவர் உடம்புக்குள் வைரஸ் எளிதாக நுழைந்து விடுகிறது. 3 -14 நாட்களுக்குள் அவருக்கு டெங்கு காய்ச்சல் உண்டாகிறது.
என்னன்னு அறிகுறிகள்?
பொதுவான அறிகுறிகள் -
கடுமையான காய்ச்சல்(104*)
தாங்க முடியாத தலைவலி
கண்களுக்கு பின்னால் வலி மூட்டு வலி, தசை வலி வாந்தி, தலைசுற்றல், சோர்வு உடல் முழுவதும் தடிப்புகள். இது எல்லாமே எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதில்லை. எந்த அளவுக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாக இருக்கும் என்பது மாறுபடும்.
மருத்துவமனையில் சேர வேண்டுமா? அல்லது வீட்டில் இருந்தே சிகிச்சை பெறலாமா?
முதல் மூன்று நாட்கள் கடும் காய்ச்சல் இருக்கும். பிறகு காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும். மிகவும் கடுமையான காய்ச்சல் இருந்தால் மருத்துவமனையில் சேரலாம். ஆனால் உண்மையில் மிகவும் பிரச்சினையான காலம், காய்ச்சல் குறையும் போது தான். அதாவது மூன்று நாட்களுக்கு பிறகு. ரத்த தட்டுகள் குறைய ஆரம்பிக்கும். (பிளேட்லட்ஸ்) அந்த சமயத்தில் மருத்துவமனையில் இருப்பது நல்லது.
எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது?
முதலில் நம்மைச் சுற்றியுள்ள இடங்களில் கொசு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுப்பழுக்களை கண்டுபிடிக்க. குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். கொசு புழுக்களை கண்டால் உடனே அழித்து விடுங்கள். எங்கு தண்ணீர் தேங்கி இருந்தாலும் அதில் நெளிவதை காணலாம். குடிக்கும் நீர் எனில் மூடி வையுங்கள். சங்கு பூக்களை போட்டு வைத்தாலும் கொசுப்புழுக்கள் வராது (என் பாட்டி சொல்லிக் கொடுத்தது). கொசு வலை தான் கொசுக்கடியில் இருந்து தப்பிப்பதற்கான மிகச் சிறந்த வழி.
குழந்தைகளுக்கு வந்தால் எப்படி?
நான்கு வயதான சூர்யாவுக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல். குழந்தை மருத்துவரை பார்த்து விட்டு, உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மூன்று நாட்களில் காய்ச்சல் குறைந்து, வீட்டிற்கு அனுப்பலாம் என்று முடிவு. அன்று குழந்தை அரக்கு கலரில் வாந்தி எடுத்தது. அது வயிற்றில் ரத்தம் கசிவதற்கான அறிகுறி. ரத்த பரிசோதனைகளில் டெங்கு காய்ச்சல் உறுதியானது. உடல் முழுவதும் எங்கும் ரத்த தடிப்புகள் இருந்தது. ரத்த தட்டுகள் மிகவும் குறைய ஆரம்பித்தது. ரத்தத் தட்டுகள் ஏற்றப்பட்டன. குழந்தைக்கு நீர்ச்சத்து சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு வாரத்தில் டெங்குவின் தீவிரம்குறைந்து நல்வாய்ப்பாக குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லை. குழந்தைகளுக்கு வயதானவர்களுக்கு, இணை நோய் உள்ளவர்களுக்கு டெங்கு வந்தால் மிகவும் தீவிரமாகி இறந்து போக வாய்ப்பு உண்டு. காய்ச்சல் வந்தால் இவர்களை உடனே கவனிப்பது நல்லது. கொசு வலையை பயன்படுத்துங்கள்.
மற்றவருக்கு பரவுமா?
ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு பரவாது. கொசுவினால் மட்டுமே பரவும்.
டெங்குவினால் ஏன் இறந்து போகிறார்கள்?
பெரும்பாலானவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்ற வைரஸ் காய்ச்சலை போல வந்துவிட்டு சென்று விடும். ஆனால் நூறில் ஒருவருக்கு 'டெங்கு ஷாக் சின்றோம் 'அல்லது 'டெங்கு ஹெமரேஜிக் டிசீஸ்', எனப்படும் கடும் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ரத்தம் மற்றும் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் பாதிக்கப்படுவதால் மரணம் ஏற்படுகிறது.

ஒருமுறை வந்தால் மீண்டும் வருமா?
அவரவர் உடலினுடைய எதிர்ப்பு சக்தியை பொறுத்து மீண்டும் வரலாம்.
தடுப்பூசி உண்டா?
இதுவரை தடுப்பூசி இல்லை. டெங்கு வைரஸை நேரடியாக கொல்லும் மருந்துகள் இல்லை. சப்போர்ட்டிவ் ட்ரீட்மென்ட் எனப்படும் குளுக்கோஸ் ஏற்றுவது, காய்ச்சலை குறைப்பது மற்றும் பிளேட்லெட்ஸ் அளவை கண்காணிப்பது போன்ற சிகிச்சைகள் மட்டுமே செய்கிறோம்.
நிலவேம்பு கஷாயம் பயன் தருமா? பப்பாளி இலை பயன்படுமா?
சித்த மருத்துவத்தில் நிலவேம்பு கஷாயம் பரிந்துரைக்கப்படுகிறது எல்லா வகையான வைரஸ் காய்ச்சலுக்கும். மருத்துவரின் அறிவுரையின் படி எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கும் பக்க விளைவுகள் உண்டு. பப்பாளி இலை சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து ரத்தத்தில் உள்ள பிலைட் லிஸ்ட் அளவை மிகவும் கீழே போகாமல் காப்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டது. அதிலிருந்து தயாரிக்கப்படும் சிரப் கொடுக்கப்படுகிறது.
காய்ச்சல் வந்தால் என்ன செய்யக்கூடாது?
காய்ச்சல் டெங்குவா? என்று தெரியாத வரை வலி மாத்திரைகளை எடுக்கக்கூடாது. எந்த ஒரு ஊசியும் போட்டுக் கொள்ளக் கூடாது . மருத்துவமனையில் சென்று ரத்தத்தில் ஏற்றும் ஊசிகளை மட்டுமே எடுக்கலாம். இதை எல்லோரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் . அதுபோல காய்ச்சல் அதிகமாகும் போது தண்ணீர் குடிக்காமல் இருக்க கூடாது. இப்போது தமிழ்நாட்டில் வெகுவேகமாக டெங்கு பரவி வரும் நிலையில், இதைப் பற்றி மக்கள் தெரிந்து கொண்டால்தான், நோய் பரவுதலை கட்டுப்படுத்த முடியும்.
வாட்ஸ்அப்: 8925764148
- டெங்கு கொசுவை உருவாக்கக்கூடிய தண்ணீர் தேங்க கூடிய பொருள்களை அப்புறப்படுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- நல்ல தண்ணீரை உடனுக்குடன் பிடித்து அதை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.
பேராவூரணி:
தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிக்கும் பணி தீவிரமாக நட பெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி குழுவினர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி. சௌந்தரராஜன் தலைமையில் ஒவ்வொரு வீடாகச் சென்று டெங்கு கொசுவை உருவாக்கக்கூடிய தண்ணீர் தேங்க கூடிய பொருள்களை அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தரராஜன் கூறியதாவது, பகலில் தான் டெங்கு கொசு கடிக்கும். நல்ல தண்ணீரில் தான் டெங்கு கொசு உருவாகிறது. எனவே மூன்று நாட்களுக்கு மேல் நல்ல தண்ணீரை பிடித்து வைத்திருப்பதால் டெங்கு கொசு உருவாகிறது. நல்ல தண்ணீரை உடனுக்குடன் பிடித்து அதை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.
காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும் எனவும், தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள், உரித்து மட்டைகளை தண்ணீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார். சுகாதார மேற்பார்வையாளர் தவமணி, சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார அறிவுறுத்தினார்.
- 85 ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் சுமார் 2,322 பழைய டயர்கள் அகற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி, ஜூலை.5-
தமிழகத்தில் பருவ மழை தொடங்க உள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெங்கு, கொசுப்புழு உற்பத்தி ஆகாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார அறிவுறுத்தினார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் பழைய டயர்களை கண்டறிந்து அகற்றும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் சுகாதாரத்துறையுடன், கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் இணைந்து 85 ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் சுமார் 2,322 பழைய டயர்கள் அகற்றப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலக்டர் கூறியதாவது:-
பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறத்திலும் மழைநீர் தேங்காவண்ணம், தொட்டிகள், உடைந்த மண்பாண்டங்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உரல்கள் போன்றவற்றை அகற்றியும், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து, டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து முன்னெ ச்சரி க்கை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்கள் காய்ச்சல் என்றால் தாமாகவே கடைகளில் விற்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் தேவையான ரத்த பரிசோதனைகளை செய்து கொண்டு, காய்ச்சலுக்கான முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- வீடு, வீடாக சென்று தண்ணீரில் குளோரின் ஊற்றினர்
- தண்ணீர் தேங்கிய இடத்தில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரிஅடுத்த பட்டணம் ஊராட்சியில் சுகாதாரத்துறைசார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
திமிரி சுகாதார மேற்பார்வையாளர்கள் பழனி, மணி, சுகாதார ஆய்வாளர் கவின் ஆகியோர் தலைமையிலான தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தெருக்களில் கொசு மருந்து அடித்தல், வீடு, வீடாக சென்று தண்ணீரில் குளோரின் தெளித்தல், சாலைகளில் தண்ணீர் தேங்கிய இடத்தில் பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
- ஜலதோசம், காய்ச்சல் போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்
- அதிகாரி உத்தரவு
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் விட்டு, விட்டு மழை பெய்து வருகின்றது.
இதனால் ஜலதோசம், காய்ச்சல் போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வு மற்றும் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி உத்தரவின்பேரில் தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்து வருகின்றனர்.
- அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது.
- உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது.
உலகிலேயே முதன்முறையாக, தென் அமெரிக்க நாடான பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏ.டி.எஸ். கொசுக்களால் பரவும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சமீபகாலமாக பிரேசில் நாட்டில் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தொடர் காய்ச்சல். ஏற்பட்டதால், அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதனையடுத்து, மக்களை காக்க பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது. இதனால், உலக அளவில் அதிகமான டெங்கு தடுப்பூசி போடப்பட்ட நாடாக பிரேசில் கருதப்படுகிறது. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் ( WHO)தெரிவித்துள்ளது.






