search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேராவூரணி கொன்றைக்காட்டில் டெங்கு கொசு ஒழிப்பு பணி
    X

    கொன்றைக்காடு கிராமத்தில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்த போது எடுத்த படம். 

    பேராவூரணி கொன்றைக்காட்டில் டெங்கு கொசு ஒழிப்பு பணி

    • டெங்கு கொசுவை உருவாக்கக்கூடிய தண்ணீர் தேங்க கூடிய பொருள்களை அப்புறப்படுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • நல்ல தண்ணீரை உடனுக்குடன் பிடித்து அதை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

    பேராவூரணி:

    தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிக்கும் பணி தீவிரமாக நட பெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி குழுவினர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி. சௌந்தரராஜன் தலைமையில் ஒவ்வொரு வீடாகச் சென்று டெங்கு கொசுவை உருவாக்கக்கூடிய தண்ணீர் தேங்க கூடிய பொருள்களை அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தரராஜன் கூறியதாவது, பகலில் தான் டெங்கு கொசு கடிக்கும். நல்ல தண்ணீரில் தான் டெங்கு கொசு உருவாகிறது. எனவே மூன்று நாட்களுக்கு மேல் நல்ல தண்ணீரை பிடித்து வைத்திருப்பதால் டெங்கு கொசு உருவாகிறது. நல்ல தண்ணீரை உடனுக்குடன் பிடித்து அதை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

    காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும் எனவும், தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள், உரித்து மட்டைகளை தண்ணீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார். சுகாதார மேற்பார்வையாளர் தவமணி, சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×