search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "mosquito"

  • கொசுக்கள் சூறாவளி போல கூட்டமாக பறக்கிறது.
  • ஆற்றங்கரைகளில் கொசுக்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது.

  தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக மணல் சூறாவளி, நீர் சூறாவளி உருவாவதை பார்த்திருப்போம். ஆனால் மராட்டிய மாநிலம் புனேவில் ஆயிரக்கணக்கான கொசுக்கள் சூழ்ந்து சூறாவளி உருவானது போன்று பரவிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 'பீயிங் புனே அபிஷியல்' என்ற பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் ஆற்றங்கரைகளில் கொசுக்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது.

  பின்னர் அந்த கொசுக்கள் சூறாவளி போல கூட்டமாக பறக்கிறது. இந்த வீடியோ வைரலாகி 45 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். புனே மாநகராட்சி அதிகாரிகள் ஆற்றங்கரை மற்றும் நதிகளை சுத்தம் செய்யும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். இதன் மூலம் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என ஒரு பயனரும், இதுபோன்ற கொசு சூறாவளி ஆபத்தானதாக தெரிகிறது என மற்றொரு பயனரும் பதிவிட்டனர். பொது சுகாதாரம் மோசமாக இருப்பதாக பயனர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

  • மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

  சென்னை:

  சென்னையில் தற்போது கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதையடுத்து சென்னை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து தெளிப்பதை தொடங்குமாறு மலேரியா ஒழிப்பு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

  இதையடுத்து மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தண்ணீர் தேங்கி நிற்கும் அனைத்து மழைநீர் வடிகால்களிலும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2,600 தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் சென்னை நகரம் முழுவதும் புகை அடித்தும், மருந்துகளை தெளித்தும் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

  சென்னையில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மழைநீர் வடிகால்கள் இருப்பதால் அங்கு தொடர்ந்து மருந்து தெளிக்கப்பட வேண்டும். வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பிறகும் மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நீரை வெளியேற்றினாலும் கூட அந்த வழியாக கழிவுநீர் செல்கிறது. எனவே கொசு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

  • சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது.
  • பொதுமக்களுக்கு டெங்கு கொசு பற்றியும், அது பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் தெரிவித்தனர்.

  நாகப்பட்டினம்:

  நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

  மரைக்கான்சாவடி, தைக்கால் தெரு, ஆற்றங்கரை தெரு, இந்திராநகர், ஆலங்கு டிச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தலின் பேரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.

  இந்த பணிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா, செயல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

  இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், அலுவலக உதவியாளர் மாதவன் மற்றும் டெங்கு ஒழிப்பு களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று அங்குள்ள குப்பைகள், தேங்காய் மட்டைகள், டயர்கள், உடைந்த கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றி கொசு மருந்துகளை தெளித்து பொதுமக்களுக்கு டெங்கு கொசு பற்றியும் அது பரவாமல் தடுக்கும் வழிமுறைகளையும் தெரிவித்தனர்.

  • பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர்.
  • புகையிலை பொருட்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  பாபநாசம்:

  பாபநாசம் பேரூராட்சியில் கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்லப்பா, சுகாதார ஆய்வாளர்கள் நாடிமுத்து , மருத்துவமில்லா மேற்பார்வையாளர் தியாகராஜன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம் மற்றும் டெங்கு களப்பணியாளர்கள் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தேங்கியுள்ள டயர்களையும் தேவையற்ற பொருட்களையும் அப்புறப்படுத்தினார்கள்.

  பாபநாசம் பகுதியில் புகையிலை விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு ரூ.2,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  • 363 நபர்கள் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  சென்னை:

  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

  தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

  கடந்த ஆண்டு 2,65,834 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது, அதில் 6,430 நபர்களுக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இந்தாண்டு இதுவரை 2,42,743 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் 4,524 நபர்களுக்கு டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 15 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 363 நபர்கள் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளின் பகுதிகள் சிறுவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருக்களில் வாரந்தோறும் கொசு புழு வளரிடங்களான மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருட்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள்) போன்றவைகளை கண்டறிந்து கொசு புழுக்கள் இருப்பின் அழித்து வருகின்றனர். டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக 318 மருத்துவ அலுவலர்கள், 635 செவிலியர்கள், 954 கொசு ஒழிப்புக்கென நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2,324 ஒப்பந்த பணியாளர்கள் என ஆக மொத்தம் 4,231 மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

  சென்னையில் இன்று மட்டும் 54 நபர்கள் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முகாம் நடைபெற்றது.
  • வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் கொசு புழுக்களை உற்பத்தியாகும் வண்ணம் வைத்திருந்தால் உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டது.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி கென்னடி நினைவு தொடக்கப்பள்ளியில் மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முகாம் நடைபெற்றது. இதில் கமிஷனர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

  டெங்கு இல்லாத நகரமாக திண்டுக்கல் மாநகரம் இருக்க வேண்டும். இதற்கு சுகாதார ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். வீடு வீடாக சென்று கொசு புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டுபிடித்து, மருந்து ஊற்றி அழிக்க வேண்டும்.

  தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க அறிவுறுத்த வேண்டும். தொடர்ந்து வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் கொசு புழுக்களை உற்பத்தியாகும் வண்ணம் வைத்திருந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். முறையாக பணியில் ஈடுபடாத களப்பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கொசு உற்பத்தியை தடுக்க சுகாதார ஆய்வாளர்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். கொரோனாவை போல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் அனைவரும் தீவிரம் காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

  இதில் சுகாதார இணை இயக்குநர் வரதராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவ அலுவலர்கள், பரப்புரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
  • நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

  நாமக்கல்:

  நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

  நாமக்கல் நகரை பொறுத்த வரை கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்கங்களில் மழைநீர் தேங்கியது.

  கொசுப்புழு ஒழித்தல்

  இதையடுத்து நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

  மேலும் வீடு, வீடாக சென்று கொசு மருந்து அடித்தல், கொசுப்புழு ஒழித்தல் உள்ளிட்ட பணிகளில் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணி வாரம் தோறும் வார்டு வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  தினமும் 45 பணியாளர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட 12 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

  நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் உத்தரவின்படி நகராட்சி பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் தண்ணீரில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், வீடுகளின் முன்புறம் உள்ள தொட்டிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.

  டெங்கு

  இதுகுறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் திருமூர்த்தி கூறுகையில் மழைக் காலங்களில் கொசுவால் ஏற்படும் நோய்களை தடுக்க நகராட்சி பகுதியில் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொசு உற்பத்தியை தடுக்க மருந்து தெளிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  இதன் மூலம் டெங்கு பரவலை தடுக்க முடியும் என்றார்.

  • மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் பல வாரங்களாக முறையாக கிடைப்பதில்லை.
  • கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதியில் வசிப்பவர்கள் சிரமப்படுகின்றனர்.


  நெல்லை:

  நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை மேயர் ராஜு, துணை கமிஷனர் தாணு மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் செயின்ட் பால்ஸ் நகர் குடியிருப்பு வாசிகள் கழுத்தில் தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்தபடி வந்து மனு அளித்தனர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:-

  பாளை மண்டலம் 32-வது வார்டு செயின்ட் பால்ஸ் நகரில் ஆயுதப்படை குடியிருப்பு தென்புறம், இசக்கி அம்மன் கோவில் வடபுறம் உள்ளிட்ட பகுதி களில் மற்றும் செயின்ட் பால்ஸ் நகர் மேற்கு அப்பா சாமி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் பல வாரங்களாக முறையாக கிடைப்பதில்லை.

  ஒரு சில நாட்கள் மட்டும் சிறிது நேரம் குழாய்களில் குடிதண்ணீர் வருகிறது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சீராக குடிதண்ணீர் தினமும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

  தொடர்ந்து அவருடன் வந்திருந்த செயின்ட் பால்ஸ் நகர் மக்கள் நல அபிவிருத்தி சங்க தலைவர் சாம் சுந்தர் ராஜா, செயலாளர் சங்கர நாராயணன், பொருளாளர் முருகேசன், உப தலைவர் மனோகரன், துணை செயலாளர் ராஜதுரை ஆகியோர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

  செயின்ட் பால்ஸ் நகர் மேற்கு பகுதி சாலையானது 15 வருடங்களுக்கும் மேலாக மோசமாக இருந்து வந்தது. தற்போது புதிய தார் சாலை அமைத்து தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். புதிதாக அமைக்கப்பட்ட சாலை சற்று உயர்ந்துள்ளதால் அதன் இரு ஓரங்களிலும் செம்மண் நிரப்பி விபத்தை தடுக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய சாலை அமைக்கப்பட்ட தெருவில் பாதாள சாக்கடை இல்லாததால் கழிவு நீர் திறந்த வெளி சாக்கடையில் விடப்படு கிறது.

  இதனால் ஆங்காங்கே சாக்கடை தண்ணீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. அதேபோல் சாக்கடைக்கு மேல் நான்கு இடத்தில் ரோடு பாலம் உள்ளது. அந்த பாலங்கள் இடிந்துள்ளதால் சாக்கடை வெளியே வர முடியாமல் இருக்கிறது. எனவே சாக்கடை அடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதான சாலையில் மழைநீர் தேங்கும் நிலையில் சில சாலையில் உள்ளன. அதை சரி செய்ய வேண்டும். இலந்தைகுளம் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் இருந்து வருவதால் குளம் மேடாகி விட்டது. அதனையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

  • மேலப்பாளையம் மண்டலத்தில் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக கள ஆய்வு செய்யப்படுகிறது
  • தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

  நெல்லை:

  நெல்லையில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல்மழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவின்பேரில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  துணை கமிஷனர் தாணு மூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் (பொறுப்பு) காளிமுத்து அறிவுறுத்தலின்படி மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார அலுவலர் அரச குமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக கள பணியாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.

  அப்போது சுற்றுப்புறங் களில் தூய்மை பணிகள் மேற் கொள்ளப்பட்டது. தண்ணீர் தேங்கி கொசுப் புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டைகள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி அகற்றினர்.

  மேலும், பூந்தொட்டிகள், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காத வகையில் தினசரி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி னார்கள். புதிய கட்டிடங் களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வகை யில் பராமரித்து கொள்ள வும் அறிவுரையும் வழங்கப்பட்டது.

  • மலேரியா கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி தொடங்கியது.
  • கொசு மருந்து தெளிப்பு பணியில் 50 பணியாளர்கள் ஈடுபட் டுள்ளனர்.

  கீழக்கரை

  ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் உள்ள ஏர்வாடி, வாலி நோக்கம், முந்தல், மாரியூர், ஒப்பிலான் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்க பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் வருடத்திற்கு இரண்டு முறை வீடு வீடாக சென்று கொசு மருந்து தெளிப்பான்கள் மூலம் தெளிக்கப்படுகிறது.

  அதன்படி மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தலின் படி, சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், டாக்டர் செல்வ விநாயகம், பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் இந்திரா ஆகியோரின் உத்தரவுப் படி ஏர்வாடி தர்கா பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியினை மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் தலைமையில் ஏர்வாடி தர்ஹா கமிட்டி தலைவர் முகமது பாக்கீர் சுல்தான் தொடங்கி வைத்தார்.

  30 நாட்கள் நடைபெறும் இந்த கொசு மருந்து தெளிப்பு பணியில் 50 பணியாளர்கள் ஈடுபட் டுள்ளனர். அவர்களோடு இணைந்து டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியா ளர்களும் வீடு வீடாக சென்று தண்ணீரில் வளரும் கொசுப்புழுக்களை அபேட் மருந்துகள் ஊற்றி அழிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ள னர்.

  நேற்று தொடங்கிய இப்பணிகளை பரமக்குடி சுகாதாரத்துறை இளநிலை பூச்சியியல் வல்லுனர்கள், கண்ணன், பாலசுப்பிர மணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் செல்லத் துரை, ராஜசேகரன், சுப்பிர மணியன், இஜாஜ் முகமது, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.