search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malaria"

    • மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் தற்போது கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதையடுத்து சென்னை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து தெளிப்பதை தொடங்குமாறு மலேரியா ஒழிப்பு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதையடுத்து மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தண்ணீர் தேங்கி நிற்கும் அனைத்து மழைநீர் வடிகால்களிலும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2,600 தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் சென்னை நகரம் முழுவதும் புகை அடித்தும், மருந்துகளை தெளித்தும் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    சென்னையில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மழைநீர் வடிகால்கள் இருப்பதால் அங்கு தொடர்ந்து மருந்து தெளிக்கப்பட வேண்டும். வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பிறகும் மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நீரை வெளியேற்றினாலும் கூட அந்த வழியாக கழிவுநீர் செல்கிறது. எனவே கொசு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கோபிசெட்டிபாளைய நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட்டப்பாக்கள், உடைந்த மண்பாண்டங்கள் டயர்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தியும், கொசுப்புழுக்களை காண்பித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி, மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயராம் நடுநிலைப் பள்ளிகளில் டெங்கு, மலேரியா நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் மற்றும் ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவின்படி, நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ் முன்னிலையில், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், சவுந்தரராஜன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மொடச்சூரில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும்,

    துப்புரவு ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான குழுவினர் நகராட்சி ஜெயராம் நடுநிலைப் பள்ளியிலும் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தனர்.

    இதில் கொசு முட்டைகள் இட்டு வளரும் இடங்களான தேவையற்ற பிளாஸ்டிக் டப்பாக்கள், முட்டை ஓடுகள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட்டப்பாக்கள், உடைந்த மண்பாண்டங்கள் டயர்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தியும், கொசுப்புழுக்களை காண்பித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • மலேரியா அறிகுறிகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர்.
    • ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் சேரி , சிறுவளையம், துறைபெரும்பாக்கம், கீழ்வீராணம் உள்ளிட்ட பகு திகளில் பொதுமக்கள் மத்தியில் மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    சிறுகரும்பூர் ஊராட்சியில் நடந்த மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ் பங்கேற்று பேசினார். அப்போது மலேரியா குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்.

    மேலும் பொதுமக்கள் எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மலேரியா நோய்க்கு சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இலவசமாக கிடைக்கும், என்றார்.

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் குமார், தமிழ்ச்செல்வன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் மோகனசுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #Dogs #Malaria
    லண்டன்:

    மலேரியாவுக்கு ஆண்டு தோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணம் அடைந்து வருகின்றனர். கொசுக்களால் பரவும் இந்த நோய் ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவும் இன்றி தாக்குகிறது.

    இந்த நோய் தாக்கியுள்ளதா என்பதை ரத்த பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். இந்த நிலையில் நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    மனிதர்களின் காலுறையை (சாக்ஸ்) நாய்களிடம் கொடுத்து மோப்ப பிடிக்க செய்து அதன் மூலம் மலேரியா நோயை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஆய்வு கவுன்சில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்த ஆய்வை மேற்கொண்டது.

    நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய 5 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் காலுறைகள் சேகரிக்கப்பட்டு நாய்களிடம் மோப்ப சக்திக்கு வழங்கப்பட்டது.

    அதில் 70 சதவீதம் பேருக்கு மலேரியா நோய் இருந்ததை மோப்ப நாய்கள் கண்டுபிடித்தன. அதற்காக அந்த நாய்களுக்கு சிறப்பு மோப்ப பயிற்சி அளிக்கப்பட்டது.



    எனவே மலேரியா நோயை கண்டறிய நாய்களுக்கு மோப்ப சக்தி பயிற்சி அளிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்று புற்று நோய்கள், நீரிழிவு நோயினால் ஏற்படும் கோமா போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும் என கூறியுள்ளனர். #Dogs #Malaria
    ×