என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் மா.சுப்ரமணியன்"
- 16,648 சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 6 லட்சத்து 78 ஆயிரத்து 34 பேர் மருத்துவப் பயன் பெற்றுள்ளனர்.
- இந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளவும், மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்கவும் சுகாதாரத்துறை சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சுகாதாரத் துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடத்திய பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கி 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில், சராசரியாகப் பெய்ய வேண் டிய 86.7 செ.மீ மழையில், இதுவரை 24.9 செ.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.
இருப்பினும், சுகாதாரத் துறை முழு வீச்சில் தயாராக உள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 16,648 சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 6 லட்சத்து 78 ஆயிரத்து 34 பேர் மருத்துவப் பயன் பெற்றுள்ளனர்.
இந்த முகாம்கள் மூலம் 5,829 காய்ச்சல் பாதிப்புகளும், 51,107 இருமல், சளி பாதிப்பு களும் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு தெருவில் இரண்டு அல்லது மூன்று பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அங்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு இதுவரை 18,725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துரதிர்ஷ்டவசமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளும் இணை நோய்கள் மற்றும் தாமதமாக மருத்துவமனையை அணுகு வது போன்ற காரணங்களால் நிகழ்ந்துள்ளன.
உயிரிழப்பு இல்லாத நிலையை உருவாக்குவதே அரசின் நோக்கம். கடந்த காலங்களில், 2012-ல் 66 பேரும், 2017-ல் 65 பேரும் டெங்குவால் உயிரிழந்தனர். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தடுப்பு நட வடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டதால் உயிரிழப்புகள் ஒற்றை இலக்கத்தில் கட்டுப் படுத்தப்பட்டுள்ளன.
டெங்குவைக் கண்டறிய மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் 4,755 ஆய்வகங்கள் செயல்படுகின்றன. இது இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் உள்ள அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
இந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
டெங்கு மட்டுமல்லாமல், மலேரியா, சிக்குன்குனியா, டைபாய்டு, எலிக்காய்ச்சல் போன்ற பிற மழைக்கால நோய்களின் பாதிப்பும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணிசமாகக் குறைந்துள்ளது.
நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் சுமார் 65,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மாநிலம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ம.பி. காவல்துறை அமைத்த சிறப்பு விசாரணைக் குழு நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை சென்னையில் கைது செய்தது.
- மத்திய அரசு மற்றும் ம.பி. அரசின் சோதனைகளில் மருந்தில் எந்தக் கோளாறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது என ம.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் வெவ்வேறு இருமல் மருந்தை உட்கொண்டு பாஜக ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.
ம.பி. காவல்துறை அமைத்த சிறப்பு விசாரணைக் குழு நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை சென்னையில் கைது செய்தது.
இந்நிலையில் நாக்பூரில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மோகன் யாதவ், "எங்கள் காவல்துறை தமிழ்நாட்டில் கைது நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு எதிர்பார்க்கும் விதத்தில் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒரு முறையான அறிக்கையை அளிக்க வேண்டும். மருந்து தயாரிக்கப்பட்ட இடத்தில் உள்ள அரசு உறுதியான மற்றும் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மருந்தில் டையெத்திலீன் கிளைக்கால் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மருந்துக்குத் தடை விதித்ததாகத் தெரிவித்தார்.
மேலும், ஆரம்பத்தில் மத்திய அரசு மற்றும் ம.பி. அரசின் சோதனைகளில் மருந்தில் எந்தக் கோளாறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு அரசுதான் நச்சுத்தன்மையை உறுதி செய்து இரு மாநில அரசுகளுக்கும் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், அலட்சியமாக இருந்ததாகக் கூறி, இரண்டு மூத்த மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்களைத் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அரசியல் ஆக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் ம.சுப்ரமணியன் கேட்டுக்கொண்டார்.
திருவொற்றியூர:
சென்னை எண்ணூர் தாழங்குப்பத்தில் உள்ள கத்திவாக்கம் நகராட்சி ஆரம்ப பள்ளியில் 10-வது மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 10-வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்குடன் முகாம் நடைபெற்று வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆலோசனைப்படி கடந்த 10-ந்தேதி துவக்கப்பட்ட இல்லம் தேடி தடுப்பூசி போடுவது மற்றும் மருத்துவ திட்டத்தின்கீழ் இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன் பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி 70 சதவிகிதமும், இரண்டாம் டோஸ் தடுப்பூசி 35 சதவிகிதமும் போடப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதுவரை 80 சதவிகித தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

அம்மா கிளினிக்குக்கு பதிலாக இல்லம் தேடி மருத்துவம் கொண்டு வரப்படவில்லை. அம்மா கிளினிக்கை விட கடந்த 6 மாதங்களில் அதிகளவிலான மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
2 ஆயிரம் அம்மா கிளினிக்குகள் திறக்கப்படும் என கடந்த ஆட்சியில் அறிவித்துவிட்டு அவசர அவசரமாக அம்மா கிளினிக் பலகைகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 1900 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் ஒரு நர்சு கூட தேர்வு செய்யப்படவில்லை.
அம்மா கிளினிக் மூலம் பயன்பெற்றவர்கள் விவரத்தையும், அம்மா கிளினிக்கில் பணியமர்த்தப்பட்டவர்களின் விவரத்தையும் முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.
நம் நாடு ஜனநாயக நாடு. பொது இடங்களுக்கு தடுப்பூசிகள் போட்டவர்கள் தான் செல்ல வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. மக்கள் தன்னிலை அறிந்து பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இதனை பின்னால் சென்று கண்காணிக்க இயலாது.
இந்த அரசாணைக்கு பிறகு நேற்று பல இடங்களில் பொதுமக்கள் சினிமா, மால்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்ல வேண்டுமே என தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளனர்
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் எம்.எல். ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், சென்னை மாநகர ஆணையாளர் ககன் தீப்சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்... இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க முயன்றால் தக்க பதிலடி- ராஜ்நாத்சிங் எச்சரிக்கை






