search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister MSubramanian"

    • வெண்மை நிற பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடையில்லை.
    • நிறமி கலந்த பஞ்சுமிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதனை பரிசோதித்தபோது பஞ்சுமிட்டாயில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது புற்றுநோயை உருவாக்கக்கூடியது என்பது தெரியவந்தது.

    தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தமிழக அரசு நேற்று தடை விதித்தது. உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரையின் பேரில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.

    தடையை மீறி பஞ்சுமிட்டாயை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் நிறமி கலக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்க்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெண்மை நிற பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடையில்லை என தெரிவித்தார்.

    நிறமி கலந்த பஞ்சு மிட்டாய்க்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், நிறம் கலக்கப்படாத வெண்மை நிற பஞ்சுமிட்டாய் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
    • கொங்காடை காலனி மற்றும் பழங்குடியினர் காலனிக்கு சென்று மலைவாழ் மக்களை சந்தித்து கலந்துரை யாடுகிறார்.

    ஈரோடு:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் பொதுமக்களை சந்தித்து குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.

    அதன்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். மாலை 4 மணிக்கு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அவருக்கு தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.அதனைத்தொடர்ந்து பர்கூர் ஊராட்சி தாமரை க்கரை வந்தடைகிறார்.

    பின்னர் ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் அமைச்சர் சுப்பிரமணியன் அங்கு ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து கொங்காடை காலனி மற்றும் பழங்குடியினர் காலனிக்கு சென்று மலைவாழ் மக்களை சந்தித்து கலந்துரை யாடுகிறார்.

    பின்னர் இன்று இரவு தாமரைக்கரை வனத்துறை பயணியர் விடுதியில் வந்து தங்குகிறார். இதைத் தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் அமைச்சர் சுப்பிரமணியன் அங்கு ஆய்வு மேற்கொள்கிறார்.

    இதைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் தேவர்மலை துணை சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.அதைத் தொடர்ந்து காலை 11:30 மணியளவில் தாமரை கரை துணை சுகாதார நிலையம் உட்பட பர்கூர் மலை கிராமத்திற்கு என்று தனியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    இதேப்போல் 102 இலவச தாய் சேய் ஊர்தி சேவை, நடமாடும் மருத்துவக் குழு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு இலவச அமரர் உறுதி சேவை மற்றும் மருத்துவ நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் மாலை 3:30 மணியளவில் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார். 

    • 5,95,660 பயனாளிகளுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.
    • 37 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 5.43 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

    மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடைபெற்றது.

    இதில் 12 வயதிற்கு மேற்பட்ட 7,75,193 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணையாக 29,729 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 1,49,804 பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 5,95,660 பயனாளிகளுக்கு

    பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.59% பேருக்கு முதல் தவணையாகவும் 91.61% பேர்களுக்கு இரண்டாம் தவணையாகவும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள.

    இதுவரை நடைபெற்ற 37 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 43 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள். இன்று (26.09.2022) கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • பன்றி காய்ச்சல் வந்தால் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகி விடும்,
    • பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை.

    தமிழகம் வந்துள்ள மேகாலயா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜேம்ஸ் ஜே.கே.சங்கமா சென்னையில் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தார். அப்போது இரு மாநிலங்கள் இடையே ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அவசர சிகிச்சை பயிற்சி, உயிர்காக்கும் மயக்கவியல் திறன் பயிற்சி மற்றும் மீயொலி கருவி பயிற்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 


    பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: பன்றி காய்ச்சால் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 1044 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மட்டும் 368 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதிற்கு குறைவாக 42 குழுந்தைகளும், 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் 65 பேரும், 15 முதல் 65 வயதிற்குட்பட்டோர்கள் 192 பேரும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 69 பேரும் அடங்குவர்.

    மேலும், 89 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் 264 பேர், அரசு மருத்துவமனைகளில் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகிவிடும், எனவே பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை.

    மேலும் பெற்றோர்கள் காய்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, காய்ச்சல் சரியாகும் வரை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதல் தவணையாக 78,337 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • பூஸ்டர் தடுப்பூசி 8,59,628 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் நேற்று 50,000 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இது தொடர்பாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மந்திரி மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 


    ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற 34 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 10 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.

    நேற்று நடைபெற்ற முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட12,28,993 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 78,337 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 2,91,028 பயனாளிகளுக்கும் மற்றும் 8,59,628 பயனாளிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.39% முதல் தவணையாகவும் 90.61% இரண்டாம் தவணையாகவும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. நேற்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றதால் இன்று கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×