என் மலர்
நீங்கள் தேடியது "மருத்துவமனையில் அனுமதி"
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவுக்கு திடீரென உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஜினியின் மூத்த சகோதரர் சத்யநாராயணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனது அண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை அறிந்து நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூரு புறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர்,ஜோஜூ ஜார்ஜ், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
திரைப்படம் கடந்த ஆகஸ்டு 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடித்த மலையாள நடிகராஜ ஜோஜூ ஜார்ஜூக்கும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தது.
இந்நிலையில், கேரள மாநிலம் மூணாறு பகுதியில் படப்பிடிப்பின்போது நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஓட்டிச் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
அதில் சென்ற ஜோஜு ஜார்ஜ் உள்பட 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வரவு எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
- இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெங்கடேஸ்வரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமாகிய நல்லகண்ணு நேற்று முன்தினம் (22 ஆகஸ்ட் 2025), வீட்டில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், நூறு வயது தாண்டிய நிலையில், வயது மூப்பின் காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபுணர், இருதய நிபுணர், தீவிர சிகிச்சைப் பிரிவு றிபுணர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக தற்போது, அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
- உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச் சாலை மருத்துவமனையில் அவர் அனுமதி.
இலங்கையில் கடந்த 2022 ஜூலை முதல் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அதிபராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்கே (வயது 76). மேலும் 6 முறை பிரதமர் பதவி வகித்துள்ளார்.
அவர் அதிபராக இருந்தபோது தனது மனைவி மைத்ரிக்கு இங்கிலாந்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அரசு பணத்தில் பயணம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை கைவிலங்கிட்டு போலீசார் அழைத்துச் சென்றனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவை வருகிற 26-ந்தேதி வரை போலீஸ் காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் வெலிக்கடை சிறைச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ரணில் விக்ரமசிங்கேவுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச் சாலை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதை சிறைத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- தனித்துவமான நடிப்பு திறன் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் ராதிகா.
- கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராதிகா அனுமதி.
இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் ராதிகா. நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என்ற பன்முக அடையாளங்கள் கொண்டவர் ராதிகா. தனது தனித்துவமான நடிப்பு திறன் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடிகை ராதிகா நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் "டெங்கு" காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராதிகா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்னும் 5 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் இல்லம் திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- டிஎஸ்பி சுந்தரேசன் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே பணிக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
- லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள்.
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் கார் வாகனம் பறிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே பணிக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
அவரது அலுவலக வாகனத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வி.ஐ.பி. பாதுகாப்பு பணிக்கு மாற்றிவிட்டு பழுதடைந்த வாகனத்தை அவருக்கு கொடுத்ததாகவும் அந்த வாகனம் தனக்கு தேவையில்லை என்று ஒப்படைத்துவிட்டு பணிகளை கவனிக்க வீட்டில் இருந்து நடந்து வந்ததாகவும் வீடியோ வைரல் ஆனது.
இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள். எனது அலுவலக வாகனத்தை எடுத்துக்கொண்டு மனரீதியாக என்னை சித்ரவதை செய்கிறார்கள். நான் தன்னிச்சையாக பேட்டியளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்டு செய்யப்படுவேன் என்று தெரிந்துதான், இந்த பேட்டி அளிக்கிறேன் என்று கூறினார்.
மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி ஜியாவுல் ஹக் திருச்சி மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்ததையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெஞ்சு வலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுந்தரேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
- முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
"மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி கூறுகையில்," மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற என் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் பிரார்த்திக்கிறேன்" என கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- திருப்புவனம் அருகே காவலர்கள் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தார்.
- மருத்துவமனையில், நவீனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை திருப்புவனம் அருகே காவலர்கள் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அஜித் குமாரின் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில், நவீனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீசார் அடித்ததில் நவீனின் பாதத்தில் வலி உள்ளது என்றும் அதனால், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
- திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் சாமிநாதன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- அமைச்சர் சாமிநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் சாமிநாதன் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அமைச்சர் சாமிநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது.
- போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுக் கொண்டிருந்தபோது கெண்டையன்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது.
முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன் சென்ற கார், மீன் வியாபாரி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
காரில் பயணம் செய்த முன்னாள் எம்எல்ஏ ராசு, கார் ஓட்டுநர் ரமணி மற்றும் மீன் வியாபரி படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
- தயாளு அம்மாள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- தயாளு அம்மாளுக்கு வயிற்று வலி, வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் தயாளு அம்மாளுக்கு வயிற்று வலி, வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் சிகிச்சைக்குப்பிறகு அவர் வீடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில், தயாளு அம்மாளுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- கே.என். ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாளாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு.
- வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தகவல்.
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என். ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாளாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.
அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தகவல் வெளியானது.
சோதனைகள் முடிவடைந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நெஞ்சுவலி மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






