

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனையின்போது துரைமுருகனுக்கு ஏற்பட்ட உடல்நலம் பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.