search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hospitalized"

    கர்நாடக மாநிலம், சொகுசு ஓட்டலில் தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் காயங்களுடன் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகியுள்ளது. #Karnataka #CongressMLA #BengaluruResort #MLAAnandsingh
    பெங்களூரு:
       
    கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா கட்சி முயற்சிப்பதாக புகார் எழுந்தது.
     
    இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகேயுள்ள தனியார் சொகுசு ஓட்டலில் (ரெசார்ட்) தங்க வைக்கப்பட்டனர். பாரதீய ஜனதாவின் குதிரை பேரத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில்தான் இப்படி செய்திருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்திருந்தார்.

    நேற்று முன்தினம் இரவு, ரெசார்ட்டில் உள்ள ஒரு அறையில் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த் சிங், பீமா நாயக், கணேஷ் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

    பீமா நாயக், கணேஷ் ஆகியோர் ஆனந்த்சிங்கிடம், ‘நாங்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருந்த ரகசிய திட்டத்தை நீங்கள் தான் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் கூறிவிட்டீர்கள்’ என்று குற்றம்சாட்டியதாக தெரிகிறது. 

    இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கணேசும், பீமா நாயக்கும் சேர்ந்து தாக்கியதில் ஆனந்த் சிங் படுகாயம் அடைந்தார். பெங்களூருவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று நேற்று தகவல்கள் வெளியாகின.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டு, அடிதடியில் முடிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிகிச்சை பெறும் ஆனந்த் சிங்கை மந்திரி ஜமீர் அகமதுகான் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ரெசார்ட்டில் நண்பர்களுக்குள் சிறிய அளவில் தகராறு நடந்துள்ளது. பெரிய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. இதை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன’ என்றார்.

    மற்றொரு மந்திரியான டி.கே.சிவக்குமார், ‘எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ஊடகங்கள் தான் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன’ என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஆனந்த் சிங் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடபட்டுள்ளது.

    இதற்கிடையில், மருத்துவமனையில் வீங்கிய முகத்துடன் ஆனந்த் சிங் படுத்திருக்கும் புகைப்படம் சில ஊடகங்களில் வெளியாகி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்குள் மோதல் நடந்தது உண்மைதான் என்பதை நிரூபித்துள்ளது. #Karnataka #CongressMLA #BengaluruResort #MLAAnandsingh
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #Prabhanjan
    கடலூர்:

    புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.

    கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாதகாலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மதகடிப்பட்டில் உள்ள அதே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்றுள்ளார்.

    மேலும் தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். இவருக்கு வயது 75 ஆகும்.  #Prabhanjan
    ஒடிசா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி இளைஞரை குணப்படுத்த, அவரை தலைகீழாக தொங்கவிட்டு, சாமியார் ஒருவர் நெருப்பு மூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புவனேஸ்வர்:

    உலகின் பல இடங்களிலும், கடவுள் பெயரால் உருவாக்கப்படும் மூட நம்பிக்கைகளால் விளையும் துன்பங்கள் ஏராளம். ஒருவர் உடல்நலக் குறைவுற்றால் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லாமல், கோவிலுக்கும், சாமியார்களிடமும் அழைத்துச் செல்வதால் பலர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் மரணமும் அடைந்துள்ளனர்.

    அவ்வாறு மரணத்தின் விளிம்பு வரை சென்று மீட்கப்பட்ட ஒடிசா இளைஞர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒடிசா மாநிலத்தில் பாபனி சங்கர் நந்தா என்ற இளைஞர் உடல் ஊனமுற்று இருக்கிறார். இவரை குணப்படுத்தும் முயற்சியில் அவரது தாயார் கந்தமால் என்ற பகுதியில் உள்ள கோவிலை அனுகியுள்ளார்.

    அங்கு, இவரை தலைகீழாக தொங்கவிட்டு நெருப்பு மூட்டினால் உடல் ஊனம் குணமாகும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனை நம்பிய அவரது தாயார் நந்தாவை பலிகுடா எனும் கிராமத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நந்தாவின் எதிர்ப்பையும் மீறி, அவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு நெருப்பு மூட்டியுள்ளனர்.

    இதனால் படுகாயமடைந்த நந்தாவுக்கு, வீட்டிலேயே சிகிச்சை அளிக்க அந்த சாமியார் கூறியுள்ளார். ஆனால், மிகவும் மோசமான நிலையில் இருந்த நந்தாவை அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, மருத்துவமனை மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த சாமியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டு இருந்த நந்தா, மத நம்பிக்கை என்ற பெயரில் செய்யப்பட்ட இந்த மூட சடங்குகளினால் தற்போது தீக்காயங்களுடன் துன்புற்று வருகிறார்.
    பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #MannarMannan
    புதுச்சேரி:

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகனும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். 90 வயது நிரம்பிய இவர் முதுமை சார்ந்த நோய்களால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இன்று அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.



    தமிழறிஞரான மன்னர் மன்னன் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். புதுவை வானொலியில் பணியாற்றிய காலத்தில், தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் பல புதுமையான நாடகங்களை வழங்கியிருக்கிறார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவரது தமிழ்ப்பணியை கவுரவிக்கும் வகையில் புதுவை அரசின் கலைமாமணி விருது, தமிழ்மாமணி விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. #MannarMannan 
    ×