திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு- 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம்.மயக்கமடைந்த 3 மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு- 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
Published on

சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக புகார் வெளியாகியுள்ளது.

பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மயக்கமடைந்த 3 மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மேலும் 32 மாணவிகள் என மொத்தம் 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளியில் இருந்து மாணவர்களை வெளியேற்றப்பட்டதால், குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வாயு வெளியேறியதா ? அல்லது பள்ளியில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்து வாயு வெளியேறியதா ? என விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com