search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Power Star Srinivasan"

  அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் பரத் - பனுஸ்ரீ மேஹ்ரா - பிரேம்ஜி நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிம்பா' படத்தின் விமர்சனம். #Simba #SimbaReview #Bharath # BhanuSriMehra #Premgi
  வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பரத், பிரபல நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். போதைக்கு அடிமையான பரத்தின் தாத்தாவின் இறப்புக்கு பிறகு, பரத்தும் போதைக்கு அடிமையாகிறார். தனிவீட்டில் வசித்து வரும் இவர் யாருடனும் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை, தனி உலகத்தில் வாழ்ந்து வருகிறார்.

  இந்த நிலையில், பரத் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடியிறுக்கும் நாயகி பனுஸ்ரீ மேஹ்ரா, தனது நாயை பார்த்துக் கொள்ளும்படி விட்டுச் செல்கிறார். எப்போதும் போதையில் இருக்கும் பரத்துக்கு நாய், நாய் மாதிரி இல்லாமல் பிரேம்ஜியாக தெரிகிறது. இவர் பிரேம்ஜியுடன் பேசி நட்பாகிறார்.  பனுஸ்ரீ மேஹ்ராவும் அடிக்கடி பரத் வீட்டிற்கு வந்து செல்ல பரத் பனுஸ்ரீ மீது காதல் வயப்படுகிறார். தனது காதலுக்கு உதவும்படி பரத், பிரேம்ஜியிடம் கேட்கிறார். இதுஒருபுறம் இருக்க பனுஸ்ரீயுடன் ஒன்றாக பணிபுரியும் ரமணாவும் பனுஸ்ரீயை காதலிக்கிறார்.

  இதில் யார் காதல் வெற்றி பெற்றது? பரத்துக்கு பிரேம்ஜியாக தோன்றும் நாய் அவரது காதலுக்கு உதவியதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.  இதுவரை இல்லாத ஒரு வித்தாயசமான கதாபாத்திரத்தில் பரத் நடித்திருக்கிறார். போதை ஆசாமியாகவே படம் முழுக்க வந்து போதைக்காரர்களின் உலகத்தை காட்டிச் செல்கிறார். பனுஸ்ரீ மேஹ்ரா அலட்டல் இல்லாமல் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் தலைப்பாக சிம்பா கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்கள். காமெடியில் கலகலக்கியிருக்கும் பிரேம்ஜி, படத்தின் கதை ஓட்டத்திற்கு காரணமாகிறார். மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்கள்.

  போதைக்கு அடிமையான ஒருவரின் உலகம், அவரது பார்வை எப்படி இருக்கும் என்பதை வித்தியாசமான கண்ணோட்டத்தோடு கதையாக்கி இருக்கிறார் அரவிந்த் ஸ்ரீதர். படத்தில் நாயாக வரும் பிரேம்ஜியின் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளார். வித்தியாசமான முயற்சிக்காக இயக்குநருக்கு பாராட்டுக்கள். அச்சு விஜயனின் படத்தொகுப்பு படத்தை போதை உலகத்திற்கு கொண்டு செல்கிறது.  விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

  மொத்தத்தில் `சிம்பா' நன்றியுள்ளது. #Simba #SimbaReview #Bharath # BhanuSriMehra #Premgi

  அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் பரத் - பானு ஸ்ரீ மெஹ்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் `சிம்பா' படத்தின் முன்னோட்டம். #Simba #Bharath #BhanuSriMehra #PremgiAmaran
  மேஜிக் சேர் பிலிம்ஸ் சார்பில் கே.சிவனேஸ்வரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சிம்பா'.

  பரத் - பானு ஸ்ரீ மெஹ்ரா நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பிரேம்ஜி அமரன், பவர்ஸ்டார் சீனிவாசன், சுவாமிநாதன், சுவாதி தீகித் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

  இசை - விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு - சினு சித்தார்த், படத்தொகுப்பு - அச்சு விஜயன், கலை இயக்குநர் - வினோத் ராஜ்குமார் & அந்தோணி, சண்டைப்பயிற்சி - பில்லா ஜெகன், ஆடை வடிவமைப்பு - அசோக் குமார், தயாரிப்பாளர் - கே.சிவனேஸ்வரன், தயாரிப்பு நிறுவனம் - மேஜிக் சேர் பிலிம்ஸ், சினிரமா ஸ்டூடியோஸ், எழுத்து, இயக்கம் - அரவிந்த் ஸ்ரீதர்.  படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

  சிம்பா டிரைலர்:

  ஊட்டியில் கடத்தல்காரர்கள் எனக்கு சாப்பாடு தராமல் ஜட்டியோடு உட்கார வைத்தார்கள் என்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். #PowerStar #Srinivasan
  நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை பெங்களூருவைச் சேர்ந்த ஆலம் மற்றும் அவரின் கூட்டாளிகள் சென்னையிலிருந்து ஊட்டிக்கு கடந்த 5-ந்தேதி கடத்தினார்கள்.

  ஊட்டியில் பவர் ஸ்டாரின் மனைவி ஜூலியின் பெயரில் உள்ள வீட்டை எழுதித்தரும்படி பவர் ஸ்டார் சீனிவாசனையும், மனைவி ஜூலியையும் 4 நாட்கள் சிறைவைத்தனர். அவர்களிடமிருந்து தப்பிய பவர்ஸ்டார், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கடத்தல் கும்பலிடம் இருந்து ஜூலியை மீட்டு, ஆலம் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

  பவர் ஸ்டார் சீனிவாசன் இந்த சம்பவம் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

  ஆறு ஆண்டுகளுக்கு முன், பெங்களூருவைச் சேர்ந்த ஆலமிடம் ரூ.1.25 கோடி வாங்கினேன். அந்தப் பணத்தில் 35 லட்ச ரூபாய் திரும்பக் கொடுத்துவிட்டேன். மீதமுள்ள ரூ.90 லட்சத்தை திரும்பக் கொடுக்கப்பதாகக் கூறியிருந்தேன். அதுதொடர்பான வழக்கு, பெங்களூரு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

  இந்தச் சமயத்தில்தான், பிரித்தி என்ற சினிமா பி.ஆர்.ஓ என்னிடம் சினிமா வாய்ப்பு இருப்பதாக போனில் பேசினார். அதை நம்பி, கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் உள்ள ஹோட்டலுக்கு 5-ந்தேதி காலை 11 மணி அளவில் சென்றேன். 210 நம்பர் அறைக்கு நான் சென்றபோது, அங்கு செல்வின் தலைமையில் சிலர் இருந்தனர். அவர்கள்தான் என்னை மிரட்டினர். ஆலம் என்பவரிடம் நான் வாங்கிய பணத்தை உடனடியாகக் கொடுக்கும்படி அவர்கள் எனக்கு டார்ச்சர் கொடுத்தனர்.

  என்னுடைய பேன்ட், சட்டை மற்றும் இரண்டு செல்போன்களைப் பறித்தனர். ஜட்டியோடு உட்கார வைத்தனர். அன்றைக்கு முழுக்க எனக்கு சாப்பாடு தரவில்லை. 5-ந்தேதி மாலை ஒரு டீ மட்டும் வாங்கிக் கொடுத்தனர். பசிக்கிறது என்று கெஞ்சினேன். 6-ந்தேதி ஊட்டிக்கு காரில் கூட்டி சென்று ஆலத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் ஊட்டி ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு குடோனில் என்னை அடைத்து வைத்தனர்.

  அப்போதும்கூட எனக்கு சரியாக சாப்பாடு தரவில்லை. என்னை அடைத்து வைத்திருந்தபோது 5 பேர் காவலுக்கு இருந்தனர். அவர்களின் கைகளில் கத்திகள் இருந்தன. தப்பி ஓட முயன்றால் சுட்டுவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டினர்.  6-ந்தேதி காலையில் இரண்டு இட்லியும், இரவு இரண்டு சப்பாத்தியும் மட்டுமே கொடுத்தனர். சரியாக சாப்பாடு கொடுக்காமல் என்னைச் சித்ரவதை செய்தனர். அடிக்கவும் செய்தார்கள். என்னைக் கடத்திய தகவலை என் மனைவி ஜூலியிடம் தெரிவித்தனர். அவரையும் ஊட்டிக்கு வரவழைத்தனர். ஊட்டியில் அவருக்கும் கடும் டார்ச்சர் கொடுத்தனர். எங்களிடம் சில கையெழுத்துகளை வாங்கினர்.

  8-ந்தேதி என்னைக் கடத்திய தகவல் மீடியாக்களுக்கு தெரிந்துவிட்டது. இதனால் அவர்கள், என்னை விடுவித்தனர். அப்போதுகூட போலீசுக்குப் போனால், உன் குடும்பமே இருக்காது என மிரட்டி அனுப்பிவைத்தனர். ஊட்டியிலிருந்து சென்னைக்கு வந்ததும், நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறினேன். 10 ஆம் தேதி, போலீசார் மூலம் ஜூலியை மீட்டுவிட்டனர்”.

  இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.
  மர்மநபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் நேற்று வீடு திரும்பினார். #PowerStarSrinivasan
  பூந்தமல்லி:

  சென்னை அண்ணாநகர் எல்.பிளாக்கில் வசித்து வருபவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவரது மனைவி ஜூலி. இவர் கடந்த 6-ந் தேதி தனது கணவரை (பவர்ஸ்டார் சீனிவாசன்) காணவில்லை என்று அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.

  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, நிலம் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக பவர்ஸ்டார் சீனிவாசன் தனது மனைவியிடம் கூறாமல் ஊட்டி சென்றிருப்பதும், நிலத்தை பத்திரப்பதிவு செய்ய தனது மனைவி ஜூலியின் கையெழுத்து போட வேண்டி இருந்ததால் அவரையும் ஊட்டிக்கு வரும்படி அழைத்துள்ளதும் தெரியவந்தது.

  ஆனால் புகார் கொடுத்த ஜூலி, தனது கணவர் ஊட்டியில் இருப்பதை போலீசாரிடம் தெரிவிக்காமல் ஊட்டிக்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

  அதனை தொடர்ந்து பவர்ஸ்டார் சீனிவாசனை போலீசார் செல்போனில் தொடர்புகொண்டபோது, ஊட்டியில் உள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்து முடித்துவிட்டு சென்னை திரும்பி வந்து விடுவதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதற்கிடையே பவர்ஸ்டார் சீனிவாசன் மர்மநபர்களால் கடத்தப்பட்டதாக தகவல்கள் பரவின.  இந்த நிலையில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் நேற்று ஊட்டியில் இருந்து தனது மனைவியுடன் அண்ணாநகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். தான் சென்னை வந்துவிட்டது குறித்து அவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

  இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

  நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் காணாமல் போனதாக அவரது மனைவி புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் விசாரணை செய்தபோது நிலம் பத்திரப்பதிவு தொடர்பாக ஊட்டி சென்றதாக தெரிவித்தார். அவர் கடத்தப்பட்டதாக புகார்கள் எதும் வரவில்லை. அவரும் தான் கடத்தப்பட்டதாக கூறவில்லை.

  தற்போது பவர்ஸ்டார் வீட்டிற்கு திரும்ப வந்துவிட்டதால் அவரது மனைவி கொடுத்த புகாரின் மீதான நடவடிக்கை முடித்து வைக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

  ஆனாலும் பவர்ஸ்டார் சீனிவாசன், தனது மனைவியிடமே கூறாமல் ஊட்டிக்கு சென்று நிலம் பத்திரப்பதிவு செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பான முழு தகவல்களை அவர் எங்களிடம் தெரிவித்தால் மட்டுமே என்ன நடந்தது? என்பது தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். #PowerStarSrinivasan
  ×