என் மலர்

  நீங்கள் தேடியது "actor rajinikanth"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். #ARRahman #Rajinikanth #SoundaryaRajinikanth
  சென்னை:

  நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.

  இதற்கிடையே, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.  இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

  இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சவுந்தர்யா ரஜினிகாந்தின் வரவேற்பு புகைப்படத்தை பதிவிட்டு, திருமண வாழ்த்துக்க்ள் என குறிப்பிட்டுள்ளார். #ARRahman #Rajinikanth #SoundaryaRajinikanth 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajinikanth #RajiniMeetsPalanisamy
  சென்னை:

  நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

  அவ்வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.  இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்றார். அப்போது அவர் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். #Rajinikanth #RajiniMeetsPalanisamy
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் ரஜினிகாந்த் இன்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajinikanth #RajiniMeetsStalin
  சென்னை:

  நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் வரும் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.  திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

  அவ்வகையில், சென்னை அண்ணாநகரில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.   இந்நிலையில், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்றார். அப்போது, தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழ் வழங்கி திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். #Rajinikanth #RajiniMeetsStalin
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த 23-ந்தேதி வெளியிட்ட அறிக்கை கசப்பாக இருந்தாலும் உண்மையை புரிந்து கொண்டதற்கு நன்றி என ரசிர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #rajinikanth #rajinikanthfans #dmk
  சென்னை:

  ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்காக அவரது ரசிகர் மன்றத்தை ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றினார். இந்த மன்றம் மூலம் புதிய கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நிர்வாகிகள் சிலர் நீக்கப்பட்டனர். இதனால் ரசிகர்களிடம் அதிருப்தி ஏற்பட்டது. ரஜினியிடம் சொல்லாமல் நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

  இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரஜினி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். அதில், ‘குடும்பத்தை கவனிக்காமல் மன்ற பணிக்கு வரக்கூடாது. வெறும் ரசிகர் மன்றத்தை வைத்துக் கொண்டு நாம் நினைத்ததை சாதிக்க முடியாது. ரசிகர் மன்றத்தில் இருந்தால் மக்கள் மன்றத்தில் பதவி பெறவோ, அரசியலில் ஈடுபடவோ தகுதி பெற முடியாது’ என்று கூறி இருந்தார்.

  ரஜினியின் இந்த அறிவுரைகளை விமர்சனம் செய்யும் வகையில் தி.மு.க. நாளிதழான முரசொலியில், ரசிகர்கள் பதில் சொல்வதுபோல ரஜினியை கடுமையாக சாடியிருந்தது.

  இதற்கிடையில் இன்று ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரஜினி காந்த் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘நான் கடந்த 23-ந்தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லி இருந்தேன். அது கசப்பாக இருந்தாலும் அதில் உள்ள உண்மையையும் நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

  உங்களை போன்ற ரசிகர்களை அடைந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். ரசிகர்களையும் என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்’’ என குறிப்பிட்டுள்ளார். #rajinikanth  # rajinikanthfans  #dmk
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை நகரின் புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று அதிகாலை வெளியானது. #Kaala #ActorRajinikanth #SpecialShow
  சென்னை:

  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் இன்று ரிலீசாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். 

  காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.  இந்நிலையில், காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் இன்று அதிகாலை வெளியானது. திரையரங்குகளுக்கு முன்பிருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர்.

  தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. சென்னை நகர் உள்பட உலகம்  முழுவதிலும் காலை 7 மணிக்கு முதல் காட்சி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Kaala #ActorRajinikanth #SpecialShow
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த கலெக்டர் அலுவலகத்தை நடிகர் ரஜினிகாந்த் காரில் இருந்தவாறு பார்வையிட்டார். #ThoothukudiFiring #Rajinikanth
  தூத்துக்குடி:

  தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை பார்பதற்காக நடிகர் ரஜினி இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். செல்லும் வழியில் கலெக்டர் அலுவலகம் வரும் போது அருகில் இருந்தவர்கள் ரஜினியிடம் தெரிவித்தனர். அப்போது காரில் இருந்தவாறே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

  புதுக்கோட்டை, வாகைகுளம், கோரம்பள்ளம், உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானவர்கள் நின்று அவரை வரவேற்றனர். இதை தொடர்ந்து வ.உ.சி.கல்லூரி முதல் வி.வி.டி.சிக்னல் வரை சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ரசிகர் கூட்டத்தை பார்த்ததும் ரஜினி எழுந்து நின்று ரசிகர்களை பார்த்து கும்பிட்டவாறே சென்றார்.

  பின்னர் வி.வி.டி.சிக்னலை தாண்டி பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. பின்னர் காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் சென்ற ரஜினி சிகிச்சை பெற்று வரும் ஓவ்வொருவரிடமும் தனித்தனியாக சென்று நலம் விசாரித்தார்.  #ThoothukudiFiring #Rajinikanth
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு மஜத கட்சி தலைவர் குமாரசாமி காரசாரமாக பதில் அளித்துள்ளார். #Kumaraswamy #CauveryIssue #Rajinikanth
  பெங்களூரு:

  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளவாறு கர்நாடகத்தில் புதிதாக அமையவுள்ள அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தி இருந்தார்.

  இதுதொடர்பாக பெங்களூரு நகரில் மஜத கட்சி தலைவர் குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், கர்நாடக மாநிலத்தில் தேவையான தண்ணீர் இருந்தால் தமிழகத்துக்கு தரமுடியும். ரஜினிகாந்த் கர்நாடகத்துக்கு வந்து இங்குள்ள அணைகளை பார்க்க வேண்டும். எங்கள் விவசாயிகளின் நிலைமைகளை காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  ஆனால், இங்கு வந்து அணைகளை பார்வையிட்டால் அவர் தனது நிலையை மாற்றிக் கொள்வார் என நினைக்கிறேன். அதற்கு பிறகும் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டும் என கேட்டால் அதுதொடர்பாக பேசலாம் என தெரிவித்துள்ளார். #Kumaraswamy #CauveryIssue #Rajinikanth
  ×