என் மலர்
நீங்கள் தேடியது "உடல்நலக் குறைவு"
- ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
- உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச் சாலை மருத்துவமனையில் அவர் அனுமதி.
இலங்கையில் கடந்த 2022 ஜூலை முதல் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அதிபராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்கே (வயது 76). மேலும் 6 முறை பிரதமர் பதவி வகித்துள்ளார்.
அவர் அதிபராக இருந்தபோது தனது மனைவி மைத்ரிக்கு இங்கிலாந்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அரசு பணத்தில் பயணம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை கைவிலங்கிட்டு போலீசார் அழைத்துச் சென்றனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவை வருகிற 26-ந்தேதி வரை போலீஸ் காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் வெலிக்கடை சிறைச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ரணில் விக்ரமசிங்கேவுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச் சாலை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதை சிறைத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- கடந்த 40 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
- மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
கடலூர் அடுத்த நல்லாத்தூரை சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி வினோதா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருந்து வருகின்றது. இந்நிலையில் வினோதா மீண்டும் கர்ப்பமான நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் வினோதா தனது தந்தை வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று இரவு வினோதவிற்கு திடீரென்று உடல்நிலை பாதிப்படைந்தது. இதனை தொடர்ந்து கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வினோதாவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- செய்தியாளர் சந்திப்பில் குமாரசாமி பங்கேற்றபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
- குமாரசாமியை அவரது மகன் நிகில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மத்திய அமைச்சரும், ஜேடிஎஸ் தலைவருமான எச்.டி.குமாரசாமிக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எடியூரப்பா ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பில் குமாரசாமி பங்கேற்றபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, குமாரசாமியை அவரது மகன் நிகில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
குமாரசாமிக்கு ஏற்கனவே இதய பிரச்சனை இருப்பதாகவும், அவருக்கு 2 முதல் 3 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






