மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு- மூக்கில் ரத்தம் கொட்டியதால் பரபரப்பு

செய்தியாளர் சந்திப்பில் குமாரசாமி பங்கேற்றபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.குமாரசாமியை அவரது மகன் நிகில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு- மூக்கில் ரத்தம் கொட்டியதால் பரபரப்பு
Published on: 

மத்திய அமைச்சரும், ஜேடிஎஸ் தலைவருமான எச்.டி.குமாரசாமிக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எடியூரப்பா ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பில் குமாரசாமி பங்கேற்றபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, குமாரசாமியை அவரது மகன் நிகில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

குமாரசாமிக்கு ஏற்கனவே இதய பிரச்சனை இருப்பதாகவும், அவருக்கு 2 முதல் 3 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com