கடலூர் அருகே உடல்நலக் குறைவால் இளம்பெண் சாவு

கடந்த 40 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் அருகே உடல்நலக் குறைவால் இளம்பெண் சாவு
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த நல்லாத்தூரை சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி வினோதா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருந்து வருகின்றது. இந்நிலையில் வினோதா மீண்டும் கர்ப்பமான நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் வினோதா தனது தந்தை வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று இரவு வினோதவிற்கு திடீரென்று உடல்நிலை பாதிப்படைந்தது. இதனை தொடர்ந்து கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வினோதாவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com