search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Illness"

    • கடந்த 4 நாட்களாக கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
    • தகவலை கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலின் அசுவ பூஜைக்காக குதிரை வளர்க்கப்படுகிறது. ராஜா என்ற பெயரில் கடந்த 4 ஆண்டுகளாக இங்கிருந்த குதிரைக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டு கடந்த 4 நாட்களாக கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்த குதிரை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது. கடந்த 4 வருடங்களாக தில்லை நடராஜரின் இறைபணியில் ஈடுபட்ட குதிரை ராஜாவின் ஆன்மா சாந்தி அடையும் வகையில், மருத்துவ சான்று பெற்று பக்தர்களும் தீட்சிதர்களும் மலர் அஞ்சலி செலுத்தி சடங்குகள் செய்து மயானத்தில் அடக்கம் செய்தனர். இத்தகவலை கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

    • வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி இன்று காலை உயிரிழந்துள்ளது.
    • புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது.

    வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி இன்று காலை உயிரிழந்துள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் வங்கப்புலி விஜயன் உயிரிழந்ததாக உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும், விஜயன் என்கிற 21 வயது ஆண் வங்கப்புலியானது கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உணவு உட்கொள்ளுதலைக் குறைத்துக் கொண்டது. இதன் காரணமாக படிப்படியாக அதன் உடல்நிலை சரியில்லாமல் போனது.

    புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன் வங்கப்புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று ஆண் புலி உயிரிழந்துள்ளது.

    • விஜயன் என்கிற ஆண் வங்கப்புலிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.
    • மருத்துவ குழுவினரால் வங்கப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பூங்காவில் உள்ள 21 வயது உடைய விஜயன் என்கிற ஆண் வங்கப்புலிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அது உணவு உண்பதை குறைத்து சோர்வாக காணப்படுகிறது.

    இதை த்தொடர்ந்து வங்கப்பு புலியின் உடல்நிலையை பூங்காவில் உள்ள மருத்துவ குழு வினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பூங்காவில் பராமரிக்கப் பட்டு வரும், விஜயன் என்கிற 21 வயது ஆண் வங்கப்புலியானது கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உணவு உட்கொள்ளு தலைக் குறைத்துக் கொண்டது. இதன் காரணமாக படிப்படியாக அதன் உடல்நிலை சரியில்லாமல் போனது. புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன் வங்கப்புலிக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. இருப்பினும் வயிறு இறக்கம் ஏற்பட்டு சோர்வாக காணப்படுகிறது. மேலும் பூங்கா மருத்துவ குழுவினரால் வங்கப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • உடலும், மனமும் தரும் தொந்தரவுகள் எல்லாமே நோய்தான்.
    • மனதில் ஏற்படும் பாதிப்பும் தன் விளைவுகளை உருவாக்கும்.

    நம்முடைய வழக்கமான வேலைகளைச் செய்யவிடாமல் உடலும் மனமும் தரும் தொந்தரவுகள் எல்லாமே நமக்கு நோய்தான். எல்லோருக்குமே தங்களுடைய அன்றாட வழக்கங்கள் பாதிக்கப்படும்போது டென்ஷன் வந்துவிடுகிறது.

    உடனே மருத்துவரைப் பார்த்து மருந்துகளைச் சாப்பிட்டு, ஊசிகளைப் போட்டு உடனே உடல் குணமாகி, உடனே நம்முடைய வழக்கமான வேலைகளுக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதுதான் நம்மில் பெரும்பாலானோருடைய விருப்பமாக இருக்கிறது.

    நோய் என்றால் நம்முடைய மன, உடல் இயக்கத்தில் ஏற்படுகிற மாறுதல். உதாரணத்துக்குப் புகை, தூசு, மாசு மிகுந்த இடங்களில் நாம் இருக்க நேரிடும்போது, நம்முடைய உடலுக்கு ஒவ்வாத மேற்கண்ட விஷயங்களால் சுவாச பாதையில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படுகிறது.

    நுரையீரலில் இவை சேர்ந்துவிடாமல் இருக்க, நுரையீரல் ஒரு கணம் தன் முழு சக்தியையும் திரட்டி தும்மலாக வெளியேற்றுகிறது. அதையும் மீறிச் சுவாசப் பாதையில் நுழையும் ஒவ்வாத அந்நியப் பொருட்களை வெளியேற்ற சளிச் சவ்வுகளைத் தூண்டிவிட்டு அதிகமான சளிநீரைச் சுரக்கச் செய்து மூக்கின் வழியாக வெளியேற்றுகிறது

    இதன்மூலம் உடலுக்குள் அந்நிய விஷப்பொருள் நுழைவதைத் தடுக்க தானாகவே உடல் முயற்சிக்கிறது. அநேகமாக ஜலதோஷம் பிடித்த எல்லோருக்கும், இந்த உணர்வு வரும். இது ஆரம்பக்கட்டம். சுவாச உறுப்புகளால் சமாளிக்க முடியாத அளவுக்கு அந்நியப் பொருள் உள்ளே நுழைந்துவிட்டால், அதை அந்தந்த இடத்திலேயே சளிநீரானது சிறைப்படுத்துகிறது. பின்பு இருமலை உண்டு பண்ணுகிறது. இருமலுடன் சளி வெளியேறுகிறது. கூடவே சிறைபட்ட அந்த பொருளும். அதாவது அந்த தூசு, மாசு, எல்லாமும் வெளியேறுகின்றன.

    அதேபோல மனதில் ஏற்படும் பாதிப்பும் தன் விளைவுகளை உருவாக்கும். உதாரணத்துக்கு அலுவலகத்தில் மேல் அதிகாரியிடம் நியாயமில்லாத காரணத்துக்காக, ஒருவர் வாங்கும் ஏச்சு மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனாலும் நலம் பாதித்து உடல் நடுக்கத்தையும் நரம்புத்தளர்ச்சியையும் ஏற்படுத்தலாம். மனரீதியான பாதிப்பால் வரும் நோய்களுக்கு இதுபோல் பல உதாரணங்களை கூறமுடியும்.

    ஆக நோய் என்பது ஒருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்படைவது ஆகும். மொத்தத்தில் நோய் என்பது ஒருவரது இயல்பான சுபாவத்தில் ஏற்படுகிற மாற்றங்களின் தொகுப்பு என மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

    • நோய் பாதிப்பால் டிரைவர்-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சுந்தர்ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது62). இவருக்கு மதுபழக்கம் இருந்தது. கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் முத்துராஜ் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி(23), டிரைவர். இவருக்கு மதுபழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. நோய் பாதிப்பால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 40 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
    • மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நல்லாத்தூரை சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி வினோதா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருந்து வருகின்றது. இந்நிலையில் வினோதா மீண்டும் கர்ப்பமான நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் வினோதா தனது தந்தை வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று இரவு வினோதவிற்கு திடீரென்று உடல்நிலை பாதிப்படைந்தது. இதனை தொடர்ந்து கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வினோதாவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர்.
    • தொடர் சிகிச்சை பெற்று வந்த முத்து நேற்று மாலை இறந்துவிட்டார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதில் ஒரு சிலர் வீடுகளில் படுத்தபடுக்கையில் தொடர் சிகிச்சையிலும், மருத்துவ கண்காணப்பிலும் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த முத்து (வயது 59). இவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது குடும்பத்தார், அவரை மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்த சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த முத்து நேற்று மாலை இறந்துவிட்டார். இது குறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே, விஷ சாராயம் குடித்ததால் தான் முத்து இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தார் புகார் அளித்தனர். இதன் பேரில் மரக்காணம் வருவாய்த்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் எதனால் இறந்தார் என தெரிய வரும் என்று போலீசார் கூறி, அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களை அனுப்பி வைத்தனர்.

    • மனோகரன் உடல் நலகுறைவால் அவதிப்பட்டு வந்தார்.
    • வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் விஷ மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம், செட்டிப்புலம், சிறையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 46) விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை.

    இவர் உடல் நலகுறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த மனோகரன் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் விஷ மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கரியாப்பட்டி னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இவர் நோய் கொடுமை காரணமாக கடந்த 9-ந் தேதி தூக்குபோட்டார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராணி இன்று காலை இறந்தார்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே மனலூர்பகுதியை சேர்ந்தவர் ராமு. அவரது மனைவி செல்வராணி. இவர் நோய் கொடுமை காரணமாக கடந்த 9-ந் தேதி தூக்குபோட்டார். உடனே உறவினர்கள் அவரை காப்பாற்றி சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராணி இன்று காலை இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் விசாரிக்கிரார்கள்.

    • மாணவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
    • ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    சீர்காழி,:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் சேத்திருப்பு எஸ்.எம்.எஸ். நடுநிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.

    ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    விழாவினை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் தொடக்கி வைத்தார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் பாலு முன்னிலை வகித்தார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் பாலு கூறுகையில், ஊட்டச்சத்து முக்கியத்துவத்தை மாணவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    விழாவில் அங்கன்வாடி பணியாளர்கள் ராசாத்தி தீபா, விஜயா, விஜயலட்சுமி, பிரேமா மற்றும் அங்கன்வாடி உதவியாளர் அஞ்சம்மாள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    மேலும் விழாவினை ஆசிரியர் சந்திரன் கணேசன் ராஜேஷ்குமார் ஏற்பாடு செய்தனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி விசாரணை நடத்தி வருகிறார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். அவரது மனைவி சாந்தி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இன்று காலை இறந்தார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி விசாரணை நடத்தி வருகிறார்.

    • விழுப்புரம் அருகே பெற்றோருக்கு உடல் நலக்குறைவால் மகன் தற்கொலை செய்துகொண்டார்.
    • மனமுடைந்த சூர்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் சூர்யா (வயது 19). ஐ.டி.ஐ. முடித்துள்ளார். ஆனால் இவரது பெற்றோருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சூர்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×