என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "discomforts"

    • குழந்தைகள் அழும்போது பெற்றோர்கள் பலரும் நினைப்பது, எப்படியாவது குழந்தையை தூங்க வைத்துவிடவேண்டும் என்பதுதான்.
    • மென்மையான இசை, ஹம்மிங் மற்றும் பாடல் போன்ற அமைதியான ஒலிகள் குழந்தையை அமைதிப்படுத்த உதவும்.

    பெற்றோர்கள் குழந்தை அழும்போது குழந்தையை சமாதானப்படுத்த, எதற்காக அழுததோ, அதிலிருந்து கவனத்தை திசைதிருப்ப பல முயற்சிகளை மேற்கொள்வர். சிலநேரங்களில் இந்த செயல் வெற்றியடையும். ஆனால் சிலநேரங்களில் என்ன செய்தாலும் குழந்தைகளின் அழுகையை நிறுத்தமுடியாது. அப்போது பெற்றோர்கள் பலரும் நினைப்பது, எப்படியாவது குழந்தையை தூங்க வைத்துவிடவேண்டும் என்பதுதான். பகலிலேயே இப்படித்தான் நடக்கும். அப்போது இரவில் குழந்தைகள் அழுவதை நினைத்துப் பாருங்கள். சிலநேரங்களில் இரவில் திடீரென குழந்தைகள் அழ ஆரம்பிப்பார்கள். இரவில் திடீரென குழந்தை அழுவதற்கான காரணங்கள் பலருக்கும் தெரியாது. இதற்கு சில பொதுவான காரணங்கள் சில உள்ளன. அதுகுறித்து பார்ப்போம்.

    பசி

    இளம் குழந்தைகளின் வயிறு சிறியதாக இருப்பதால் அடிக்கடி உணவளிக்க வேண்டும். உணவளிக்கும் இடைவெளி மாறலாம் என்றாலும்,  ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் ஒருமுறை குழந்தைக்கு பால் அல்லது திரவ உணவுகளை கொடுக்கவேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் பகலில் எழுந்திருப்பதைப் போலவே இரவில் அடிக்கடி பசியில் எழுந்திருப்பார்கள். குழந்தைகளின் தூக்கமுறை பகல், இரவு என பெரிய வித்தியாசத்தை கொண்டிருக்காது. முதல் மூன்றுமாதம் வரை குழந்தைகள் அதிகநேரம் தூங்குவார்கள். 

    பல் முளைப்பு

    குழந்தைகள் அழ மற்றொரு காரணமாக இருப்பது பல் முளைப்பது. பொதுவாக குழந்தைகளுக்கு 6 மாத வயதில் இருந்து பல் முளைக்கத் தொடங்கும். இது பொதுவானது. ஒவ்வொரு குழந்தைக்கும் பல்முளைக்கும் காலம் மாறுபடும். பல் முளைப்பது குழந்தைக்கு வலியை கொடுக்கும். மேலும் பல் முளைப்பது குழந்தைக்கு காய்ச்சலை ஏற்படுத்தும். அந்த காலக்கட்டத்தில் குழந்தைகள் அழுவார்கள். அப்போது காய்ச்சலுக்கான மருந்து கொடுக்கலாம். அல்லது குழந்தையில் ஈறில் சுத்ததான விரலால் மெதுவாக தேய்ப்பதன் மூலம் குழந்தையை ஆற்றலாம். 

    வயிற்றுவலி

    குழந்தை ஆரோக்கியமாக இருந்தும், இரவில் காரணமே இல்லாமல், ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கும் மேலாகவும், வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது அழுகிறதென்றால், அவர்களுக்கு வயிற்று வலி இருக்கலாம். 5 குழந்தைகளில் 1 குழந்தையை வயிற்று வலி பாதிக்கலாம். இது ஆரம்பகாலத்தில் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனைதான். குழந்தைக்கு 3 முதல் 4 மாதங்கள் ஆகும்போது இந்தப் பிரச்சினை சரியாகிவிடும். அப்போதும் சரியாகவில்லை என்றால் மருத்துவரை அணுகலாம். 

    மலச்சிக்கல்

    மலச்சிக்கல் இருந்தாலும் குழந்தைகள் அழுவார்கள். தாய்ப்பால் இல்லாமல் ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க, பரிந்துரைக்கப்பட்டபடி சரியான அளவு ஃபார்முலா பவுடர் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும். வேறு ஏதேனும் காரணங்களால் மலச்சிக்கல் ஏற்பட்டால்  மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். 


    2 முதல் 3 மாதக்குழந்தைகளுக்கு இரவில் அடிக்கடி பசி எடுக்கும்

    குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் பொதுவான காரணிகள்;

    • மிக விரைவாகவோ அல்லது அதிகமாகவோ பால் குடிப்பது குழந்தைக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். அதனால் குழந்தைகள் அதிகமாக பால் குடிக்க கட்டாயப்படுத்தாதீர்கள்.
    • இரண்டாவது தாய்ப்பால் கொடுக்கும்போது அவர்களை எப்படி வைத்து பால் கொடுக்கிறீர்கள் என்பது முக்கியம். அதற்கான முறையை பின்பற்றி அதற்கு தகுந்தாற்போல பால்கொடுக்கவேண்டும்.
    • குழந்தையை அசௌகரியப்படுத்தும் மற்றொரு காரணி ஈரத்துணி. குழந்தைகள் சிறுநீர் கழித்ததை கவனிக்காமல் இருக்கும்போது அந்த ஈரம் அவர்களை எரிச்சலடைய செய்யும்.
    • குழந்தைகள் அதிக சூடாகவோ அல்லது அதிக குளிராகவோ உணர்ந்தால் அழக்கூடும். மேலும் குழந்தையின் உடைகள் மிகவும் இறுக்கமாகவும், சங்கடமாகவும் இருந்தாலும் அழுவார்கள். 

    மேற்கூறியவைகளை கருத்திற்கொண்டு குழந்தையை கவனித்துப் பாருங்கள். இவையெல்லாம் பொதுவான காரணங்கள்தான். அப்படி இந்த காரணங்கள் எதுவும் இல்லையென்றால் மருத்துவரை அணுகுங்கள். 

    • குழந்தைகளின் அழுகைக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன.
    • குழந்தைகளுக்கு வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுவது பசி தான். இது பெரும்பாலும் சரியாக இருந்தாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இது உண்மையாக இருக்காது. குழந்தைகள் அழுவதற்கு உளவில் ரீதியாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றது.

    பசிக்கு அடுத்தபடியாக குழந்தைகள் பெற்றோரை அழைக்கவே அதிகமான சந்தர்ப்பங்களில் அழுகின்றன. குழந்தைகளால் தனக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல முடியாது. குழந்தைகளுக்கு ஏற்படும் எல்லா அசௌகரியங்களுக்கும் ஒரே விளக்கம் அழுகையாக தான் இருக்கும். இதனை சாதாரணமாக நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் குழந்தைகளின் உளவியல் பற்றிய அடிப்படை அம்சங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    குழந்தைகளின் அழுகைக்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாகவும் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க குழந்தைகளின் உளவியல் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

    பொதுவாக பசியை தவிர்த்து குழந்தைகள் அழுவதற்கு பல நேரங்களில் குழந்தைகள் இறுக்கமான ஆடைகளை அணிந்திருப்பதால் அழ ஆரம்பிக்கிறார்கள். அதுமட்டுமன்றி, அவர்கள் இதனை சங்கடமாகவும் உணர்கிறார்கள். எனவே, குழந்தைகளுக்கு எப்போதுமே தளர்வான பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது அவர்களை சவுகரியமாக வைத்திருக்க துணைப்புரியும்.

    தாய் எதை சாப்பிட்டாலும், குழந்தைக்கு பால் கொடுப்பதன் மூலம் அது குழந்தைகளின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது.

    மேலும் வறுத்த மற்றும் காரமான உணவுகளை தாய் அதிகமாக சாப்பிட்டால் அதன் தாக்கம் குழந்தைகளை பெரிதும் பாதிக்கும். இதனால் தான் குழந்தைகள் அழ தொடங்குகிறார்கள். உதாரணமாக, வயிற்று வலி அல்லது வாயு பிரச்சனை போன்றவை ஏற்படும்.

    பல நேரங்களில், தெரிந்தோ தெரியாமலோ, தாய் குழந்தைக்கு அதிக பால் கொடுப்பதுண்டு. அதேசமயம், சில சமயங்களில் அவசர அவசரமாக குழந்தைகளுக்கு உணவளிப்பதும் அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் குழந்தைகள் அழுவதுண்டு.

    மேலும் சிறு குழந்தைகளின் எலும்புகள் மிகவும் மென்மையானதாக இருக்கும். குழந்தைகளை பெற்றோர்கள் கையாளும் போது ஏற்படும் கவனக்குறைவால் அவர்களின் எலும்புகள் பாதிப்படையும் அபாயம் உள்ளது.

    ஒரு குழந்தையின் எலும்பு அதன் இடத்தில் இருந்து நழுவினால், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும். அதனால் குழந்தைகளை கையாளும் போது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

    ஒரு குழந்தை தினமும் மாலையில் ஒரே நேரத்தில் அழுதால், அவர் கோலிக் நோயால் பாதிக்கப் பட்டிருக்கலாம். இந்த நோயினால் குழந்தைகளுக்கு வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலியை அனுபவிக்கிறார்கள்.

    அதனால் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுது கொண்டிருக் கின்றார்கள். பெரும்பாலும் குழந்தைகள் மூன்று மாதங்களுக்கு இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயில், குழந்தைகள் பல மணி நேரம் அழுவார்கள். அதனை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

    ×