என் மலர்
நீங்கள் தேடியது "Crying"
- குழந்தைகள் அழும்போது பெற்றோர்கள் பலரும் நினைப்பது, எப்படியாவது குழந்தையை தூங்க வைத்துவிடவேண்டும் என்பதுதான்.
- மென்மையான இசை, ஹம்மிங் மற்றும் பாடல் போன்ற அமைதியான ஒலிகள் குழந்தையை அமைதிப்படுத்த உதவும்.
பெற்றோர்கள் குழந்தை அழும்போது குழந்தையை சமாதானப்படுத்த, எதற்காக அழுததோ, அதிலிருந்து கவனத்தை திசைதிருப்ப பல முயற்சிகளை மேற்கொள்வர். சிலநேரங்களில் இந்த செயல் வெற்றியடையும். ஆனால் சிலநேரங்களில் என்ன செய்தாலும் குழந்தைகளின் அழுகையை நிறுத்தமுடியாது. அப்போது பெற்றோர்கள் பலரும் நினைப்பது, எப்படியாவது குழந்தையை தூங்க வைத்துவிடவேண்டும் என்பதுதான். பகலிலேயே இப்படித்தான் நடக்கும். அப்போது இரவில் குழந்தைகள் அழுவதை நினைத்துப் பாருங்கள். சிலநேரங்களில் இரவில் திடீரென குழந்தைகள் அழ ஆரம்பிப்பார்கள். இரவில் திடீரென குழந்தை அழுவதற்கான காரணங்கள் பலருக்கும் தெரியாது. இதற்கு சில பொதுவான காரணங்கள் சில உள்ளன. அதுகுறித்து பார்ப்போம்.
பசி
இளம் குழந்தைகளின் வயிறு சிறியதாக இருப்பதால் அடிக்கடி உணவளிக்க வேண்டும். உணவளிக்கும் இடைவெளி மாறலாம் என்றாலும், ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் ஒருமுறை குழந்தைக்கு பால் அல்லது திரவ உணவுகளை கொடுக்கவேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் பகலில் எழுந்திருப்பதைப் போலவே இரவில் அடிக்கடி பசியில் எழுந்திருப்பார்கள். குழந்தைகளின் தூக்கமுறை பகல், இரவு என பெரிய வித்தியாசத்தை கொண்டிருக்காது. முதல் மூன்றுமாதம் வரை குழந்தைகள் அதிகநேரம் தூங்குவார்கள்.
பல் முளைப்பு
குழந்தைகள் அழ மற்றொரு காரணமாக இருப்பது பல் முளைப்பது. பொதுவாக குழந்தைகளுக்கு 6 மாத வயதில் இருந்து பல் முளைக்கத் தொடங்கும். இது பொதுவானது. ஒவ்வொரு குழந்தைக்கும் பல்முளைக்கும் காலம் மாறுபடும். பல் முளைப்பது குழந்தைக்கு வலியை கொடுக்கும். மேலும் பல் முளைப்பது குழந்தைக்கு காய்ச்சலை ஏற்படுத்தும். அந்த காலக்கட்டத்தில் குழந்தைகள் அழுவார்கள். அப்போது காய்ச்சலுக்கான மருந்து கொடுக்கலாம். அல்லது குழந்தையில் ஈறில் சுத்ததான விரலால் மெதுவாக தேய்ப்பதன் மூலம் குழந்தையை ஆற்றலாம்.
வயிற்றுவலி
குழந்தை ஆரோக்கியமாக இருந்தும், இரவில் காரணமே இல்லாமல், ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கும் மேலாகவும், வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது அழுகிறதென்றால், அவர்களுக்கு வயிற்று வலி இருக்கலாம். 5 குழந்தைகளில் 1 குழந்தையை வயிற்று வலி பாதிக்கலாம். இது ஆரம்பகாலத்தில் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனைதான். குழந்தைக்கு 3 முதல் 4 மாதங்கள் ஆகும்போது இந்தப் பிரச்சினை சரியாகிவிடும். அப்போதும் சரியாகவில்லை என்றால் மருத்துவரை அணுகலாம்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் இருந்தாலும் குழந்தைகள் அழுவார்கள். தாய்ப்பால் இல்லாமல் ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க, பரிந்துரைக்கப்பட்டபடி சரியான அளவு ஃபார்முலா பவுடர் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும். வேறு ஏதேனும் காரணங்களால் மலச்சிக்கல் ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.

2 முதல் 3 மாதக்குழந்தைகளுக்கு இரவில் அடிக்கடி பசி எடுக்கும்
குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் பொதுவான காரணிகள்;
- மிக விரைவாகவோ அல்லது அதிகமாகவோ பால் குடிப்பது குழந்தைக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். அதனால் குழந்தைகள் அதிகமாக பால் குடிக்க கட்டாயப்படுத்தாதீர்கள்.
- இரண்டாவது தாய்ப்பால் கொடுக்கும்போது அவர்களை எப்படி வைத்து பால் கொடுக்கிறீர்கள் என்பது முக்கியம். அதற்கான முறையை பின்பற்றி அதற்கு தகுந்தாற்போல பால்கொடுக்கவேண்டும்.
- குழந்தையை அசௌகரியப்படுத்தும் மற்றொரு காரணி ஈரத்துணி. குழந்தைகள் சிறுநீர் கழித்ததை கவனிக்காமல் இருக்கும்போது அந்த ஈரம் அவர்களை எரிச்சலடைய செய்யும்.
- குழந்தைகள் அதிக சூடாகவோ அல்லது அதிக குளிராகவோ உணர்ந்தால் அழக்கூடும். மேலும் குழந்தையின் உடைகள் மிகவும் இறுக்கமாகவும், சங்கடமாகவும் இருந்தாலும் அழுவார்கள்.
மேற்கூறியவைகளை கருத்திற்கொண்டு குழந்தையை கவனித்துப் பாருங்கள். இவையெல்லாம் பொதுவான காரணங்கள்தான். அப்படி இந்த காரணங்கள் எதுவும் இல்லையென்றால் மருத்துவரை அணுகுங்கள்.
- கைக்குழந்தையைப் பொறுத்தவரை ‘அழுகை’ என்பது ஒரு மொழி.
- குழந்தை தினமும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு.
குழந்தைச் செல்வத்தின் இன்பத்தை எடுத்துக் கூறியுள்ளார். அதே குழந்தைகள் அழத் தொடங்கினால் நம் மனது மிகவும் துன்பப்படும். எப்பேற்பாடுபட்டாவது அழுகையை நிறுத்த முயற்சிப்போம். பல நேரங்களில் தோல்விதான் மிஞ்சும்.
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை அதிகமாக அழும்போது, அது எதற்காக அழுகிறது, என்ன செய்தால் அழுகை நிற்கும் எனத் தெரியாமல் திகைக்கிற தாய்மார்தான் அதிகம். கைக்குழந்தையைப் பொறுத்தவரை 'அழுகை' என்பது ஒரு மொழி. தாயின் கவனத்தைத் தன் மீது ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் எளிய வழி. பசி, தாகம், தனிமை, களைப்பு போன்ற சாதாரணக் காரணங்களால் குழந்தை தினமும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு. இந்தக் கால அளவு அதிகரித்தால் அல்லது குழந்தை தொடர்ந்து அழுகிறது என்றால், அதைக் கவனிக்க வேண்டும்.
குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் குழந்தை அழக்கூடும். குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை உறுதிசெய்ய, தாயானவர் தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொண்டு, குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பத் தொடங்கிவிடும். இதன் மூலம் குழந்தை பசியால் அழுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக, குழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர், இரண்டு மணி நேரத்துக்குள் அழுதால், அது நிச்சயம் பசிக்காக இருக்காது. வேறு காரணத்தால் அது அழக்கூடும்.
பசிக்கு அடுத்தபடியாகத் தாகம் எடுத்தால் குழந்தை அழும். உதாரணமாக, திட உணவு சாப்பிடும் குழந்தைக்குச் சில தாய்மார் உணவைக் கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவார்கள். இதனால் உணவு விக்கிக்கொள்ளும். குழந்தைக்குத் தாகம் எடுக்கும். இதனால் சாப்பிட்ட பிறகு குழந்தை அழும். அப்போது கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்தால், குழந்தையின் அழுகை நின்றுவிடும். பால் குடித்த பிறகு சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தவும் குழந்தை அழும். குழந்தை இரவில் அழுவதற்குப் பெரும்பாலும், இதுதான் காரணமாக இருக்கும். ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நிற்கும்.
அதிகக் கனமான ஆடைகள், இறுக்கமான ஆடைகள், உறுத்துகிற ஆடைகள் மற்றும் கால் கொலுசு, கழுத்து செயின், இடுப்பு ஆபரணங்கள் ஆகியவற்றாலும் குழந்தை அடிக்கடி அழலாம். `டயபர்' என்பது அவசரத் தேவைக்கு என்பது போய், இப்போது எந்த நேரமும் அணிவிக்கப்படும் ஓர் உள்ளாடையாக அது மாறிவிட்டது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தைக்கு அரிப்பும் தடிப்பும் உண்டாகின்றன. இதன் காரணமாகவும் குழந்தைகள் அடிக்கடி அழுவதுண்டு.
தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும்.
குழந்தைக்கு வயிற்று வலியும் காது வலியும் ஏற்படுவது மிகவும் சகஜம். குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். குழந்தைக்கு அளவுக்கு அதிகமாகப் பால் அல்லது திட உணவைக் கொடுத்துவிட்டால், வயிறு உப்பி அழ ஆரம்பிக்கும். இதுபோல் உணவுடன் அதிகக் காற்று வயிற்றுக்குள் சென்றுவிட்டாலும், குழந்தை அழும். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அதன் முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் வயிறு தாயின் தோளில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும். குழந்தையும் அழுவதை நிறுத்திவிடும்.
சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழக்கூடும்.
குழந்தையின் உடலை மெல்லிய துணி கொண்டு சுற்றுவதால் குழந்தைகளின் அழும் நேரம் குறைக்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதெற்கென ப்ரத்யேகமாக துணிகள் கடைகளில் கிடைக்கின்றன வாங்கி பயன்படுத்துங்கள். இது உங்கள் குழந்தையின் அழுகையை தடுத்து ஆறுதலையும் பாதுகாப்பையும் அளிக்கிறது. அதே நேரம் தலை மற்றும் முகம் மூடிவிடாமல் பார்த்து கொள்ளவும், இது குழந்தை எளிதாக சுவாசிக்க உதவும். உங்கள் குழந்தையின் கைகளை வெளியில் விட்டும் சுற்றலாம். குழந்தை வயிற்றினால் படுக்க அல்லது தவழ முயற்சிக்கும் காலங்களில் இம்முறையை நிறுத்தி விட வேண்டும்.
குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட முறைதான் மேலும் கீழும் (ராக்) உங்கள் குழந்தையை அசைத்தல். அதற்கு குழந்தையை பாதுகாப்பாக உங்கள் கைகளில் பிடித்து மெதுவாக ராக் செய்யவும். இம்முறையால் அழும் குழந்தை பாதுகாப்பாக உணர்கிறது. அதுமட்டுமல்லாமல் பின்வரும் காலங்களில் இது குழந்தை மனஉறுதியுடன் வளர்வதற்கு உதவுகிறது.
வயிறு பிரச்சினை உங்கள் குழந்தை தொடர்ந்து அழ வைக்கும் ஒரு முக்கிய காரணி. ஏப்பத்தின் மூலமாக வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றுவதன் மூலம் குழந்தையின் அழுகையை நிறுத்தலாம். அதற்கு உங்கள் குழந்தை கிடத்தி சைக்கிள் ஓட்டுவது போல் கால்களை அசைப்பதன் மூலம் வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றலாம்.
- குன்னம் அருகே நல்லறிக்கை கிராம பெண்கள் மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர்
- 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடும்பாவி அமைத்து ஒப்பாரி வைத்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே நல்லறிக்கை கிராம பெண்கள் மழை இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் கிராம பெண்கள் ஒன்றுகூடி கொடும்பாவி அமைத்து மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர். இதேபோல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடும்பாவி அமைத்து ஒப்பாரி வைத்து வேண்டுதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரொனால்டோவின் முயற்சியை ஸ்லோவேனியா கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் முறியடித்தார்.
- ரொனால்டோ தேம்பி அழுத வீடியோ வெளியாகி அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.
யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் போர்ச்சுகல் அணி ஸ்லோவேனியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 0-0 என்ற கோல் கணக்கில் இரண்டு அணிகளும் இருந்ததால் பெனால்டி கோல் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது இந்த போட்டியில் தனது முதலாவது கோலை அடிக்க முயன்ற போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முயற்சியை ஸ்லோவேனியா கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் முறியடித்தார். கோலை மிஸ் செய்த அதிர்ச்சியில் ரொனால்டோவின் கணகளில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகியது.
ஆனால் அதன்பின்னர் சுதாரித்த ரொனால்டோ போட்டியின் அடுத்த பாதியில் போர்ச்சுகல் அணிக்கான முதல் கோலை ஸ்கோர் செய்து தொடர்ந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் தனது முதல் கோலை மிஸ் செய்ததால் ரொனால்டோ தேம்பி அழுத வீடியோ வெளியாகி அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

சமீபத்தில் சவுதி யூரோ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் தனது அல்- நாசர் அணி தோல்வி அடைந்ததால் ரொனால்டோ மைத்தனத்தில் கதறி அழுத்து குறிப்பிடத்தக்கது.
சிலருக்கு என்ன துன்பம் ஏற்பட்டாலும் அழுகை வராது. இதுவும் ஒருவகையான குறைபாடு தான். அந்த வகையில் நீங்கள் ஏன் கட்டாயம் அழ வேண்டும் என்று இனி தெரிந்துக் கொள்ளலாம்….
கண்ணீர் வெளிப்படும் போது, கண் இமைகள் மற்றும் விழிகள் இடைப்பட்டு சுத்தம் செய்ய உதவுகிறது. மற்றும் இது, பார்வையை தெளிவாக்கவும் பயன் தருகிறது.
கண்ணீர் லைசோசைமை (Lysozyme) கொண்டுள்ளது. இது கண்ணில் இருக்கும் 90 - 95% பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் வாய்ந்த திரவம் ஆகும்.
அழுவது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது, ஏனெனில், இது உங்கள் உடலில் இருக்கும் பெரும்பாலான நச்சுகளை அகற்ற உதவுகிறது. நீங்களே கூட சில சமயங்களில் உணர்ந்திருக்கலாம், நீங்கள் அழுது முடித்த சில நிமிடங்கள் கழித்து மேப்பட்ட உடல்நிலை மற்றும் மன நிலையை உணர்வீர்கள்.

உங்கள் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் வெளியேறவும் கூட அழுகை உதவுகிறது. தோல்வியில் துவண்டிருக்கும் சிலர் கூட, மனம் விட்டு அழுத பிறகு, தன்னம்பிக்கையுடன் திகழ இதுதான் காரணம்.
மாங்கனீஸ், மனிதர்களின் மன நிலையில் பாதிப்பு (அல்லது) தாக்கம் ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் அழும் போது மாங்கனீஸ் குறைவதால், உங்கள் மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது.
இயற்கையான முறையில் இரத்த அழுத்தத்தை குறைக்க சிறந்த வழியாக திகழ்கிறது அழுகை. நீங்கள் அழுத பிறகு, உங்கள் உடலின் இரத்த அழுத்தம் சம நிலைக்கு திரும்புகிறது. மற்றும் உங்கள் உடலை இளகிய நிலையில் உணரவும் இது பயன் தருகிறது.
அடுத்த முறை நீங்கள் மிகவும் மன அழுத்தமாக இருக்கும் போது அழ முயற்சிக்கலாம். ஏனெனில் இது, உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது. இது கொஞ்சம் கடினம் தான், மன அழுத்தம் ஏற்படும் போது அதை குறைக்க உடனே அழ முடியாது. ஆனால், அழுகை வரும் போது அடக்க வேண்டும், இது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
அழுகை ஒருவரின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறதாம். ஆம், நாம் முன்னர் கூறியது போல அழுகை உங்களது உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றுவது, உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.






