என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா: 21 வயது ஆண் புலி உயிரிழப்பு
- வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி இன்று காலை உயிரிழந்துள்ளது.
- புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது.
வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி இன்று காலை உயிரிழந்துள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் வங்கப்புலி விஜயன் உயிரிழந்ததாக உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும், விஜயன் என்கிற 21 வயது ஆண் வங்கப்புலியானது கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உணவு உட்கொள்ளுதலைக் குறைத்துக் கொண்டது. இதன் காரணமாக படிப்படியாக அதன் உடல்நிலை சரியில்லாமல் போனது.
புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன் வங்கப்புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று ஆண் புலி உயிரிழந்துள்ளது.
Next Story






