நோய் பாதிப்பால் டிரைவர்-முதியவர் தற்கொலை

நோய் பாதிப்பால் டிரைவர்-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நோய் பாதிப்பால் டிரைவர்-முதியவர் தற்கொலை
Published on

விருதுநகர்

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சுந்தர்ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது62). இவருக்கு மதுபழக்கம் இருந்தது. கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் முத்துராஜ் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி(23), டிரைவர். இவருக்கு மதுபழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. நோய் பாதிப்பால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com