search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naveen"

    • ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.
    • இந்த 3 வீரர்களும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதில் கேள்விக் குறி ஏற்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் முஜீப்-உர்-ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோர் பல நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

    இதற்கிடையே அவர்கள் தங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரினர். மேலும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதி கேட்டனர்.

    இந்த நிலையில் முஜீப்-உர்-ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோருக்கு 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. மேலும் அவர்களின் மத்திய ஒப்பந்தத்தை தாம தப்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறும்போது, 3 வீரர்களும், மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலக நினைப்பது அவர்கள் வணிக லீக் போட்டிகளில் விளையாடும் ஆர்வத்தை காட்டுகிறது.

    ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தது. இதன் மூலம் இந்த 3 வீரர்களும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதில் கேள்விக் குறி ஏற்பட்டுள்ளது.

    • கே.எஸ்.தென்னரசுக்கு வாக்கு சேகரித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
    • 21 மாதகாலமாக மக்களை சந்திக்க வராத அமைச்சர்கள், இப்போது தேர்தல் என்றதும் இங்கேயே முகாம் அமைத்து வீதிவீதியாக வருகிறார்கள் என்று எடப்பாடி கூறினார்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். வீரப்பம்பாளையம், பெரியவலசு நால்ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் அவர் வாக்குகள் கேட்டு பேசினார்.

    அவர் பேசியதாவது, "21 மாதகாலமாக மக்களை சந்திக்க வராத அமைச்சர்கள், இப்போது தேர்தல் என்றதும் இங்கேயே முகாம் அமைத்து வீதிவீதியாக வருகிறார்கள். மக்களை ஏமாற்ற பரோட்டா போடுவது, வடை சுடுவது என்று ஏமாற்றுகிறார்கள். பரோட்டா போடவும், டீ போடவுமா நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இந்த கிழக்கு தொகுதிக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்றுதானே மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அதை செய்யாமல் மக்களை ஏமாற்றுகிறீர்கள்" என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


    இயக்குனர் நவீன்

    அப்போது "நீ சரியான ஆம்பளையாக இருந்தால். மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால் வாக்காளர்களை வெளியே விட்டு சந்தித்து வாக்கு சேகரியுங்கள்" என்று கூறினார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 'மூடர் கூடம்', 'கொளஞ்சி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நவீன் தனது சமூக வலைதளத்தில் எடப்பாடியை விமர்சித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அதில், "ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்" என்று பதிவிட்டுள்ளார்.


    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 12 தங்கம் வென்றுள்ளது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 5வது இடத்தில் உள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 74  கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நவீன், பாகிஸ்தானின் முகமது ஷெரீப் தாஹிரை எதிர்கொண்டார். இதில் 9-0 என்ற கணக்கில் முகமது ஷெரீப் தாஹிரை வீழ்த்திய நவீன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதன் மூலம் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 6-வது தங்கப்பதக்கம் கிடைத்தது. பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தீபக் புனியா, வினேஷ் போகட் மற்றும் ரவி குமார் தஹியா ஆகியோர் மல்யுத்தத்தில் ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். காமல்வெல்த் போட்டியில் இந்தியா 12 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 34 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    மூடர் கூடம் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகரும், இயக்குனருமான நவீன், சிந்து என்பவரை திடீர் என்று திருமணம் செய்துக் கொண்டுள்ளார். #Naveen
    ‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். இப்படம் அவருக்கு சிறந்த பெயரை பெற்றுத் தந்தது. தற்போது, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில், நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார்.



    இந்நிலையில், இயக்குனர் நவீன் சிந்து என்ற பெண்ணை திடீர் பதிவு திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
    புரோ கைப்பந்து லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த நவீன், பிரபாகரனை சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது. #ProVolleyballLeague
    புதுடெல்லி:

    இந்திய கைப்பந்து சம்மேளனம் சார்பில் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் 2-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை சென்னை மற்றும் கொச்சியில் நடக்கிறது. இதில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னை ஸ்பார்டன்ஸ் 11 வீரர்களை வாங்கி இருக்கிறது. வெளிநாட்டு வீரராக கனடாவின் ரூடி வெராப், நட்சத்திர வீரராக அகின் (இந்தியா) ஆகியோரை சென்னை அணி வாங்கி உள்ளது.

    தமிழகத்தை சேர்ந்த நவீன் ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி எடுத்து இருக்கிறது. பிரபாகரன் (ரூ. 5 லட்சத்துக்கு 20 ஆயிரம்), கேரளாவை சேர்ந்த விபின் ஜார்ஜ் (ரூ.4 லட்சத்துக்கு 80 ஆயிரம்), பிறைசூடன், அஸ்வின், பாக்யராஜ், ஷெல்டன் மோசஸ், கபில்தேவ், ஹரிகரன் ஆகியோரையும் சென்னை அணி தன்வசப்படுத்தி இருக்கிறது. சென்னை ஸ்பார்டன்ஸ் அணி சிறந்த வீரர்களை வாங்கி இருப்பதாக அந்த அணியின் மானேஜர் ஜெ.நடராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். #ProVolleyballLeague
    ஒடிசா மாநிலத்தில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான 90 நாள் கவுன்ட் டவுன் இன்று தொடங்கியது. #HockeyWorldCup #NaveenPatnaik
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான 90 நாள் கவுன்ட் டவுன் இன்று தொடங்கியது. புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கவுன்ட் டவுன் கடிகாரத்தை முதல்வர் நவீன் பட்நாயக் இயக்கி வைத்தார்.

    மேலும், போட்டியை விளம்பரப்படுத்தி மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில், ‘ஹாக்கிக்கு என் இதயம் துடிக்கிறது’ என்ற பிரச்சாரத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நவீன் பட்நாயக், நாட்டிற்கு பெருமை தேடித் தந்த மிகச்சிறந்த ஹாக்கி வீரர்களை ஒடிசா மாநிலம் உருவாக்கியிருப்பதாகவும், இந்த உலகக்கோப்பை போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். #HockeyWorldCup #NaveenPatnaik
    ×