search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farooqi"

    • ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.
    • இந்த 3 வீரர்களும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதில் கேள்விக் குறி ஏற்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் முஜீப்-உர்-ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோர் பல நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

    இதற்கிடையே அவர்கள் தங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரினர். மேலும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதி கேட்டனர்.

    இந்த நிலையில் முஜீப்-உர்-ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோருக்கு 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. மேலும் அவர்களின் மத்திய ஒப்பந்தத்தை தாம தப்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறும்போது, 3 வீரர்களும், மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலக நினைப்பது அவர்கள் வணிக லீக் போட்டிகளில் விளையாடும் ஆர்வத்தை காட்டுகிறது.

    ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தது. இதன் மூலம் இந்த 3 வீரர்களும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதில் கேள்விக் குறி ஏற்பட்டுள்ளது.

    • கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டது.
    • பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஹம்பன்டோட்டா:

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் 3 ஒருநாள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி டாப்-3 வீரர்களான பஹர் ஜமான் (30 ரன்), இமாம் உல்-ஹக் (91 ரன்), கேப்டன் பாபர் அசாம் (53 ரன்) கணிசமான பங்களிப்பை வழங்கினர்.

    அவர்களுக்கு பிறகு மிடில் வரிசை வீரர்கள் தடுமாறிய போதும் ஷதப் கான் நம்பிக்கை தந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்ட போது நசீம் ஷா பேட்டிங் செய்தார். எதிர் முனையில் ஷதப்கான் இருந்தார். முதல் பந்தை வீச வந்த பரூக்கி மன்கட் முறையில் அவரை அவுட் செய்தார். இதனால் விரக்தியில் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவர் 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். 

    இறுதியில் பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 24 வைடு உள்பட எக்ஸ்டிரா வகையில் 30 ரன்களை வாரி வழங்கியது ஆப்கானிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது.

    ஷதப்கானை ஆப்கானிஸ்தான் வீரர் பரூக்கி ரன் அவுட் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.

    ×