என் மலர்

  நீங்கள் தேடியது "Mani ratnam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரபல நாவலை படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் இறங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Maniratnam
  ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை அடுத்து, பிரம்மாண்ட பொருட்செலவில் அடுத்த படத்தை எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

  இந்த யோசனையில் ஒன்றாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டு தள்ளிக்கொண்டேபோன ‘பொன்னியின் செல்வன்’ கதையும் ஒன்று என கூறப்படுகிறது. அதோடு இந்த கதையில் விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி மூவரையும் நடிக்க வைக்கலாம் என்கிற திட்டத்தில் அவர்களுக்கு கதையின் கருவை மணிரத்னம் அனுப்பியுள்ளதாகவும் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

  அவரது பிரம்மாண்ட படைப்பு பற்றிய அறிவிப்பை 2019 தொடக்கத்தில் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார் மணிரத்னம். 


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய், விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ், டயானா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் விமர்சனம். #CCV
  சென்னையை கலக்கும் மிகப்பெரிய தாதா பிரகாஷ் ராஜ். இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் அரவிந்த் சாமி, பிரகாஷுடன் இருக்கிறார். இரண்டாவது மகன் அருண் விஜய் துபாயில் தொழில் செய்து வருகிறார். மூன்றாவது மகன் சிம்புவும் வெளிநாட்டில் இருக்கிறார்.

  பிரகாஷ் ராஜ்க்கும், மற்றொரு தாதாவான தியாகராஜனுக்கும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பிரகாஷ் ராஜ் காரில் செல்லும் போது, வெடிகுண்டு விபத்தில் சிக்குகிறார். இதில் உயிர் பிழைத்து தீவிர சிகிச்சை பிரிவில் பிரகாஷ் அனுமதிக்கப்படுகிறார்.



  இதையறிந்த அருண் விஜய்யும், சிம்புவும் வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள். மகன்கள் மூன்று பேரும், அப்பாவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று விசாரிக்கிறார்கள். சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பும் பிரகாஷ் ராஜ், நெஞ்சுவலியால் உயிரிழக்கிறார். 

  அதன்பிறகு அவருடைய இடத்திற்கு யார் வருவது? என்று மகன்கள் மூன்று பேருக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்த பதவிச் சண்டையில் வெற்றி பெற்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.



  படத்தில் மூத்த மகனாக நடித்திருக்கும் அரவிந்த் சாமி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தந்தையுடனே பயணிக்கும் இவர், நான் தான் அடுத்த தாதாவிற்கு தகுதியானவன் என்று கம்பீரத்துடன் நடித்திருக்கிறார். இரண்டாவது மகனான அருண் விஜய், துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மூன்றாவது மகன் சிம்பு, இளமை துள்ளலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். அரவிந்த் சாமியின் நண்பராகவும், போலீஸ் அதிகாரியாகவும் மிரட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். 

  அரவிந்த்சாமியின் மனைவியாக வரும் ஜோதிகா, ரிப்போர்ட்டராக வரும் அதிதிராவ், அருண் விஜய்யின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்புவின் காதலியாக வரும் டயானா எரப்பா ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 



  தாதாவான தந்தை இறந்த பிறகு, அந்த இடத்தை பிடிக்க நினைக்கும் மூன்று மகன்களின் போட்டா போட்டியை மையமாக வைத்து, தன்னுடைய பாணியில் திரைக்கதை அமைத்து சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். வழக்கமான கதை என்றாலும், அதை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப வழங்கியிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக கையாண்டு,  கச்சிதமாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு பவர்புல்லான கேங்ஸ்டர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

  ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது திரையில் பார்க்கும் போது மிகவும் புத்துணர்ச்சியோடு இருக்கிறது. பின்னணி இசையை வேற லெவலில் கொடுத்திருக்கிறார். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

  மொத்தத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ செம வெயிட்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஜெயலலிதா ரசித்துக் கேட்ட பாடல் பற்றி பேசியிருக்கிறார். #CCV #ChekkaChivanthaVaanam
  மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டு படத்தை பற்றியும், படக்குழுவினர் பற்றியும் பேசினார்கள்.



  பின்னர் வைரமுத்து பேசும்போது, ‘மணிரத்னம் இயக்கத்தில் எனது பாடல் வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்களில் எனக்கு பிடித்தது ‘பம்பாய்’ படத்தில் இடம் பெற்ற ‘கண்ணாலனே...’ என்ற பாடல்தான். இந்த பாடல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவிற்கு வந்து, ரசித்து கேட்ட பாடல் என்று கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் சிம்பு, மேடையில் பேசாமல் ஓடிவிட்டார். #CCV #ChekkaChivanthaVaanam #STR
  மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் பாடி காண்பித்தார். 

  அதன்பின் அரவிந்த்சாமி, அருண்விஜய், அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் படத்தை பற்றியும், படக்குழுவினர் பற்றியும், மணிரத்னம் பற்றியும் பேசினார்கள்.



  பின்னர் மேடையேறிய சிம்பு, ‘நான் இங்கு வந்ததற்கு காரணம் ஒரு விஷயம் சொல்ல வந்தேன். அது என்னவென்றால் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. நான் பேசுவேன். நிறைய பேசுவேன். ஆனால், இப்போ பேசமாட்டேன். இந்த படம் பேசும். அதன்பின் நான் பேசுவேன் என்று மேடையில் பேசாமல் ஓடிவிட்டார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட அருண் விஜய், அவரைப் பற்றி நினைத்து வேறு, ஆனால் நிஜத்தில் வேறு என்று பேசியுள்ளார். #CCV #ChekkaChivanthaVaanam
  மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் பாடி காண்பித்தார். 

  இதில் அருண் விஜய் பேசும்போது, ‘செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தது என் வாழ்க்கையில் சிறந்த அனுபவம். எல்லா நாட்களும் ஒவ்வொரு புது விஷயம் கற்றுக் கொண்டேன். மணிரத்னம் படத்தில் நடிக்க போறேன் என்று சந்தோஷம் இருந்தாலும், முதலில் டென்ஷனாக இருந்தது. ஆனால் மணி சாரை பார்த்தவுடன் அந்த டென்ஷன் போய்விட்டது. இருந்தாலும் பயம் இருந்துக் கொண்டே இருந்தது. என் பயத்தை போக்கியது அரவிந்த் சாமிதான். இந்த படத்தில் தியாகு கதாபாத்திரம் கொடுத்ததற்கு மணிரத்னம் சாருக்கு நன்றி. அவரைப் பற்றி நான் நினைத்து வேறு. கேமரா பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு ஆக்‌ஷன் என்று சொல்லுவார் என்று நினைத்தேன். ஆனால் வித்தியாசமாக அருகில் வந்து என்ன செய்ய வேண்டும் எப்படி என்று நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தார்.



  என்னுடன் நடித்திருக்கும் சிம்பு திறமையான நடிகர். சிறுவயதில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இப்படத்தின் மூலம் நல்ல மனிதர் என்பதை தெரிந்துக் கொண்டேன். அதுபோல், நடிகர் விஜய் சேதுபதி, நடிப்பிலும், நிஜத்திலும் யதார்த்தமானவர். எப்போது அப்படியே இருக்க வேண்டுகிறேன்’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட அரவிந்த் சாமி, மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். #CCV #ChekkaChivanthaVaanam
  மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் பாடி காண்பித்தார். 

  அதன்பின் அரவிந்த் சாமி பேசும்போது, நான் மணி ரத்னத்தின் 6 படங்களில் நடித்திருக்கிறேன். இருவர் படத்தில் பாடி இருக்கிறேன். உயிரே படத்தில் ஷாருக்கானுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறேன். மொத்தம் 8 படங்களில் அவருடன் வேலை பார்த்திருக்கிறேன். அவருடைய எல்லா படத்தில் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார். மேலும் அவர் இயக்கிய மற்ற 12 படங்களில் என்னை ஏன் நடிக்க வைக்க வில்லை என்றும் அவரிடம் கேள்வி எழுப்பினார்.

  அதிதி ராவ் பேசும்போது, காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். மிகவும் லக்கி. அரவிந்த்சாமியுடன் நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம்’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் செக்கச் சிவந்த வானம் படம், அவருடைய நாயகன் நாட்களுக்கு சென்றுள்ளார் என்று ஏ.ஆர்.ரகுமான் பேசியிருக்கிறார். #CCV #ARRahman ChekkaChivanthaVaanam
  மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் பாடி காண்பித்தார்.

  அதன் பிறகு பேசிய அவர், இந்தப் படம் மணிரத்னம் சார், அவருடைய நாயகன் நாட்களுக்கு சென்றிருக்கிறார் என்று பேசினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் செக்கச்சிவந்த வானம் படம் ரிலீசாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #CCV #ChekkaChivanthaVaanam
  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள இப்படத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஜூன் மாதம் செர்பியாவில் நிறைவடைந்தது. தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.



  இந்நிலையில், இப்படம் செப்டம்பர் 28-ம் தேதி ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ‘நவாப்’ என்ற பெயரில் ரிலீசாக இருக்கிறது. 
  ×