search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senthilkumar"

    • பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.
    • கைதான பா.ஜ.க.வினரை தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. டாக்டர் செந்தில்குமார் பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற முடியும். தென் மாநிலங்களில் வெற்றி பெற முடியாது. இந்தி பேசும் மாநிலங்களை கோமூத்ரா மாநிலங்கள் என குறிப்பிட்டார். இதனை கண்டித்து தமிழகத்தில் பா.ஜ.க.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் எந்தவித முன்அறிவிப்பின்றி திடீரென்று தருமபுரி  பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கூடாது என்று பா.ஜ.க.வினரை தடுத்து நிறுத்தினர். ஆனாலும், அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

    கைதான பா.ஜ.க.வினரை தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எம்.பி.யின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
    • வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற தருமபுரி எம்.பி. செந்தில்குமார் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற முடியும். தென் மாநிலங்களில் அக்கட்சியால் வெற்றிபெற முடியாது எனத் தெரிவித்தார்.

    இந்தி மொழி பேசும் மாநிலங்களை கோமூத்ரா மாநிலங்கள் என அவர் குறிப்பிட்டது சர்ச்சையானது. இதுகுறித்த காணொலி சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இந்த வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

    எம்.பி.யின் இத்தகைய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பா.ஜ.க. தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.


    இந்த நிலையில் தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரி எம்.பி.செந்தில்குமார் எக்ஸ் சமூக வலைதளத்தில் அண்மையில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது, பொருத்தமற்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறேன். இதற்காக மன்னிப்பு கோருகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே செந்தில் குமார் எம்.பி.யின் பேச்சு குறித்து அறிந்த தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவரை கடுமையாக கண்டித்ததாக தி.மு.க. அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் பொது வெளியில் கருத்து தெரிவிக்கும்போது அனைவரும் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


    • கண் ஒளியல் பிரிவு சார்பில் மேம்படுத்தபட்ட லென்ஸ் பொருத்துதல் பயிலரங்கு நடத்தப்பட்டது.
    • ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி கண் மருத்துவ துறை தலைவர் பேராசிரியர் மிஷ்ரா ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறு படைவீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் கண் ஒளியியல் பிரிவில் மேம்படுத்தபட்ட லென்ஸ் பொருத்துதல் பயிலரங்கு நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். இயக்குநர் பொறுப்பு ஆண்ட்ரு ஜான் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக சென்னை கோர் இனவேஷன் நிறுவனத்தின் இயக்குநர் மகேஷ்வரி, ஆவடி ஐ ஆப்டோமெட்ரி மருத்துவமனையின் இயக்குனர் சவிதா, ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி கண் மருத்துவ துறை தலைவர் பேராசிரியர் மிஷ்ரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    இப்பயிலரங்கில் ஜிப்மர் , புதுவை சமுதாயக் கல்லூரி, சென்னை சத்ய சாய் மருத்துவக் கல்லூரி, பிரிஸ்ட் யுனிவர்சிட்டி, புதுவை மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கண் ஒளியியல் பிரிவு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியின் முடிவில் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை கண் ஒளியியல் பிரிவு ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் தமிழ் சுடர், புதுவை அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை கண் ஒளியியல் பிரிவு ஒருங்கி ணைப்பாளர், துணை பேராசிரியர் வெண்ணிலா, நிர்வாக அதிகாரி சந்துரு, கண் ஒளியியல் துறையின் விரிவுரையாளர்கள் ஐயம்மா, அன்புநிலவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×