search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோமூத்ரா மாநிலங்கள் என்று சர்ச்சை பேச்சு- செந்தில்குமார் மன்னிப்பு கேட்டார்
    X

    "கோமூத்ரா மாநிலங்கள்" என்று சர்ச்சை பேச்சு- செந்தில்குமார் மன்னிப்பு கேட்டார்

    • எம்.பி.யின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
    • வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற தருமபுரி எம்.பி. செந்தில்குமார் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற முடியும். தென் மாநிலங்களில் அக்கட்சியால் வெற்றிபெற முடியாது எனத் தெரிவித்தார்.

    இந்தி மொழி பேசும் மாநிலங்களை கோமூத்ரா மாநிலங்கள் என அவர் குறிப்பிட்டது சர்ச்சையானது. இதுகுறித்த காணொலி சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இந்த வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

    எம்.பி.யின் இத்தகைய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பா.ஜ.க. தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.


    இந்த நிலையில் தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரி எம்.பி.செந்தில்குமார் எக்ஸ் சமூக வலைதளத்தில் அண்மையில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது, பொருத்தமற்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறேன். இதற்காக மன்னிப்பு கோருகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே செந்தில் குமார் எம்.பி.யின் பேச்சு குறித்து அறிந்த தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவரை கடுமையாக கண்டித்ததாக தி.மு.க. அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் பொது வெளியில் கருத்து தெரிவிக்கும்போது அனைவரும் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


    Next Story
    ×