என் மலர்
நீங்கள் தேடியது "பாஜக"
- ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம், 24 ஆண்டு கால பிஜூ ஜனதா தள ஆட்சி முடிவுக்கு வந்தது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்த பிஜூ பட்நாயக்கின் மகன்தான் நவீன் பட்நாயக். இவர் தனது தந்தையின் மறைவுக்கு பின் பிஜூ ஜனதா தளம் கட்சியைத் தொடங்கி கடந்த 2000-ம் ஆண்டு ஒடிசாவில் ஆட்சியைப் பிடித்து முதல் மந்திரியாக பதவியேற்றார்.
அதன்பின் தொடர்ந்து நடைபெற்ற 4 தேர்தலிலும் வெற்றி பெற்று, ஒடிசா மாநிலத்தில் 5 முறை முதல் மந்திரி பதவியை அலங்கரித்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 7 கட்டமாக நடைபெற்றது. அத்துடன் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது.
ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளுக்கு 4 கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க, பிஜூ ஜனதா தளம் தனித்தனியாக களம் இறங்கின.
நவீன் பட்நாயக் தனது செயலாளராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டினை பிஜூ ஜனதா தளம் கட்சியில் சேர்த்ததுடன், அவரை பிரசார தளபதியாக்கி தேர்தலைச் சந்தித்தார்.
இந்த வியூகத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது பா.ஜ.க. ஒடிசா மண்ணை வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு தாரை வார்ப்பதா என கேள்வி எழுப்பியது.
மேலும், புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவியை பிரசாரத்தில் முன்னிலை படுத்தியது பா.ஜ.க. இந்த விவகாரமும் விசுவரூபம் எடுத்தது.
இதற்கிடையே, ஒடிசாவில் வெளியான சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பிஜூ ஜனதா தளத்துக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. தொடக்கம் முதலே பிஜூ ஜனதா தளம் பின்னடைவைச் சந்தித்தது. பா.ஜ.க. வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றனர்.
ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 74 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க. 78 இடங்களை கைப்பற்றி அசத்தியது. பிஜூ ஜனதா தளம் 51 இடமும், காங்கிரஸ் 14 இடமும், மற்றவர்கள் 4 இடமும் பெற்றனர். இதன்மூலம் ஒடிசாவில் நவீன்பட்நாயக்கின் 24 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.
இம்முறை 2 தொகுதிகளில் போட்டியிட்ட நவீன் பட்நாயக் தனது பாரம்பரிய ஹின்ஜிலி தொகுதியில் வென்ற நிலையில், கன்தாபன்சி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் லட்சுமண் பாகிடம் தோல்வி அடைந்தார்.
ஒடிசா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்தி பா.ஜ.க. முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
நவீன் பட்நாயக் 2000 ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5 முறை சட்டசபை தேர்தலில் வென்று முதல் மந்திரியாக இருந்துள்ளார்.
- கோவில்களை தணிக்கையின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது.
- தமிழ்நாட்டில் அறநிலையத்துறை ஏன் இருக்க கூடாது என்பதற்கு இது ஓரு சான்று.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் தணிக்கையின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசியதாவது:-
கோவில்களை தணிக்கையின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் அறநிலையத்துறை ஏன் இருக்க கூடாது என்பதற்கு இது ஓரு சான்று.
இதற்கு எதிராக தமிழக பாஜக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளது.
தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும். அரசின் நிலை மோசமாக உள்ளது.
அதானியை முதலமைச்சர் சந்தித்ததாக பாஜக ஒரு போதும் கூறவில்லை. அதானியை சந்திப்பது குற்றமில்லை.
முதலமைச்சரின் மருமகன் அதானியை சந்தித்ததாக பாஜக குற்றம்சாட்டுகிறது.
முதலமைச்சரின் மருமகன் அதானியை சந்திக்கவில்லை என முதலமைச்சர் கூறுவாரா ?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
- பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று 3வது முறை ஆட்சி அமைத்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 7 கட்டமாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இதையடுத்து முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.
அதைத்தொடர்ந்து ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்டங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியது.
காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 231 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை பெற்று இருந்தது. இதில், தமிழகத்தில் 40 இடங்களையும் இந்தியா கூட்டணி கைப்பற்றி இருந்தது.
ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகாரின் நிதிஷ்குமார் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். இதனால் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து 3 முறை பிரதமர் பதவியை வகித்தவர் என்ற நேருவின் ஹாட்ரிக் சாதனையை, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி சமன் செய்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர் என்ற சிறப்பும் மோடிக்கு உள்ளது.
- டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தனது எக்ஸ் பக்கதில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
- 'அரசு வீடு, கார், செக்யூரிட்டி பயன்படுத்த மாட்டேன் என தங்கள் பிள்ளைகள் மீது பொய் சத்தியம் செய்தார்கள்'
டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஆட்சிக்கு ஆம் ஆத்மி - பாஜக இடையே குடுமிப் பிடி சண்டை நிலவி வருகிறது. அதன் ஒரு பதியாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த சமயத்தில் பங்களாவுக்குள் எப்படி ஆடம்பரமாக இருந்துள்ளார் பாருங்கள் என ஒரு வீடியோவை பாஜக ஐடி விங் வைரல் செய்து வருகிறது.
தங்களை சாமானியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களைப் பற்றிய உண்மையை நாங்கள் [பாஜக] காட்டுகிறோம். பொதுப் பணத்தை அபகரித்து கெஜ்ரிவால் தனக்கென 7-ஸ்டார் ரிசார்ட்டைக் கட்டியுள்ளார் என்று டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தனது எக்ஸ் பக்கதில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
உடற்பயிற்சி கூடம், sauna குளியலறை போன்ற வசதிகளுக்காக ரூ. 3.75 கோடி வரை செலவாகியிருக்கும் என பாஜக ஊகித்துள்ளது. மேலும் பங்களாவில் மார்பிள் கிரானைட் பொருத்த ரூ. 1.9 கோடி, , ஜிம் மற்றும் ஸ்பா பொருத்துவதற்கு மட்டும் ரூ. 35 லட்சம், இதர செலவினங்களாக ஒரு ரூ. 1.5 கோடி சேர்த்து மதிப்பிடலாம் என்று பாஜக கணித்துள்ளது.
खुद को आम आदमी कहने वाले @ArvindKejriwal की अय्याशी के शीशमहल की सच्चाई हम बताते आए हैं , आज आपको दिखायेंगे भी!जनता के पैसे खाकर अपने लिए 7-Star Resort का निर्माण करवाया है!शानदार Gym-Sauna Room-Jacuzzi की कीमत! • Marble Granite Lighting→ ₹ 1.9 Cr. •Installation-Civil… pic.twitter.com/QReaeNMRQ8
— Virendraa Sachdeva (@Virend_Sachdeva) December 10, 2024
அரசு வீடு, கார், செக்யூரிட்டி பயன்படுத்த மாட்டேன் என தங்கள் பிள்ளைகள் மீது பொய் சத்தியம்செய்துவிட்டு டெல்லி மக்கள் வரிப்பணத்தைப் பணத்தை எப்படிக் கொள்ளையடிக்கிறார்கள் பாருங்கள் என பாஜக கூறியுள்ள்ளது.
ஆனால் இவை அனைத்தும் ஆதாரமற்ற வெற்று பொய்கள் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் தயார் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.
- டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆரம்பத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
- டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் விவசாயிகள் நலனை மத்திய அரசு காக்கும் என்பது உறுதி.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆரம்பத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மக்கள் போராடியதற்கு பின்பு எதிர்ப்பதை போல் தமிழ்நாடு அரசு நாடகமாடுகிறது.
சுரங்கம் குறித்து தமிழக பாஜக கடிதம் எழுதியதும் சட்டமன்றத்தில் பெரிய நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றுகிறார். டங்ஸ்டன் விவகாரத்தில் ராஜினாமா செய்வேன் எனக்கூறும் முதலமைச்சர், டாஸ்மாக் விவகாரத்தில் ராஜினாமா செய்யலாம்.
நானும், எல். முருகனும் 12-ந்தேதி டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளோம். டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் விவசாயிகள் நலனை மத்திய அரசு காக்கும் என்பது உறுதி என்றார்.
- இன்று மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் என்று விஜய் தெரிவித்தார்.
- ஆனந்த் டெல்டும்டேவுக்கு விகடன் மேடை கொடுத்தது ஏன்? என அண்ணாமலை கேள்வி
"எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, எழுத்தாளரும், சமூக உரிமை போராளியுமான ஆனந்த் டெல்டும்ப்டே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்வில் பேசிய அவர், "இன்று மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவை எதையும் கண்டு கொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆட்சி செய்கிறது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், விஜய் மணிப்பூர் செல்ல தயாராக இருந்தால், அவருக்கு மணிப்பூரை சுற்றிக்காட்டுவதற்கு நான் தயார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, ""அடிப்படை அரசியல் அறிவை த.வெ.க. தலைவர் விஜய் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆதாரத்தின் அடிப்படையில் விஜய் பேச வேண்டும். மணிப்பூர் பற்றி விஜய் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். யார் ஆட்சியில் அதிகமானோர் இறந்தார்கள்? மணிப்பூரில் என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனந்த் டெல்டும்டே ஒரு நகர்ப்புற நக்சல். ஆனந்த் டெல்டும்டேவுக்கு விகடன் மேடை கொடுத்தது ஏன்? திருமாவளவன் செல்லாத நிகழ்ச்சிக்கு அவரது கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா எப்படி சென்றார்? விசிக யார் கையில் உள்ளது? விசிக திருமா கையில் உள்ளதா, துணைப் பொதுச் செயலாளர் கையில் உள்ளதா? விசிகவிற்கு ஒரு தலைமையா அல்லது இரண்டு தலைமைகளா? ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க திருமாவளவன் தயங்குவது ஏன்?" என்று தெரிவித்தார்.
- பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
- முகமூடிகள், கண்ணாடிகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்திருந்தனர்
கடந்த 2020ல் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021 ஆம் ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.
எனினும், இன்னும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. இதனை வலியுறுத்தி விவசாயிகள் தற்போது மீண்டும் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். டெல்லியிலேயே முகாமிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் தொடர இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா எல்லையில் அரியானா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில தினங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
நேற்று முன் தினம் நடந்த டெல்லி சலோ போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கண்ணீர் புகை குண்டுகளால் குறைந்தது 16 விவசாயிகள் காயமடைந்தனர், அவர்களில் ஒருவர் கேட்கும் திறனை இழந்ததாக போராட்டக்குழு தரப்பில் கூறப்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் தடைபட்ட போராட்டம் இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. விவசாயிகள் பேரணி அறிவிப்பைத் தொடர்ந்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லி எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
அரியானா, பஞ்சாப் எல்லைகளிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் டெல்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று 'டெல்லி சலோ' பேரணியை மீண்டும் தொடங்கினர்.
அந்த வகையில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு எல்லையில் இன்று மதியம் டெல்லிக்கு மீண்டும் நடைபயணம் மேற்கொண்ட விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
101 விவசாயிகள் கொண்ட குழு டெல்லியை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கியது, அவர்களில் பலர் போலீஸ் வீசும் கண்ணீர் புகை குண்டுகளில் இருந்து தற்காத்து கொள்ள முகமூடிகள், கண்ணாடிகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்திருந்த நிலையில் எதிர்பார்த்தபடியே போலீசார் குண்டுகளை வீசியுள்ளனர். 101 விவசாயிகளுக்கு போராட அனுமதி அளித்ததாகவும், ஆனால் கொடுக்கப்பட்ட போராட்டக்காரர்கள் பட்டியலுக்கு மாறாக வேறு ஆட்களும் அதிகம் பேரும் வந்ததால் குண்டு வீசியதாக போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2013-ஐ மீண்டும் நடைமுறைப்படுத்துவதோடு, விவசாயிகள் மீதான போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெறவும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் கோருகின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என பஞ்சாப் விவசாய தலைவர் சர்வான் சிங் பந்தேர் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதாகவும், ஐந்து பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
- மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை, எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்கள்?
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து, மாணவியின் தந்தை, சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மாணவியின் உறவினர் ஒருவர் முயற்சியால், தற்போது மீண்டும் வழக்குப் பதிவு செய்து, இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதாகவும், ஐந்து பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
பாலியல் வன்முறை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம், காவல்துறைக்கு யார் கொடுத்தது? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே அதல பாதாளத்தில் கிடக்கும்போது, பெண்கள், குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை, எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்கள்?
நாட்டில் பிற மாநிலங்களில் நடக்கும் குற்றச் செயல்களுக்கெல்லாம், முழு விவரம் தெரியும் முன்னரே நான்கு பக்கத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்?
தன் பொறுப்பில் இருக்கும் தமிழகக் காவல்துறையை அவர் என்ன ரீதியில் கையாண்டு கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. உடனடியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- தமிழக மின்சார வாரியம், அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய தொகை குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
- அமைச்சர் கூறும் ரூ.568 கோடி என்பதன் கணக்கு விவரங்கள் என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதானியை சந்திக்கவே இல்லை, இந்த விவகாரத்தில் பொய்யான தகவலை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சிறையில் இருந்து வெளிவந்து அமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல் இரவு, பகல் எனக் கால நேரம் பாராமல் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு, சங்க காலப் பாடல் வரிகளைப் பாடி சமூக வலைத்தளங்களில் புகழ்பாடிக் கொண்டிருந்த ஜாமின் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு, தற்போதுதான் தனது துறைகள் குறித்த ஞாபகம் வந்திருக்கிறது.
திமுக அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை வழக்கு தொடருவோம் என்ற பூச்சாண்டி காட்டி மிரட்டும் அதே காலாவதியான தொனியில், தமிழக மின்சார வாரியம், அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய தொகை குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
ஒரு வகையில், அதானி நிறுவனத்துக்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படாமல், கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தமிழக மின்சார வாரியத்துடனான வழக்கு காரணமாக அதானி நிறுவனத்துக்கு வழங்கப்படாமல் இருந்த கட்டணத்தை திமுக ஆட்சியில் வழங்கியுள்ளதை ஒப்புக்கொண்ட ஜாமின் அமைச்சரைப் பாராட்டியே தீர வேண்டும்.
அதானி நிறுவனத்துடன் திமுக அரசு எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதானி நிறுவனத்துடன் தமிழக மின்சார வாரியத்துடனான ஒப்பந்தங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை மறைக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சிகள் பலிக்கவில்லை.
மேல்முறையீட்டு ஆணையத்தின் உத்தரவின்படியே ரூ.568 கோடி கட்டணம் செலுத்தியதாகக் கூறும் ஜாமின் அமைச்சர், கடந்த 2019 ஆம் ஆண்டு, மேல்முறையீட்டு ஆணையத்தின் இதே உத்தரவை, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2021 ஆம் ஆண்டு நிராகரித்ததை மறந்து விட்டார்.
அதானி நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையில், இந்தப் பிரச்சனை தொடர்பாக, ரூ.544 கோடி ஒரு முறை வருவாயும், ரூ.205 கோடி தாமதக் கட்டணமும் தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து பெற்றதாகக் கூறப்பட்டிருப்பதை மறந்து விட்டாரா அல்லது மறைக்க முயற்சிக்கிறாரா? உண்மையில் அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய மொத்தக் கட்டணம் என்ன என்பதை, ஜாமின் அமைச்சர் வெளிப்படையாகத் தெரிவிப்பாரா? அமைச்சர் கூறும் ரூ.568 கோடி என்பதன் கணக்கு விவரங்கள் என்ன?
அதானி நிறுவனத்திடம் தமிழக மின்சார வாரியம் தொடர்ந்து உயர்த்தப்பட்ட விலையான ரூ.7.01 விலையிலேயே மின்சாரம் வாங்கிக் கொண்டு, அதற்காக, கடந்த நிதியாண்டில் ரூ.99 கோடி கூடுதல் கட்டணம் பெற்றிருப்பதாக அதானி நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்போது. எந்த அடிப்படையில் ரூ.5.10 க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்று திமுக ஆட்சியில் கொள்முதல் செய்வதாகக் குறிப்பிடுகிறார் அமைச்சர்? என்று தெரிவித்துள்ளார்.
- முந்தைய தேர்தலில் ஆம் ஆத்மி சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஷாஹ்தரா தொகுதியில் 11,000 வாக்காளர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்
- ஆயிரக்கணக்கான வாக்காளர் பதிவுகளை நீக்குவதற்கு பாஜக இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது.
டெல்லியில் அடுத்த வருட தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது, இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு டெல்லி வாக்காளர் பட்டியலிலிருந்து ஏராளமான வாக்காளர்களை நீக்க பாஜக முயல்வதாக ஆம் ஆத்மி கட்சி பொதுச்செயலாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று [வெள்ளிக்கிழமை] செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேஜ்ரிவால், ஷஹ்தாரா, ஜனக்புரி மற்றும் லக்ஷ்மி நகர் உள்ளிட்ட பல தொகுதிகளில் ஆயிரக்கணக்கான வாக்காளர் பதிவுகளை நீக்குவதற்கு பாஜக இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது.
ஷாஹ்தாரா பகுதியில் உள்ள 11,018 வாக்காளர்களின் பெயர்களை நீக்க பாஜக விண்ணப்பித்துள்ளது, ஆனால் அதில் உள்ள 500 பெயர்களில் நாங்கள் ஆராய்ந்தபோது , அதில் இன்னும் 75 சதவீதம் பேர் அங்குதான் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடக்கிறது,
முந்தைய தேர்தலில் ஆம் ஆத்மி சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஷாஹ்தரா தொகுதியில் ஏறக்குறைய 11,000 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து அகற்றப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் பெரும்பாலானோர் ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் என்று அவர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
दिल्लीवालों के Vote काटने की BJP की बड़ी साज़िश के@ArvindKejriwal जी ने दिखाए LIVE सबूत?#KejriwalExposesBJPVoteScam pic.twitter.com/1J14EcdiBl
— Dr.jewel vasra (@DrJewelvasra__) December 6, 2024
தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையோடு தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும் அதன் இணையதளத்தில் வெளியிடுமாறு கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
- மோடி அரசுக்கு திரைப்படம் பார்க்க நேரமிருக்கிறது ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்க நேரமில்லை.
- இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையைத் தடுக்க பயன்படுத்தியிருந்தால் இந்திய எல்லையைச் சீனா ஆக்கிரமித்திருக்காது
மணிப்பூர் போன்ற சூழலை விவசாயிகளுக்கு ஏற்படுத்தாதீர்கள் என காங்கிரஸ் மத்திய அரசை எச்சரித்துள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை MSP க்கான சட்டப்பூர்வ உத்தரவாதம்தர வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி போலீஸ் அடக்குமுறையில் ஈடுபட்டதை அடுத்து காங்கிரஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குஜராத் மாநிலம் கோத்ராவில் நடந்த 2002 ரயில் எரிப்பு பற்றிய திரைப்படமான ' தி சபர்மதி ரிப்போர்ட் ' திரையிடலில் கடந்த திங்களன்று, பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.
மோடி அரசுக்கு திரைப்படம் பார்க்க நேரமிருக்கிறது ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்க நேரமில்லை. பிரதமர் மோடி விவசாயிகளிடம் தாமதிக்காமல் பேசி உடனடியாக MSP சட்டத்தை இயற்ற வேண்டும் காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
விவசாயிகளைத் தடுக்க பயன்படுத்திய சக்தியை இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையைத் தடுக்க பயன்படுத்தியிருந்தால் இந்திய எல்லையைச் சீனா ஆக்கிரமித்திருக்காது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த மே 2023 இல் மணிப்பூரில் மெய்தேய் மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே வெடித்த வன்முறையில் தற்போதுவரை சுமார் 300 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அண்ணல் அம்பேத்கர் அவர்களது நினைவு தினம் இன்று.
- சகோதரத்துவம் காப்போம். ஜெய் பீம்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய அரசியல் அமைப்பின் தலைமைச் சிற்பி, சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அண்ணல் அம்பேத்கர் அவர்களது நினைவு தினம் இன்று.
நாட்டின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதியான அண்ணல் அம்பேத்கர் அவர்களது சமத்துவ நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற உழைப்போம். சகோதரத்துவம் காப்போம். ஜெய் பீம்! என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பின் தலைமைச் சிற்பி, சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அண்ணல் அம்பேத்கர் அவர்களது நினைவு தினம் இன்று. நாட்டின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதியான அண்ணல் அம்பேத்கர் அவர்களது சமத்துவ நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற உழைப்போம். சகோதரத்துவம் காப்போம்.… pic.twitter.com/HGiIbhy2FI
— K.Annamalai (@annamalai_k) December 6, 2024