என் மலர்
நீங்கள் தேடியது "Rukmini Vasant"
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். திரைப்படம் இதுவரை 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற தங்கபூவே பாடலின் வீடியோவை படக்குழு இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறது.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
- இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கமல்ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று சொன்னது பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் சிம்பு மீண்டும் மணி ரத்னம் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கன்னட நடிகை ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ருக்மினி வசந்த் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் உண்மையாக இருந்தால் மணி ரத்னம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு நடிப்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு STR 49, STR 50, STR 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிவகார்த்திகேயன் எஸ்.கே.23 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- மான்டிசோரி பள்ளி ஆசிரியையாக நினைத்திருந்தேன்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எஸ்.கே.23 என்ற படத்தில் நடித்து வருகிறார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட திரை உலகின் பிரபல நடிகை ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் 51-வது படத்திலும் ருக்மணி வசந்த் கதாநாயகியாக இணைந்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். தற்போது தென்னிந்திய படங்களுக்கு வெளிச்சம் கிடைத்துள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைகிறேன்.

எந்த மொழி படங்களில் நடித்தாலும் அதில் சிறப்பாக பேச வேண்டும் என முயற்சி செய்கிறேன். எனக்கு சினிமா வாய்ப்புகள் சரியாக அமையாவிட்டால் மான்டிசோரி பள்ளி ஆசிரியையாக நினைத்திருந்தேன். ஆனால் இபபோதுள்ள சூழ்நிலையில் அது தேவைப்படாது என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகார்த்திகேயனின் எஸ்.கே.23 படத்தில் முதலில் மிருணாள் தாக்கூர் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவர் நடிக்க முடியாததால் ருக்மணி வசந்த் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






