சினிமா வாய்ப்புகள் சரியாக அமையாவிட்டால் `ஆசிரியை' ஆகிவிடுவேன்-ருக்மணி வசந்த்

சிவகார்த்திகேயன் எஸ்.கே.23 என்ற படத்தில் நடித்து வருகிறார். மான்டிசோரி பள்ளி ஆசிரியையாக நினைத்திருந்தேன்.
சினிமா வாய்ப்புகள் சரியாக அமையாவிட்டால் `ஆசிரியை' ஆகிவிடுவேன்-ருக்மணி வசந்த்
Published on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எஸ்.கே.23 என்ற படத்தில் நடித்து வருகிறார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட திரை உலகின் பிரபல நடிகை ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் 51-வது படத்திலும் ருக்மணி வசந்த் கதாநாயகியாக இணைந்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். தற்போது தென்னிந்திய படங்களுக்கு வெளிச்சம் கிடைத்துள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைகிறேன்.

எந்த மொழி படங்களில் நடித்தாலும் அதில் சிறப்பாக பேச வேண்டும் என முயற்சி செய்கிறேன். எனக்கு சினிமா வாய்ப்புகள் சரியாக அமையாவிட்டால் மான்டிசோரி பள்ளி ஆசிரியையாக நினைத்திருந்தேன். ஆனால் இபபோதுள்ள சூழ்நிலையில் அது தேவைப்படாது என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவகார்த்திகேயனின் எஸ்.கே.23 படத்தில் முதலில் மிருணாள் தாக்கூர் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவர் நடிக்க முடியாததால் ருக்மணி வசந்த் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com