என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணி ரத்னம்"

    • கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியானது.
    • இந்த படத்தை மணி ரத்னம் இயக்கி உள்ளார்.

    கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை மணி ரத்னம் இயக்கினார். படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

    இந்த படத்தின் மூலம் நடிகை சரண்யா அறிமுகமானார். மேலும் ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டாரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, டின்னு ஆனந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ்நாட்டில் 214 நாட்கள் ஓடியது.

    இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'நாயகன்' திரைப்படத்தை வரும் நவம்பர் 6-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
    • திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    படத்தில் இடம் பெற்று மக்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ஜிங்குச்சா பாடலின் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
    • திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் இயக்குநர் மணி ரத்னம் சமீபத்தில் அளித்த பேட்டியில் " நானும் கமல்ஹாசனும் இணைந்து மீண்டும் ஒரு நாயகன் திரைப்படத்தை எடுக்க எங்களுக்கு எண்ணம் இல்லை. அத்தகைய படத்தை எதிர்பார்த்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ரசிகர்களுக்கு முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படத்தை கொடுக்க விரும்பினோம். ஆனால் பார்வையாளர்கள் எங்களிடம் நாங்கள் எடுத்த படத்திற்கு முற்றிலும் வேறுபட்ட படத்தை எதிர்ப்பார்த்துள்ளனர்" என கூறியுள்ளார்

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
    • திரைப்படம் கடந்த 5- ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்ச்சனத்தை பெற்று வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த 5- ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்ச்சனத்தை பெற்று வருகிறது.

    திரைப்படம் வெளியான முதல் நாளில் 23 கோடி ரூபாய் வசூலித்தது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 36.90 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி இரெண்டே நாளில் 60 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

    அவர் நடித்த இந்தியன்2 திரைப்படமும் இரண்டு நாளில் 44 கோடி ரூபாய் வசூலித்தது. தக் லைஃப் திரைப்படம் இன்னும் வரும் நாட்கள் தான் தக் லைஃப் படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்ற நிலையில் இருக்கிறது.

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
    • இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது. இன்று இரவு பிவிஆர் சினிமாஸ் மற்றும் மற்ற மல்டி பிலெக்ஸ் திரையரங்கின் முன்பதிவு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது என்ற சொல்லியதற்காக கன்னட அரசியல் அமைப்பினர் கமல் ஹாசனை புறக்கணித்து தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட கூடாது என போராடி வருகின்றனர். அதேப் போல் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இன்றும் இன்னும் 1 நாளில் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் கமல் ஹாசன் அதற்காக எதற்கும் செவி சாய்க்காமல் அவருடைய ப்ரோமோஷன் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    கர்நாடகாவில் திரைப்படம் வெளியாகுமா? ஆகாதா? என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
    • திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.

    நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். மணி ரத்னம் அவர் இயக்கும் படத்திற்கு என தனி ஸ்டைல் இருக்கும், இன்று மணிரத்னம் அவரது 69- வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் மணி ரத்னத்தை வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "நாயகன் முதல் தக் லைஃப் வரை குடும்பம், கனவு காண்பவர்கள் என்பதையும் தாண்டி சினிமாவின் மாணவர்களாக ஒன்றாக பயணித்துள்ளோம். உங்களின் துணை எனக்கு பலம் கொடுத்துள்ளது. உங்களின் கதைகள் தொடரட்டும். உங்களின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகையும், சினிமாவுக்கான அர்த்தத்தையும் கொடுக்கட்டும். என்றும் உங்களின் நண்பனாக பிறந்தநாள் வாழ்த்துகள் மணிரத்னம்!." என கூறியுள்ளார்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
    • திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.

    நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். மணி ரத்னம் அவர் இயக்கும் படத்திற்கு என தனி ஸ்டைல் இருக்கும், இன்று மணிரத்னம் அவரது 69- வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மணி ரத்னத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "தம் திரைமொழியின் ஆளுமையால் இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநராகக் கோலோச்சும் திரு. மணிரத்னம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    இன்னும் பல இளம் இயக்குநர்களுக்கு inspiration-ஆக அமையும் படைப்புகளைத் தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என விழைகிறேன்." என கூறியுள்ளார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
    • இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கமல்ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று சொன்னது பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

    இந்நிலையில் சிம்பு மீண்டும் மணி ரத்னம் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கன்னட நடிகை ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ருக்மினி வசந்த் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

     

    இந்த தகவல் உண்மையாக இருந்தால் மணி ரத்னம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு நடிப்பது குறிப்பிடத்தக்கது.

    சிம்பு STR 49, STR 50, STR 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விண்னைத் தாண்டி வருவாயா படத்தில் நானும், திரிஷாவும் நடித்திருந்தோம். அதன் பிறகு எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.
    • சினிமாவின் மாணவனாக இருந்தாலும் திறமையுள்ள மாணவனிடம் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை.

    சென்னையில் நடைபெற்று வரும் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ள நடிகர் சிம்பு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தக் லைஃப் படத்தில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ஏ.ஆர்.ரகுமான் சாருடன் சிறிய வயதில் இருந்தே டிராவல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. என் தந்தை படத்தை தவிர, மற்ற படத்தில் பாட முதல் முதலாக எனக்கு வாய்ப்பு கொடுத்தது ஏ.ஆர்.ரகுமான் சார். அதன்பிறகு, இதுவரை தமிழ் முதல் இந்தி வரை 150 பாடல்கள் பாடியுள்ளேன்.

    விண்னைத் தாண்டி வருவாயா படத்தில் நானும், திரிஷாவும் நடித்திருந்தோம். அதன் பிறகு எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. இந்த படத்தில் நாங்கள் இணைவதாக தகவல் வெளியான பிறகு மீண்டும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் உள்ளது.

    என்னை வைத்து படம் எடுக்க, எல்லோரும் பயந்த சமயத்தில், பயப்படாமல் தைரியமாக, 'இந்த பையனை நம்பலாம்' என என் மீது நம்பிக்கை வைத்து என்னை அழைத்த மணி சாரை என்றும் மறக்கவே மாட்டேன்.

    சினிமாவின் மாணவனாக இருந்தாலும் திறமையுள்ள மாணவனிடம் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுளில் ஒருவர் இந்திரன்ஸ்.
    • 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் பிரபலாமானவர் மதுபாலா.

    மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுளில் ஒருவர் இந்திரன்ஸ். இவர் நகைச்சுவையாக இருந்தாலும் சரி எமோஷனல் காட்சியாக இருந்தாலும் சரி கதாப்பாத்திரத்திற்கு உயிரோட்டதுடன் நடிக்கும் வல்லமையுள்ளவர். இவர் அடுத்ததாக மதுபாலா நடிப்பில் உருவாகியுள்ள சின்ன சின்ன ஆசை திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் பிரபலாமானவர் மதுபாலா. சின்ன சின்ன ஆசை திரைப்படம் முழுக்க முழுக்க வாரனாசியில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்,. படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை இயக்குநர் மணி ரத்னம் வெளியிட்டார்.

    சின்ன சின்ன ஆசை திரைப்படத்தை அறிமுக இயக்குநரான வர்ஷா வாசுதேவ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் எண்டே நாராயணிக்கு என்ற குறும்படம் எடுத்தவராவார். பாபுஜி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. சைஸ் சித்திக் ஒளிப்பதிவை மேற்கொள்ள கோவிந்த வசந்தா இசையை மேற்கொள்கிறார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப்.
    • திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.

    மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.

    இதை தொடர்ந்து மணி ரத்னம் அடுத்து இயக்கவுள்ள படத்தை பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தெலுங்கு நடிகரான நவீன் பொலிஷெட்டி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது.இப்படம் ஒரு ரொமாண்டிக் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

     

    நவின் பொலிஷெட்டி இதற்கு முன் நடித்த சிச்சோரே, ஏஜெண்ட் சார் ஸ்ரீனிவாச ஆத்ரேயா மற்றும் மிஸ் ஷெட்டி பொலிஷெட்ட்ய் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

     

    இப்படத்தை குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவர இல்லை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் .
    • இப்படத்தில் இடம் பெற்ற வீர ராஜ வீர பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது.

    மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் . இப்படத்தில் விக்ரம், ரவி மோகன், கார்த்தி, திரிஷா,ஐஷ்வர்யா ராய் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற வீர ராஜ வீர பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது.இப்படத்தில் இடம் பெற்ற வீர ராஜ வீர பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது.இதனை பாடகரான ஃபையாஸ் வசிஃபுதின் டகர் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடுத்தார். ஏனெனில் இப்பாடல் அவர் தந்தை ஃபையாசுதின் டகர் மற்றும் மாமா ஸாஹிருதின் டகர் இசையமைத்த சிவ துதி பாடலில் இருந்து இப்பாடல் இசையமைப்பட்டுள்ளதாக வழக்கை தொடுத்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கிற்கு சில வாரங்களுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஜூனியர் டகர் பிரதர்சுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் கொடுக்க மற்றும் படத்தில் இவர்களுக்கு கிரெடிட் கொடுக்குமாறு தீர்ப்பளித்துள்ளது.

    இந்நிலையில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஏ.ஆர். ரஹ்மான் தாக்கல் செய்த மேல் முறியீட்டு மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் அவர் ரூபாய்.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவு அழித்துள்ளது.

    ×