என் மலர்
சினிமா செய்திகள்

தொடர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தும் கன்னட அமைப்பினர்: Swag-ஆக கையாளும் கமல்
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
- இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது. இன்று இரவு பிவிஆர் சினிமாஸ் மற்றும் மற்ற மல்டி பிலெக்ஸ் திரையரங்கின் முன்பதிவு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது என்ற சொல்லியதற்காக கன்னட அரசியல் அமைப்பினர் கமல் ஹாசனை புறக்கணித்து தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட கூடாது என போராடி வருகின்றனர். அதேப் போல் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இன்றும் இன்னும் 1 நாளில் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் கமல் ஹாசன் அதற்காக எதற்கும் செவி சாய்க்காமல் அவருடைய ப்ரோமோஷன் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
கர்நாடகாவில் திரைப்படம் வெளியாகுமா? ஆகாதா? என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.






