என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் இந்திரன்"
- மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுளில் ஒருவர் இந்திரன்ஸ்.
- 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் பிரபலாமானவர் மதுபாலா.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுளில் ஒருவர் இந்திரன்ஸ். இவர் நகைச்சுவையாக இருந்தாலும் சரி எமோஷனல் காட்சியாக இருந்தாலும் சரி கதாப்பாத்திரத்திற்கு உயிரோட்டதுடன் நடிக்கும் வல்லமையுள்ளவர். இவர் அடுத்ததாக மதுபாலா நடிப்பில் உருவாகியுள்ள சின்ன சின்ன ஆசை திரைப்படத்தில் நடித்துள்ளார்.
1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் பிரபலாமானவர் மதுபாலா. சின்ன சின்ன ஆசை திரைப்படம் முழுக்க முழுக்க வாரனாசியில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்,. படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை இயக்குநர் மணி ரத்னம் வெளியிட்டார்.
சின்ன சின்ன ஆசை திரைப்படத்தை அறிமுக இயக்குநரான வர்ஷா வாசுதேவ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் எண்டே நாராயணிக்கு என்ற குறும்படம் எடுத்தவராவார். பாபுஜி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. சைஸ் சித்திக் ஒளிப்பதிவை மேற்கொள்ள கோவிந்த வசந்தா இசையை மேற்கொள்கிறார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- இந்திரன் பீடி தொழிலாளியாகவும், கட்டுமான தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தார்.
- பள்ளி படிப்பை தொடர வேண்டும் என்பது அவரது நீண்டநாள் ஆசையாக இருந்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் இந்திரன் என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சிறுவயதாக இருந்தபோதே, இவரது குடும்பம் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டது.
இதனால் அவர் நான்காம் வகுப்பு வரையிலேயே படித்துள்ளார். அதன்பிறகு பீடி தொழிலாளியாகவும், கட்டுமான தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தார். மேலும் தையல் தொழிலையும் கற்றார். அதன்மூலம் குடும்பத்திற்கு வருமானத்தை கொடுத்து வந்தார்.
பின்னர் நாடகங்களில் நடித்து வந்த அவர், 1981-ம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். ஏராளமான மலையாள படங்களில் அவர் நடித்திருக்கிறார். 1990-களில் பல்வேறு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக இருந்ததால் அவரால் படிப்பை தொடர முடியவில்லை. ஆனால் பள்ளி படிப்பை தொடர வேண்டும் என்பது அவரது நீண்டநாள் ஆசையாக இருந்துள்ளது. அதனை அவர் தற்போது நிறைவேற்றியிருக்கிறார்.
தனது 67-வது வயதில் தற்போது 10-ம் வகுப்பு படிக்க சேர்ந்துள்ளார். திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் நடந்துவரும் சமத்துவ வகுப்பில் சேர்ந்து, வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடக்கும் வகுப்பில் கலந்துகொண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கேரள மாநில எழுத்தறிவு இயக்கத்தின் தூதராக நடிகர் இந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடிகர் இந்திரன், 2012-ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளியாகியிருந்த நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






