மதுபாலா - இந்திரன்ஸ் நடிக்கும் சின்ன சின்ன ஆசை பட ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுளில் ஒருவர் இந்திரன்ஸ். 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் பிரபலாமானவர் மதுபாலா.
மதுபாலா - இந்திரன்ஸ் நடிக்கும் சின்ன சின்ன ஆசை பட ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்
Published on

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுளில் ஒருவர் இந்திரன்ஸ். இவர் நகைச்சுவையாக இருந்தாலும் சரி எமோஷனல் காட்சியாக இருந்தாலும் சரி கதாப்பாத்திரத்திற்கு உயிரோட்டதுடன் நடிக்கும் வல்லமையுள்ளவர். இவர் அடுத்ததாக மதுபாலா நடிப்பில் உருவாகியுள்ள சின்ன சின்ன ஆசை திரைப்படத்தில் நடித்துள்ளார்.

1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் பிரபலாமானவர் மதுபாலா. சின்ன சின்ன ஆசை திரைப்படம் முழுக்க முழுக்க வாரனாசியில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்,. படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை இயக்குநர் மணி ரத்னம் வெளியிட்டார்.

சின்ன சின்ன ஆசை திரைப்படத்தை அறிமுக இயக்குநரான வர்ஷா வாசுதேவ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் எண்டே நாராயணிக்கு என்ற குறும்படம் எடுத்தவராவார். பாபுஜி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. சைஸ் சித்திக் ஒளிப்பதிவை மேற்கொள்ள கோவிந்த வசந்தா இசையை மேற்கொள்கிறார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com