இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநர் : மணிரத்னத்திற்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.
இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநர் : மணிரத்னத்திற்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
Published on

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.

நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். மணி ரத்னம் அவர் இயக்கும் படத்திற்கு என தனி ஸ்டைல் இருக்கும், இன்று மணிரத்னம் அவரது 69- வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மணி ரத்னத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "தம் திரைமொழியின் ஆளுமையால் இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநராகக் கோலோச்சும் திரு. மணிரத்னம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

இன்னும் பல இளம் இயக்குநர்களுக்கு inspiration-ஆக அமையும் படைப்புகளைத் தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என விழைகிறேன்." என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com