என் மலர்
நீங்கள் தேடியது "Ticket Booking"
- ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
- ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
தமிழகத்தின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை, 16-ம் தேதி திருவள்ளுவர் தினம், 17-ம் தேதி உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பஸ்களில் 90 நாட்களுக்கு முன்பாகவும், ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
இதனால், கடைசி நேர நெரிசலில் சிக்கி பயணிப்பதைத் தவிர்க்க முன்கூட்டியே பயணிகள் திட்டமிட்டு முன்பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில், ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
IRCTC, இணையதளம் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாக பயணியர் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
- ஜனவரி 9-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 8) காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.
சென்னை:
தமிழகத்தின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை, 15-ம் தேதி திருவள்ளுவர் தினம், 16-ம் தேதி உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பஸ்களில் 90 நாட்களுக்கு முன்பாகவும், ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
இதனால், கடைசி நேர நெரிசலில் சிக்கி பயணிப்பதைத் தவிர்க்க முன்கூட்டியே பயணிகள் திட்டமிட்டு முன்பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில், ரெயில்களில் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
ஜனவரி 9-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 8) காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பயணிகள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். வைகை எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் உள்ளிட்ட முக்கியமான ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.
- தீபாவளிக்கு 60 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது
- காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு துவங்கும்.
தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 20 ம்தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது
கீழ்க்காணும் தேதிகளில் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
ரெயில் டிக்கெட் முன்பதிவு நாள் | பயண நாள் | பயண கிழமை |
ஆகஸ்ட் 17 | அக்டோபர் 16 | வியாழன் |
ஆகஸ்ட் 18 | அக்டோபர் 17 | வெள்ளி |
ஆகஸ்ட் 19 | அக்டோபர் 18 | சனிக்கிழமை |
ஆகஸ்ட் 20 | அக்டோபர் 19 | ஞாயிறு |
ஆகஸ்ட் 21 | அக்டோபர் 20 | திங்கட்கிழமை - தீபாவளி பண்டிகை |
ஆகஸ்ட் 22 | அக்டோபர் 21 | செவ்வாய் |
ஆகஸ்ட் 23 | அக்டோபர் 16 | புதன்கிழமை |
வட இந்திய ரெயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும். வட இந்திய ரெயில் பட்டியல் மற்றும் முன்பதிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரெயில்கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு துவங்கும்.முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கவும்
- புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
- 2014-15ம் ஆண்டு மட்டும் 807 மில்லியன் மக்கள் பயணித்துள்ளனர்.
இந்தியாவில் ரெயில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரெயில் கட்டணத்தை உயர்த்த ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கடந்த 2014-15 மற்றும் 2019-20-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்துடன் ஒப்பிடும்போது, 2021-22ம் ஆண்டு முதல் புறநகர் மற்றும் புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ரெயில் டிக்கெட் முன்பதிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.
அதே சமயம் கொரோனாவுக்குப் பிறகு இந்திய ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட்டுகளின் முன்பதிவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
மத்திய தர வர்க்கத்தினரின் செலவழிக்கும் திறன் அதிகரித்துள்ளதால் ரெயில்களில் முன்பதிவு செய்து அதிக அளவில் பயணிக்கின்றனர்.
அதிகாரப்பூர்வ ரெயில்வே தரவுகளின்படி, 2014-15 மற்றும் 2020-21ம் ஆண்டுக்கு இடையில் ஒப்பிடும்போது, 2021-22ம் ஆண்டுகளில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தேர்ந்தெடுக்கும் பயணிகளின் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக புறநகர் பகுதிகளில், தொடர்ச்சியாக 2020 ம் ஆண்டிலிருந்து இது அதிகரித்து வந்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் 2194 மில்லியன், 2022-23ம் ஆண்டில் 3,834 மில்லியன், 2023-24ல் 4,026 மில்லியன் மற்றும் 2024-25ம் ஆண்டில் 4,201 மில்லியன் என தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
அதே நேரம் புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2014-15 மற்றும் 2019-2020ம் ஆண்டு வரையில் இது அதிகரிகரித்தே இருந்தது. 2014-15ம் ஆண்டு மட்டும் 807 மில்லியன் மக்கள் பயணித்துள்ளனர். ஆனால் கொரோனாவுக்குப் பிறகு சட்டென புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு அல்லாத பெட்டிகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை 76 மில்லியனாக குறைந்தது.
இந்த எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக 2021-22ல் 582 மில்லியனாகவும், 2022-23ல் 1,826 மில்லியனாகவும், 2023-24-ல் 2,150 மில்லியனாகவும், 2024-25ல் 2,360 மில்லியனாகவும் மீண்டும் அதிகரித்தது.
2014-15 மற்றும் 2019-20ம் ஆண்டில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் டிக்கெட் விற்பனை ஊக்கமளிப்பதாக இருந்தது. 2020-21ம் ஆண்டில் மட்டும் புறநகர் பகுதியிலிருந்து 925 மில்லியன் மக்கள் பயணம் செய்துள்ளனர். கொரோனாவுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 2,214 மில்லியனாக உயர்ந்துள்ளதாக ரெயில்வே தரவுகளில் தெரியவந்துள்ளது.
- பயனரின் மொபைல் எண்ணுக்கு வரும் OTP (ஒருமுறை கடவுச்சொல்) உள்ளிடுவது அவசியம்.
- அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள் இந்த நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது.
ரெயில் பயணத்திற்கான உடனடி (Tatkal) டிக்கெட் முன்பதிவுகளுக்கு ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கையில்,
IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் உடனடி டிக்கெட் முன்பதிவு செய்ய, பயனரின் மொபைல் எண்ணுக்கு வரும் OTP (ஒருமுறை கடவுச்சொல்) உள்ளிடுவது அவசியம்.
கவுண்டர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யும் போதும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இது ஜூலை 15 முதல் முழுமையாக அமலுக்கு வரும்.
அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள், காலை 10:00 முதல் 10:30 வரை ஏசி டிக்கெட்டுகளையும், காலை 11:00 முதல் 11:30 வரை ஏசி அல்லாத டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ய முடியாது என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தட்கல் டிக்கெட் முன்பதிவில் போலி பெயர்களில் மோசடிகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படக்குழு இன்று மலேசியாவில் ப்ரோமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8.01 மணிக்கு தொடங்கியது. கமல்ஹாசன் படங்களில் இப்படம் மிகப்பெரிய ஓப்பனிங் படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- 2023 ஜனவரி 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க விரும்பும் பயணிகள் முன்வந்து டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம் என விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் :
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி.,) பஸ்களில் பயணிக்க 30 நாட்களுக்கு முன்பாக பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி போக்குவரத்து துறையில் உள்ளது. வருகிற 2023 ஜனவரி 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் ஒரு மாதத்துக்கு முன் என்ற அடிப்படையில் பொங்கலுக்கு முந்தைய நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு tnstc.com என்ற இணையதளத்தில் தொடங்கி உள்ளது.
தற்போது பெரும்பாலான விரைவு பஸ்களில் இருக்கைகள் நிரம்பாமல் காலியாக உள்ளது. கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க விரும்பும் பயணிகள் முன்வந்து இப்போது டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம் என விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 52 எக்சிகியூட்டிவ் சேர் கார் இருக்கைகளும், 478 சேர் கார் இருக்கைகளும் உள்ளது.
- எக்சிகியூட்டிவ் இருக்கைகள் சில நிமிடங்களிலேயே வெயிட்டிங்லிஸ்ட்டை எட்டியது.
திருப்பூர் :
கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ெரயிலில் மொத்தம் 530 இருக்கைகள் உள்ளது. இதில் 180 டிகிரி வளையக்கூடிய 52 எக்சிகியூட்டிவ் சேர் கார் இருக்கைகளும், 478 சேர் கார் இருக்கைகளும் உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்ட நிலையில் பயணிகள் மிகவும் ஆர்வம் காட்டியதை தொடர்ந்து, எக்சிகியூட்டிவ் இருக்கைகள் சில நிமிடங்களி லேயே வெயிட்டிங் லிஸ்ட்டை எட்டியது. சேர் காரை பொதுமக்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்கிறார்கள்.
எக்சிகியூட்டிவ் ரூ.2325. சேர் கார் ரூ.1280. விரைவில் கோவை- பெங்களூரு இடையே அதிவேக வந்தே பாரத் ெரயில் இயக்க திட்டமும் உள்ளது.
- தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- நாளை காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
சென்னை :
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், ரெயில், பஸ்களில் கூட்டம் அலைமோதி காணப்படும். ரெயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை (12-ந்தேதி) முதல் தொடங்குகிறது. நாளை காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
நாளை முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ந்தேதியும், 13-ந்தேதியில் முன்பதிவு செய்தால் நவம்பர் 10-ந்தேதியும், 14-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11-ந்தேதியும், 15-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 12-ந்தேதியும் பயணிக்க முடியும்.
இந்தமுறை ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் தீபாவளி பண்டிகை வருவதால் வியாழக்கிழமையில் இருந்தே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் விரைந்து முன்பதிவு செய்யலாம்.
- பேட்டை ரெயில் நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் ரெயில் முன்பதிவுக்கு வழி வகைகள் செய்யப்பட்டுள்ளது.
- ஏஜெண்டுகள் முந்தைய நாள் இரவே முன்பதிவு விண்ணப்பங்களை எழுதி வைத்து இடம் பிடித்து விடுகின்றனர்.
நெல்லை:
தென் மாவட்டங்களில் ரெயில் பயணம் செய்யும் பயணிகளை அதிக அளவில் கொண்ட மாவட்டமாக நெல்லை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள சந்திப்பு ரெயில் நிலையம் அதிக வருவாயை ஈட்டி கொடுக்கும் ரெயில் நிலையமாக இருந்து வருகிறது.
முன்பதிவு
தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்வதற்கு நெல்லை சந்திப்பு உள்பட ரெயில் நிலையங்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாநகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வசதிக்காக பாளை ரெயில் நிலையம், பேட்டை ரெயில் நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் ரெயில் முன்பதிவுக்கு வழி வகைகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேட்டை ரெயில் நிலையத்தில் அதனை சுற்றி அமைந்துள்ள கிராமங்களான சுத்தமல்லி, நரசிங்கநல்லூர், கொண்டா நகரம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் இருந்து தட்கல் முறையில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் வருகின்றனர்.
ஏஜெண்டுகள்
ஆனால் சில தனியார் நிறுவன ஏஜெண்டுகள் முந்தைய நாள் இரவே முன்பதிவுக்கு பயன்படுத்தும் விண்ணப்பங்களை எழுதி வைத்து இடம் பிடித்து விடுகின்றனர். அவர்களே குறைந்தபட்சம் 5 முதல் 10 டிக்கெட்டுகளுக்கு முன்பதிவுக்கு எழுதி வைத்து விடுவதால் முன்பதிவு செய்ய வரும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இவ்வாறாக முன்பதிவு செய்யும் ஏஜெண்டுகள் அந்த டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்று விடுவதாக ரெயில் பயணிகள் சங்கத்தினர் புகார் கூறி வருகின்றனர்.
எனவே சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ளது போல முன்பதிவு செய்யும் நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களில் யாரேனும் ஒருவர் கண்டிப்பாக வந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் வரிசையில் நிற்க வேண்டும். முன்கூட்டியே முன்பதிவு விண்ணப்பத்தை நிரப்பி வரிசையில் வைப்பதை தடுக்க வேண்டும். மேலும் பேட்டை ரெயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் எடுக்கும் போது பயணிகள் இடையே ஏற்படக்கூடிய பிரச்சனையை சரி செய்ய அங்கு பாதுகாப்புக்கு ரெயில்வே போலீசார் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினரும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சித்திரை திருவிழா 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- மீனாட்சி-சுந்தரே சுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந் தேதி நடக்கிறது.
மதுரை:
சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா வருகிற 12-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளை வலம் வருவர். ஏப்ரல் 19-ந் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 20-ந் தேதிதிக்கு விஜயம் நடைபெறுகிறது.
சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரே சுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண வைபவங்கள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் நடைபெறும்.
முன்பதிவு
இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண வசதியாக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வைத்திருப்பவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையில் தெற்குகோபுரம் வழியாக மொத்தம் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான கட்டண டிக்கெட் முன்பதிவானது கோவில் இணையதளத்தில் maduraimeenakshi.hree.tn.gov.in இந்து சமய அறநிலையத்துறையத் துறை hrce.tn.gov.in ஆகியவற்றில் இன்று (9-ந் தேதி) முதல் 13-ந் தேதி இரவு 9 மணி வரை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஒருவர் இரண்டு ரூ.500 கட்டண டிக்கெட் மட்டுமே பெற முடியும். ரூ.200 டிக்கெட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 டிக்கெட்டுகளை பெற முடியாது. பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் கோவில் பணியாளர்கள் மூலம் ரூ.500, ரூ.200 டிக்கெட் முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ -மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந் தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.
டிக்கெட் கிடைக்குமிடம்
அவ்வாறு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தவர்கள் வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்... இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண டிக்கெட்டை பெறலாம்.
டிக்கெட் பெற்றவர்கள், திருக்கல்யாண நாளான வருகிற 21-ந் தேதி காலை 7 மணிக்குள் கோவிலுக்கு வந்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து மீனாட்சி- சுந்தரேசுவரரை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- பயணிகளின் சிரமத்தை குறைக்க RAC டிக்கெட்டுகளை ரெயில்வே வழங்குகிறது.
- RAC டிக்கெட்டை பயன்படுத்தி ஒருவர் ரெயிலில் பயணிக்கலாம்.
இந்தியாவில் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆதலால் ரெயிலில் டிக்கெட் கிடைக்காமல் பல பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பயணிகளின் சிரமத்தை குறைக்க RAC டிக்கெட்டுகளை ரெயில்வே வழங்குகிறது. RAC டிக்கெட் என்பது அர்த்தம் ரத்துசெய்யப்படுவதற்கு எதிரான இட ஒதுக்கீடு (Reservation Against Cancellation) என்பதன் சுருக்கமாகும். RAC டிக்கெட்டை பயன்படுத்தி ஒருவர் ரெயிலில் பயணிக்கலாம். அதே சமயம் பெர்த்திற்கு ரெயில்வே உத்தரவாதம் அளிக்காது. அதாவது உங்களிடம் RAC டிக்கெட் இருந்தால், RAC ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மற்றொரு பயணியுடன் நீங்கள் ஒரு பெர்த்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்
அதே சமயம் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டால் RAC டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும்.
இந்நிலையில் RAC டிக்கெட் குறித்து டெல்லியை சேர்ந்த ஜா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் ரெயில்வே அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பதிவில், தனது குடும்பத்தை சாத் விழாவை கொண்டாட டெல்லியிலிருந்து பீகாரில் உள்ள தர்பங்காவிற்கு செல்ல ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். முன்பதிவு செய்யும்போது டிக்கெட் காத்திருப்பு பட்டியல் 124 ஆக இருந்தது. பின்னர் அக்டோபர் 30 அன்று RAC 30 ஆகவும், நேற்று RAC 12 ஆகவும் இருந்தது. ஆனால் ரெயில் சார்ட் தயாரான பிறகு காத்திருப்பு பட்டியல் 18 ஆக உள்ளது எனக்கூறி எனது டிக்கெட் ரத்து செய்யப்பட்டது.
இது என்ன மாதிரியான டிக்கெட் ரிசர்வேஷன் சிஸ்டம்? ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களே, சாத் பண்டிகையின் போது ஒரு பீகாரி தனது வீட்டிற்கு செல்ல முடியவில்லை என்றால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ரெயில்வே துறை அவருக்கு பதிலளித்தது.
இதனையடுத்து ஜா தனது எக்ஸ் பதிவில், "ரெயில்வே அதிகாரி என்னை தொடர்பு கொண்டு பேசினார். நாளை உங்கள் ஊருக்கு செல்வதற்கான ரெயில் பயணத்திற்கு தயாராக இருங்கள் என்று அவர் தெரிவித்தார். அவ்வாறு நடந்தால் ரெயில்வே அமைச்சருக்கு என் நன்றிகள்" என்று அவர் பதிவிட்டார்.






