என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜன நாயகன் டிக்கெட் முன்பதிவு - முழு பணமும் ரீஃபண்ட்
    X

    ஜன நாயகன் டிக்கெட் முன்பதிவு - முழு பணமும் ரீஃபண்ட்

    ஜன நாயகன் படம் ஒத்திவைக்கப்படுவதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

    இதையடுத்து படத்திற்கு சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது.

    ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை, நாளை காலை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் வெளியாவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    இதுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காத நிலையில் ஜன நாயகன் படம் ஒத்திவைக்கப்படுவதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஜன நாயகன் படத்திற்காக திரையரங்குகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முழுப் பணமும் திருப்பித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ராம் சினிமாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அன்புள்ள ரசிகர்களே,

    ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைவரும் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் உங்கள் ஏமாற்றத்தை நாங்கள் உண்மையிலேயே பகிர்ந்து கொள்கிறோம்.

    ஜனவரி 9 மற்றும் 10-ம் தேதிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முழுப் பணமும் திருப்பித் தரப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    ஆன்லைன் முன்பதிவுகள் (9 மற்றும் 10 ஆம் தேதி): பணத்தைத் திரும்பப் பெறுவது தானாகவே அசல் கட்டண முறைக்கு மாற்றப்படும்.

    கவுண்டர் முன்பதிவுகள் (9 மற்றும் 10 ஆம் தேதி): பணத்தை நேரடியாக சென்று திரும்பப் பெறலாம்.

    உங்கள் பொறுமை, புரிதல் மற்றும் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×