கர்நாடகாவில் தக்லைஃப் படம் திரையிடாவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும்

தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி தோன்றியதாக கமல்ஹாசன் பேசியதற்கு கன்னட அமைப்புகள் தினமும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது பழைய மற்றும் புதிய படங்களை திரையிடமாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் தக்லைஃப் படம் திரையிடாவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும்
Published on

தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி தோன்றியதாக கமல்ஹாசன் பேசியதற்கு கன்னட அமைப்புகள் தினமும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது பழைய மற்றும் புதிய படங்களை திரையிடமாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.ஆனால் கமல்ஹாசன் தன் மீது தவறு இருந்தால் நான் மன்னிப்பு கேட்பேன், அப்படி என் மீது தவறு இல்லை என்றால் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் அது தான் என் பழக்கம் என பதிலளித்தார்.

கடந்த 2022-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படம் கர்நாடகாவில் இருந்து ரூ. 12 கோடியை வசூலித்தது. தற்போது தக்லைப் படத்துக்கும் ஏராளமாள வரவேற்பு இருந்த நிலையில் கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு காரணமாக தற்போது படத்தை வெளியிட தடை விதித்து கர்நாடக சினிமா வர்த்தக வகை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்லைப்பட குழுவுக்கு ரூ. 25 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில கன்னட திரையரங்குகள் படத்தின் முன்பதிவு விரைவில் தொடங்கும் என்பது போல பதிவுகளை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com