என் மலர்

  நீங்கள் தேடியது "Thalapathy"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கும் விஜய், இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சியாளர் மூலம் புதிய முயற்சி ஒன்றை எடுத்து வருகிறார். #Vijay #Vijay63
  நடிகர் விஜய், ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

  விளையாட்டு தொடர்பான இந்த படத்தில் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். எனவே, பிரத்யேக பயிற்சியாளர் மூலம் அவரது உடல் அமைப்பு மாற்றப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.   கலை இயக்குநர் முத்துராஜ், படத்துக்கான செட் வேலைகளைத் தொடங்கிவிட்டார். வரும் 20ம் தேதி பூஜை போடப்பட்டு, 21ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. ‘மெர்சல்’, ‘சர்கார்’ வரிசையில், இதுவும் தீபாவளிக்கு ரிலீசாகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 63 படத்தில் அவருடன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
  சென்னை:

  தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் - அட்லி மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணையவிருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.

  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

  ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என படக்குழுவினர் இன்று தெரிவித்துள்ளனர். #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய்யை தளபதி என்று அழைத்து வருவதற்கு உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். #ThalapathyVijay #Udhayanidhi
  இளைய தளபதி என்று அழைக்கப்பட்டவர் நடிகர் விஜய். இவர் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் தளபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மெர்சல் திரைப்படத்தில் இருந்து தளபதி விஜய் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

  அரசியலில் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினை அவரது தொண்டர்கள், பொதுமக்கள் தளபதி ஸ்டாலின் என்று அழைத்து வருகிறார்கள். தற்போது விஜய்யை தளபதி என்று அழைத்து வருவதால், இணையதளத்தில் ஒருவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதியிடம் ‘விஜய்யை தளபதி என்று அழைப்பதை, திமுக வினர் எப்படி எடுத்துக்கொள்வர் என்று கேள்வி கேட்டிருக்கிறார்.  இதற்கு உதயநிதி ஸ்டாலின் ‘ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான்!’ என்று பதிவு செய்திருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய்யின் சர்கார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், தீபாவளிக்கு பட்டாச ரெடி பண்ணுங்க என்று டுவிட் போட்டிருக்கிறார். #Sarkar #Varalaxmi
  விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். அரசியல் கதையாக உருவாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. 

  விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில், தற்போது பேட்ச் ஒர்க்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இன்று முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக நடிகை வரலட்சுமி அறிவித்திருக்கிறார். மேலும், ‘இப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குனர் முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. விஜய்யுடன் நடிக்க இருந்த என் கனவு நினைவாகி இருக்கிறது. தீபாவளிக்கு பட்டாச ரெடி பண்ணுங்க’ என்று கூறியிருகிறார்.  சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், அக்டோபர் 2-ம் தேதி ஆடியோ வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். #Sarkar
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #Vijay #ThalapathyVijay
  கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

  கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர்.  தமிழில் நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட நிதியுதவி வழங்கியுள்ளார்கள்.   இந்நிலையில், நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ நடித்து வரும் விஜய்யை படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். #Vijay #Thalapathy
  விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். அரசியல் சார்ந்த கதையில் விஜய் நடிப்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்துக்கு வந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு மகிழ்ச்சி கரகோ‌ஷமிட்டனர்.

  ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடி போனார் விஜய். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. சர்கார் திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஆளப்போறான் தமிழன் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதுகிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் நடித்து வரும் ‘விஜய் 62’ படத்தின் தலைப்பு இன்று வெளியாக இருக்கும் நிலையில், பல டைட்டில் சமூக வலைத்தளத்தில் போலியான டைட்டில் வெளியாகி இருக்கிறது. #Vijay #Thalapathy62
  விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 21-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

  இந்நிலையில், நேற்று இரவு விஜய் படத்திற்கு ‘வேறலெவல்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் பரவியது. பின்னர், சிறிது நேரத்தில் ‘அல்லு’ என்றும், ‘ஷார்ப்’ என்றும் பெயர்கள் தலைப்பு வைத்திருப்பதாக போஸ்டர்கள் வெளியானது. இறுதியாக இது டைட்டில் இல்லடா என்றும் ஒரு போஸ்டர் வெளியானது.  இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள் இவை அனைத்தும் போலி என்றும் அதிகாரப்பூர்வமாக இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் சமாதானம் படுத்திக் கொண்டனர்.  விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இதில், சமகால அரசியல் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளை அலசியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அரசியல் சம்பந்தமாக உருவாகும் இந்தப் படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பழ.கருப்பையா, ராதாரவி இருபெரும் அரசியல் தலைவர்களாக நடிக்கின்றனர். ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். #Vijay62 #Thalapathy62 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வருவதை அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டியிருக்கும் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #Vijay #ThalapathyVijay
  தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் அரசியல் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவேன் என அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார்.

  இதற்கு அடுத்த தலை முறை நடிகர்களான அஜித், விஜய் ரசிகர்களும் தங்களது அபிமான நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

  குறிப்பாக மதுரையில் அஜித், விஜய்க்கு தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். வருகிற 22-ந்தேதி விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.  அதில் “தமிழர்களின் போராட்டம் தொடர்கதை. எங்கள் தளபதி அதை மாற்றிடுவார்”, வருங்கால முதல்வரே, விவசாயிகளின் தோழரே என அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்தில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

  கடந்த மே மாதம் இதேபோல் அஜித் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்களும் இதேபோன்று போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படமும் தீபாவளிக்கு வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. #Ajith #Vijay
  விஜய், அஜித்குமார் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இரண்டு படங்களையும் தீபாவளிக்கு கொண்டு வரும் முடிவோடு படக்குழுவினர் ஓய்வில்லாமல் வேலை செய்து வருகிறார்கள். இவற்றின் படப்பிடிப்புகளை பாதிக்கு மேல் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

  திரையுலகினர் மற்றும் தியேட்டர் அதிபர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளில் தொய்வு ஏற்பட்டது. ஸ்டிரைக்கால் அஜித்குமார் படப்பிடிப்பை தாமதமாகவே தொடங்கினர். எனவே இரண்டு படங்களும் தீபாவளிக்கு வருமா? அல்லது தள்ளிப்போகுமா? என்று சந்தேகம் நிலவியது.

  ஆனால் இரு படங்களும் தீபாவளிக்கு வருவது உறுதி என்று படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். விஜய்க்கு இது 62-வது படம். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இவருக்கும் விஜய்க்குமான கூட்டணி துப்பாக்கி, கத்தி படங்களில் ராசியாக அமைந்தன. அதுபோல் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.

  அரசியல் படமாக தயாராகிறது. ராதாரவியும், பழ கருப்பையாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தின் தலைப்பையும், முதல் தோற்றத்தையும் விஜய் பிறந்த நாளான வருகிற 22-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.  அஜித்குமாருக்கு இது 59-வது படம். விசுவாசம் என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சிவா டைரக்டு செய்கிறார். அஜித்குமார் - சிவா கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் படங்கள் வந்து வரவேற்பை பெற்றன. நான்காவது படத்திலும் இருவரும் இணைந்துள்ளனர்.

  இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்துகின்றனர். மும்பைக்கும் செல்கிறார்கள். பழிவாங்கும் கதையம்சத்தில் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. அஜித்குமார், அண்ணன்-தம்பியாக இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் பேச்சு உள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் பலியான சம்பவத்திற்கு பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், அஜித், விஜய் மௌனம் சாதித்து வருவது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. #Vijay #Ajith
  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் ரஜினி, கமல், சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் முதல் சூரி வரை எல்லா பெரிய, சின்ன நடிகர்களுமே தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் வலுவாக பதிவு செய்தனர். ஆனால் விஜய்யோ, அஜித்தோ இதுவரை வாயே திறக்கவில்லை.

  தமிழ்நாட்டில் ரஜினிக்கு பிறகு விஜய், அஜித் இருவருக்கு தான் ரசிகர்கள் அதிகம். இருவரது ரசிகர்களும் நினைத்தால் ஒரு செய்தியை உலக அளவிற்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் தமிழ்நாட்டில் நடந்த இத்தனை பெரிய சம்பவத்துக்கு இருவருமே கண்டனம் தெரிவிக்காதது அவர்களின் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

  ரசிகர் ஒருவர் இதுபற்றி கூறும்போது ‘விஜய்யாவது இதற்கு முன்பு சில பிரச்சினைகளில் கண்டனம் தெரிவித்தார். அனிதா பலியானபோது வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறினார். ஆனால் இந்த சம்பவத்தில் அவரும் கருத்து கூறவில்லை.

  இவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள் அதனை உலக அளவில் கொண்டு செல்லலாம் என்று காத்திருந்தோம். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாத மாதிரி இருந்துகொண்டார்கள். மிகவும் வேதனையாக இருக்கிறது’ என்றார். விஜய், அஜித் மட்டும் அல்லாது முன்னணி கதாநாயகிகளும் தூத்துக்குடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
  ×