என் மலர்

  சினிமா

  திரையுலக தளபதி விஜய் அண்ணா - தல அஜித் சார்: உதயநிதி
  X

  திரையுலக தளபதி விஜய் அண்ணா - தல அஜித் சார்: உதயநிதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய்யை தளபதி என்று அழைத்து வருவதற்கு உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். #ThalapathyVijay #Udhayanidhi
  இளைய தளபதி என்று அழைக்கப்பட்டவர் நடிகர் விஜய். இவர் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் தளபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மெர்சல் திரைப்படத்தில் இருந்து தளபதி விஜய் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

  அரசியலில் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினை அவரது தொண்டர்கள், பொதுமக்கள் தளபதி ஸ்டாலின் என்று அழைத்து வருகிறார்கள். தற்போது விஜய்யை தளபதி என்று அழைத்து வருவதால், இணையதளத்தில் ஒருவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதியிடம் ‘விஜய்யை தளபதி என்று அழைப்பதை, திமுக வினர் எப்படி எடுத்துக்கொள்வர் என்று கேள்வி கேட்டிருக்கிறார்.  இதற்கு உதயநிதி ஸ்டாலின் ‘ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான்!’ என்று பதிவு செய்திருக்கிறார்.
  Next Story
  ×