என் மலர்

  நீங்கள் தேடியது "Thala"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிய பிரபல இயக்குனருக்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் டிரெண்டாக்கி இருக்கிறார்கள். #ThalaAjith #Ajith
  பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சில பதிவுகளை செய்து வருவார். தற்போது நடிகர் அஜித்துக்கு ஒரு கடிதம் எழுதி பதிவு செய்திருக்கிறார்.

  இதில், 40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம் வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.., உங்களுக்காக காத்திருக்கும், பல கோடி மக்களில் நானும் ஒருவன்..,’ என்று பதிவு செய்திருக்கிறார்.

  இதற்கு அஜித் ரசிகர்கள் சிலர் வரவேற்றாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும், #அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும் என்று அஜித் ரசிகர்கள் பதிவு செய்து ட்விட்டரில் டிரெண்டாக்கி இருக்கிறார்கள்.  அஜித் சில தினங்களுக்கு முன்பு, அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது இயக்குனர் சுசீந்திரன் இவ்வாறு பதிவு செய்திருப்பது, விளம்பரத்திற்காகவும், அஜித்தின் கால்ஷீட்டிற்காகவும் இப்படி செய்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருக்கோவிலூரில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கட்-அவுட் சரிந்து விழுந்து ரசிகர் ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Ajith #Viswasam
  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். கட் அவுட், பேனர், பால் அபிஷேகம் என்று திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளனர்.

  இதில் திருக்கோவிலூரில் விஸ்வாசம் படத்தின் பெரிய கட்-அவுட் வைக்கும் போது, சரிந்து விழுந்திருக்கிறது. இந்த விபத்தில் அஜித் ரசிகர் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், 5 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   சிவா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் சண்டை காட்சிகளில் ஒரு எமோஷன் இருக்கும் என்று திலீப் சுப்புராயன் கூறியிருக்கிறார். #Viswasam
  அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் செய்திருக்கிறார்.

  இப்படம் குறித்து திலீப் சுப்பராயன் கூறும்போது, ‘அஜித் சார் மிகவும் கண்ணியமான, எளிமையான நபர். ஒவ்வொரு சண்டைக்கலைஞரையும் அவர் மதிக்கும் விதம் அவர்களுக்கு மிகப்பெரிய வியப்பாக இருந்தது. தொழில் என்று வந்து விட்டால் அவர் ஒருபோதும் குறுக்கிட மாட்டார். ட்ரெய்லரில் பார்த்து அனைவரும் பாராட்டும் மழை சண்டைக்காட்சியை பற்றி சிவா எனக்கு விவரித்த போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அஜித் சாரின் பைக் ஸ்டண்ட் பார்வையாளர்களுக்காக மிகவும் பரபரப்பாகவும், அதே நேரம் எமோஷனல் விஷயங்களையும் கொண்டிருக்கும். இதை பற்றி மேலும் சொல்ல முடியாது, அதை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் மிகச்சிறந்த அனுபவமாக  இருக்கும்" என்றார்.  மேலும், நடக்கவே சிரமப்படும் தரையில், சண்டை காட்சிகள் படமாக்கப்படும் சூழ்நிலையை நினைத்து பார்க்கவே சவாலாக இருந்தது. ஒட்டுமொத்த குழுவும் உறுதியுடன் இருந்தது, அதை சிறப்பாக நிறைவேற்ற எங்களுக்கு உதவியது" என்றார்.

  சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஜகபதிபாபு, விவேக், தம்பி ராமையா, கோவை சரளா, யோகிபாபு, பேபி அனிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அஜித்துடன் நான்கு படங்களில் பணியாற்றி இருக்கும் இயக்குனர் சிவா, ஐந்தாவது முறையாக இணைந்தால் அது வரம் என்று கூறியிருக்கிறார். #Viswasam #Ajith
  அஜித் - சிவா கூட்டணியில் இதுவரை ‘வீரம்,’ ‘வேதாளம்,’ ‘விவேகம்,’ ‘விஸ்வாசம்’ ஆகிய 4 படங்கள் உருவாகியுள்ளது. இதில், ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

  இந்நிலையில், இயக்குனர் சிவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அஜித்துடன் மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அஜித், ஒரு நல்ல மனிதர். சிறந்த நடிகர். அவரை வைத்து 4 படங்களை இயக்கியதில், சந்தோஷம். ஐந்தாவதாக மேலும் ஒரு படத்தில் இணைந்தால், அது வரம்’ என்றார்.  விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. #Viswasam #Ajith
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் இரண்டு படங்களை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார். #Thala59 #Ajith #BoneyKapoor
  தனது மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமான பேவியூ புராஜக்ட் எல்எல்பி (Bayview Projects LLP) நிறுவனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் போனி கபூர். விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் மற்றும் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் செய்த ‘பிங்க்’ இந்தி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் இது. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் படத்தின் மூலம் பாராட்டுக்களை குவித்த எச்.வினோத் இந்த படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்ட பின் விரைவில் அறிவிக்கபடுவார்கள். இந்த படம் இன்று அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. 

  அஜித் படம் தயாரிப்பது குறித்து போனி கபூர் கூறும்போது, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு நாள் அஜித் பிங்க் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தை தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என ஸ்ரீதேவியும் உடனடியாக அந்த எண்ணத்தை ஏற்றுக்கொண்டார். 

  தென்னிந்திய சினிமா துறையில், குறிப்பாக தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பை மேற்கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன். அஜித் என் மனைவி ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்த காலத்தில் இருந்தே நானும் அஜித்தும் ஒரு படத்தில் இணைய மிகுந்த ஈடுபாட்டுடன் காத்திருந்தோம். நாங்கள் இருவருமே எங்கள் இருவரது கேரியரிலும் சிறப்பு சேர்க்கும் ஒரு பொருத்தமான கதையை தேடினோம்.   'பிங்க்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று படப்பிடிப்பை துவக்கி, 2019ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னொரு படத்தையும் தயாரிக்கிறோம். அது 2019 ஜூலையில் துவங்கி, 2020 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டு படங்களும் ஜீ நிறுவனம் ஆதரவுடன் தயாராகிறது. அவருடன் பணிபுரியும் மிகச்சிறந்த அனுபவத்தை நான் எதிர்பார்க்கிறேன்.

  இயக்குனர் வினோத்தின் படைப்புகளை நான் பின்பற்றி வருகிறேன், மிகச்சிறந்த திரைப்படங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக, அவரது முந்தைய படமான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை மிகவும் யதார்த்தமாக எடுத்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. தனித்துவமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை தனது சிறந்த கதை சொல்லல் மூலம் சிறப்பாக செய்யும் அவர் தான் தமிழ் மொழியில் 'பிங்க்' படத்தை இயக்க சரியான நபராக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்’ என்றார். #Thala59 #Ajith #BoneyKapoor 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் நடிக்க இருக்கும் ‘தல 59’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க இருக்கிறார். #Ajith #Thala59
  அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில், அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் அறிந்தோம்.

  இந்நிலையில் இப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. பாலிவுட்டில் வரவேற்பை பெற்ற பிங்க் திரைப்படத்தின் ரீமேக் என்று உறுதி செய்யப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார்.   தற்போது இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதற்கு முன் அஜித் நடிப்பில் உருவான ‘பில்லா’, ‘ஏகன்’, ‘மங்காத்தா’, ‘பில்லா 2’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தை முடித்த நடிகர் அஜித், தற்போது குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார். #Thala #Ajith #Viswasam
  அஜித்குமார் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

  அஜித் நடிக்கும் அடுத்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிப்பதாகவும், சதுரங்க வேட்டை படத்தை இயக்கி பிரபலமான வினோத் இயக்குகிறார் என்றும் கூறப்பட்டது.

  போனிகபூர் 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்து அஜித்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பட வேலைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய பிங்க் படத்தின் ரீமேக் என்றும், தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதையில் மாற்றம் செய்கின்றனர் என்றும் பேசப்பட்டது.   ஆனால் இந்த படம் ‘பிங்க்’ ரீமேக் அல்ல என்று வினோத் சமூக வலைத்தள பக்கத்தில் மறுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு விளக்கம் அளித்துள்ள வினோத், ‘‘நான் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்பட எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் இல்லை. எனவே எனது பெயரில் போலியான கணக்குகளில் இருந்து வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்’’ என்று கூறியுள்ளார். 

  இந்த நிலையில் விஸ்வாசம் படம் முடிவடைந்த நிலையில் ஓய்வு எடுக்க குடும்பத்துடன் அஜித் கோவா புறப்பட்டுச் சென்றார். சென்னை திரும்பியதும் போனிகபூர் தயாரிக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தன்னுடைய காரை 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகருக்கு அறிவுரை கூறி அவரை நடிகர் அஜித் நெகிழ வைத்திருக்கிறார். #Thala #Ajith
  தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் கொண்ட பட்டியலில் இருப்பவர் நடிகர் அஜித். இவருடைய படங்கள் வெளியாகும் போதும், அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

  இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வீடும் அஜித் வீடு திரும்பும்போது, அவரது ரசிகர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து காரை பின் தொடர்ந்து வந்திருக்கிறார். அதையறிந்த அஜித், ரசிகருக்கு அறிவுரை கூறி நெகிழ வைத்திருக்கிறார்.

  இதுகுறித்து ரசிகர் கூறும்போது, ‘என் வாழ்நாளில் இதோடு நான்கு முறை தலயை சந்தித்து உள்ளேன் இதுவரை புகைப்படம் எடுத்ததில்லை. ஆனால் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் தலயை சந்தித்தேன் கூட்ட நெரிசலில் கூட தலயுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை. தல அவர்களின் காரை பின் தொடர்ந்தோம் 18Km.. 

  சற்று தொலைவு தல கார் நிறுத்த சொல்ல டிரைவர் இறங்கி வந்தார்.தல அழைத்தார் தல கூறியது என்னை நெகிழ வைத்தது. என் தம்பி உன் பெயர் என்ன என்றார். கணேஷ் என்றேன் தல உடனே கணேஷ் தம்பி இதுமாதிரி பின் தொடர்ந்து வருவதால் விபத்து ஏற்பட்டால் எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும். இது தவறு என்றார். உடனே Sorry அண்ணா என்றேன்.  உடனே தல, வா கணேஷ் போட்டோ எடுத்துக. ரொம்ப Tired ah இருக்கு அப்படியே எடுத்துக்கிறிங்களா என்று கேட்டார். அதுவே போதும் அண்ணா என்றேன். போட்டோ எடுத்தபின் விஸ்வாசம் கண்டிப்பா வெற்றி ஆகும் சார் என்றேன் Thanks கணேஷ் என்று என் பெயரை மூன்று முறை அழைத்தார்.

  நான் சொர்க்கத்திற்கே சென்று விட்டேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஸ்வாசம் படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Ajith
  சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

  அஜித் இரு விதத் தோற்றங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வசனக் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழு தற்போது ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவருகிறது.

  ஐதராபாத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டதைத் தொடர்ந்து படக்குழு மும்பை சென்று பாடல் காட்சியை படமாக்கிவருகிறது. இதைத் தொடர்ந்து புனேவில் படப்பிடிப்பு நடத்தப்படஉள்ளது.

  இதைத் தொடர்ந்து அஜித் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அது பாலிவுட்டில் வெளியான பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் எனவும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி மாதம் வினோத் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய்யை தளபதி என்று அழைத்து வருவதற்கு உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். #ThalapathyVijay #Udhayanidhi
  இளைய தளபதி என்று அழைக்கப்பட்டவர் நடிகர் விஜய். இவர் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் தளபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மெர்சல் திரைப்படத்தில் இருந்து தளபதி விஜய் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

  அரசியலில் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினை அவரது தொண்டர்கள், பொதுமக்கள் தளபதி ஸ்டாலின் என்று அழைத்து வருகிறார்கள். தற்போது விஜய்யை தளபதி என்று அழைத்து வருவதால், இணையதளத்தில் ஒருவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதியிடம் ‘விஜய்யை தளபதி என்று அழைப்பதை, திமுக வினர் எப்படி எடுத்துக்கொள்வர் என்று கேள்வி கேட்டிருக்கிறார்.  இதற்கு உதயநிதி ஸ்டாலின் ‘ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான்!’ என்று பதிவு செய்திருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் நடிகை சாக்‌ஷி அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகையாக உணர்ந்த தருணம் என்று கூறியிருக்கிறார். #SakshiAgarwal #Ajith
  மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து திருட்டி விசிடி, கககபோ, படங்களில் நடித்த இவர் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் மலையாளத்தில் ஓராயிரம் கினாக்கள் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

  இவர் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகையான இவர், தற்போது அஜித்துடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.  அதில், ‘அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் மேன்மை கொண்ட, உத்வேகம் தரக்கூடிய சிறந்த மனிதர். அவரை சந்தித்தது ஆசிர்வாதமாக என் வாழ்க்கை முழுவதும் மனதில் வைத்திருப்பேன். பெரிய ரசிகையாக உணர்ந்த தருணம் இது’ என்று அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியில் பதிவு செய்திருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin