என் மலர்

  சினிமா

  மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
  X

  மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அஜித்துடன் நான்கு படங்களில் பணியாற்றி இருக்கும் இயக்குனர் சிவா, ஐந்தாவது முறையாக இணைந்தால் அது வரம் என்று கூறியிருக்கிறார். #Viswasam #Ajith
  அஜித் - சிவா கூட்டணியில் இதுவரை ‘வீரம்,’ ‘வேதாளம்,’ ‘விவேகம்,’ ‘விஸ்வாசம்’ ஆகிய 4 படங்கள் உருவாகியுள்ளது. இதில், ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

  இந்நிலையில், இயக்குனர் சிவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அஜித்துடன் மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அஜித், ஒரு நல்ல மனிதர். சிறந்த நடிகர். அவரை வைத்து 4 படங்களை இயக்கியதில், சந்தோஷம். ஐந்தாவதாக மேலும் ஒரு படத்தில் இணைந்தால், அது வரம்’ என்றார்.  விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. #Viswasam #Ajith
  Next Story
  ×