என் மலர்

  நீங்கள் தேடியது "Viswasam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘விஸ்வாசம்‘ படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு ரிலீசாகவிருக்கிறது. #Viswasam #AjithKumar
  அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

  குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 40 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்றுள்ள நிலையில், கன்னடத்தில் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

  கடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடகாவில் பிற மொழியிலிருந்து கன்னடத்தில் டப் செய்த படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. இதேபோல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படம் வருகிற மார்ச் 1-ல் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Viswasam #AjithKumar #Nayanthara

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘விஸ்வாசம்‘ படத்திற்கு கர்நாடகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு படம் ரிலீசாகவிருக்கிறது. #Viswasam #AjithKumar
  அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

  குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்தவுடன் கன்னடத்தில் வெளிவரும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  கடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடகாவில் பிற மொழியிலிருந்து கன்னடத்தில் டப் செய்த படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. #Viswasam #AjithKumar #Nayanthara

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சினிமா படங்களின் மூலம் வசூலாகும் தொகையை கணக்கிட்டு சிலர் பிழைப்பு நடத்துகிறார்கள், வசூலை பற்றி பேசுவது தேவயில்லாதது என்று கார்த்திக் சுப்புராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார். #Petta #Viswasam #KarthikSubbaraj
  பொங்கலுக்கு ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்‘ படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, வெற்றி படங்கள் என அறிவிக்கப்பட்டாலும் எந்தப் படத்தின் வசூல் அதிகம் என ரசிகர்களிடையே போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் இரண்டு படத்தின் தயாரிப்பு தரப்புமே வசூல் விவரங்களை வைத்து போட்டி போட ஆரம்பித்துவிட்டன.

  தற்போது இது குறித்து ‘பேட்ட’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கருத்து தெரிவித்துள்ளார். “எந்த ஓட்டலிலாவது வெளியே இன்று ஆயிரம் இட்லி விற்கப்பட்டது என்று அறிவிப்புப் பலகை வைத்துள் ளார்களா? இல்லையே. உணவு நன்றாக இருக்கிறதா, இல்லையா அது போதும்.  அதே போலத்தான் திரைப்படங்களும். படம் பிடித்திருக்கிறதா இல்லையா, நன்றாக இருக்கிறதா, சென்று பார்ப்போம். இப்படி வசூலை வைத்துப் பேசுவது தேவையில்லாத வணிகமயமாக்கல். இப்படி வசூல் நிலவரங் களை பற்றிப் பேசுவதெல்லாம் சில பேருக்கு தொழில். இப்படியான தகவல்களைப் போட்டு ட்ராக்கர்ஸ் என்பவர்கள் சம்பாதிக்கிறார்கள். இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களே இருக்கின்றனர்” என்று கூறியுள்ளார். #Petta #Viswasam #KarthikSubbaraj

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #Viswasam #AjithKumar
  விஸ்வாசம் படம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  “சமீபத்தில் வெளியான நடிகர் அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது.

  கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரைக் காப்பாற்றச் செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது. இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.  பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. ‘விஸ்வாசம்‘ படத்தின் கதாநாயகன் அஜித் மற்றும் இயக்குனர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்’’ . இவ்வாறு சரவணன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். #Viswasam #AjithKumar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘விஸ்வாசம்’ படம் குறித்து தயாரிப்பாளரிடம் எல்லாம் கடவுள் கையில் என்று அஜித் கூறியிருக்கிறார். #Viswasam #Ajith
  சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ‌ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்‘. தமிழகத்தின் வசூலில் ‘பேட்ட’ படத்தைத் தாண்டி ‘விஸ்வாசம்‘ படமே முதலிடத்தில் உள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியதாவது:-

  எடிட்டிங்கில் படத்தைப் பார்த்தவுடனே, கண்டிப்பாக வெற்றியடையும் என்று நம்பினோம். படம் வெளியானவுடன் அஜித் சாரிடம் இதை எதிர்பார்க்கவில்லை, அஜித் சாருடைய படங்களில் இது பெஸ்ட் என்று சொல்றாங்க. எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது.   படம் வெளியான அன்று காலையில் அஜித் சாருக்கு போன் பண்ணி, ‘அனைத்து ஊர்களிலிருந்து வரும் ரிப்போர்ட் ரொம்ப நல்லாயிருக்கு. ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கு சார். உங்களுடைய நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்’ என்றேன். அதற்கு ‘அனைத்துமே கடவுள் கையில் தான் இருக்கிறது’ என்றார். அவர் ரொம்ப கடினமாக உழைக்கும் மனிதர். அவருடைய உழைப்பு படத்தில் தெரியும்’.

  இவ்வாறு அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar #Nayanthara
  தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கதை திருட்டு சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. சர்கார் கதை திருட்டு விவகாரம் ஐகோர்ட்டு வரை போனது. அடுத்து விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற 96 படத்துக்கும் கதைத்திருட்டு பிரச்சினை வந்தது.

  தற்போது அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் விஸ்வாசம் படத்துக்கும் இதே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கணவனின் வன்முறை குணத்தால் அவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த மகனிடமே தான் யார் என்ற உண்மையை மறைத்து பழகுகிறார் அப்பா.  பின்னர் மகனுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட அதை தந்தை எப்படி சரி செய்கிறார்? மீண்டும் அந்த குடும்பம் எப்படி இணைகிறது என்பது 2007-ம் ஆண்டு வெளியான துளசி படத்தின் மையக்கரு. இந்த படத்தில் வெங்கடேஷ்-நயன்தாரா இருவரும் கணவன் மனைவியாக நடித்து இருந்தனர்.

  இந்த கதைதான் விஸ்வாசம் படத்தின் மையக்கதையும் கூட. 10 ஆண்டு இடைவெளி இருப்பதால் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள். மையக்கரு இரண்டு படங்களுக்கும் ஒன்றுதான். ஆனால் டைட்டிலில் கதையை எழுதியவர்களாக சிவா மற்றும் ஆதி நாராயணனின் பெயர்கள்தான் இடம்பெற்றுள்ளன. இது கூடிய விரைவில் பிரச்சினையை கிளப்புமா அல்லது உரிமம் பெற்றுதான் படத்தை எடுத்தார்களா என்பது போக போகத் தான் தெரிய வரும். #Viswasam #AjithKumar #Nayanthara

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்கும் பேட்ட, விஸ்வாசம் படங்களின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. #Petta #Viswasam
  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படமும் நேற்று முன்தினம் வெளியானது.

  இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்ததால் பலத்தபோட்டி ஏற்பட்டது. ரஜினி, அஜித் ரசிகர்கள் இதனை திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தார்கள். சில இடங்களில் மோதலும் நடைபெற்றது.

  தொடர்ந்து 2 படங்களில் எது வெற்றி படம், எது வசூலில் அதிகம் என்று ரஜினி-அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  பேட்ட, விஸ்வாசம் படங்களின் வசூல் நிலவரங்கள் பற்றி வினியோகஸ்தர்கள் தரப்பில் கூறியதாவது:- இரண்டு படங்களுமே நன்றாக வசூலித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் வசூலில் விஸ்வாசம் தான் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் பேட்ட வசூல் ரூ.23 கோடி ஆகும். ஆனால் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ.26 கோடி வசூலித்துள்ளது.

  சென்னையைப் பொறுத்த வரை ‘பேட்ட’ படத்தின் வசூல் 1.18 கோடியை தொட்டுள்ளது. ஆனால் ‘விஸ்வாசம்‘ வசூல் 88 லட்சம் தான் வந்துள்ளது.  சென்னையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் தான் அதிகம். இங்கே பேட்ட படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் இதர பகுதிகளின் வசூலைப் பார்த்தால் தமிழகத்தில் ‘விஸ்வாசம்‘ தான் அதிகம். இந்த வசூலை விட சுமார் ரூ.3 கோடி குறைவாகவே ’பேட்ட’ வசூல் இருக்கும்.

  தமிழகத்தில் விஸ்வாசம் வசூல் குவிப்பது போல வெளிநாடுகளில் பேட்ட வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. பேட்ட படம் ரிலீசான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வசூலித்துள்ளது.

  விஸ்வாசம் உலக அளவில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது. பேட்ட படம் அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. ஆனால் ‘விஸ்வாசம்‘ படம் இதுவரை 83 ஆயிரம் டாலர்கள் தான் வசூல் செய்துள்ளது.

  ‘பேட்ட’ படத்தின் ஓடும் நேரம் 2 மணி 51 விநாடிகள். எனவே அதிக காட்சிகள் திரையிட முடியாது. இடைவேளை எல்லாம் விட்டு, ஒரு காட்சி முடியவே குறைந்தது மூன்றரை மணி நேரமாகும். இதனால், குறைவான காட்சிகளே திரையிட இயலும். இரண்டாவது நாளில் இருந்து பேட்ட படத்துக்கு கூடுதலாக 100 திரைகள் கிடைத்து இருக்கின்றன.  எனவே பேட்ட வசூல் இனிதான் அதிகரிக்கும். தற்போதுள்ள நிலவரப்படி எது அனைத்து தரப்புக்கும் லாபகரமான படமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. காரணம், இப்போது வரை 2 படங்களுக்குமே டிக்கெட் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது.

  பல திரையரங்குகளில் சீட்கள் போக சேர்கள் போட்டு ரசிகர்களை அமர வைக்கிறார்கள். அந்த அளவுக்கு கூட்டம் உள்ளது. ஜனவரி 16-ந் தேதிக்கு பிறகு எந்த படம் லாபகரமாக இருக்கும் என்பதை சரியாக கூறிவிடலாம்.

  இப்போதுள்ள வசூலை வைத்து சொல்ல வேண்டுமானால், இரண்டுமே சரி சமமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். அதிகபட்சம் தமிழகத்தின் இறுதி வசூலில் ஒரு படம் 20 சதவீதம் குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.’

  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #Petta #Viswasam #Rajinikanth #AjithKumar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இணையதளத்தில் ரஜினியின் பேட்ட திரைப்படமும், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. #Petta #Viswasam
  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ரஜினியின் பேட்ட, அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் இன்று வெளியானது. இவர்களது ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். இரண்டு படங்களுக்கும் சிறப்பான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

  இந்நிலையில், இவ்விரு படங்களும் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக பேட்ட, விஸ்வாசம் படங்களை இணையத்தில் வெளியிட தடை விதித்த நிலையில், தற்போது திருட்டு தனமாக இணையத்தில் வெளியாகியுள்ளது.  பேட்ட படத்தை கார்த்திக் சுப்புராஜும், விஸ்வாசம் படத்தை சிவாவும் இயக்கியுள்ளனர். #Petta #Viswasam
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருக்கோவிலூரில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கட்-அவுட் சரிந்து விழுந்து ரசிகர் ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Ajith #Viswasam
  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். கட் அவுட், பேனர், பால் அபிஷேகம் என்று திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளனர்.

  இதில் திருக்கோவிலூரில் விஸ்வாசம் படத்தின் பெரிய கட்-அவுட் வைக்கும் போது, சரிந்து விழுந்திருக்கிறது. இந்த விபத்தில் அஜித் ரசிகர் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், 5 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   சிவா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓமலூரில் நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் பட பேனர்களை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Viswasam
  ஓமலூர்:

  ஓமலூரில் நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படம் இன்று வெளியானது இதற்கு வரவேற்பு தெரிவித்தும், படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கபட்டுள்ளது.

  இந்த நிலையில் ஓமலூர் பேரூராட்சி பகுதிகளில் பேனர்கள் வைக்க அஜித்குமார் ரசிகர்கள் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், பேரூராட்சி நிர்வாகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  இதனால் ஓமலூர் பேரூராட்சி வணிக வளாகத்தின் மேலே உள்ள விளம்பர தட்டிகள் மீதும் வைக்கப்பட்டது. இதனிடையே ஓமலூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அஜித் பேனர் வைக்கப்பட்டது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஓமலூர் பேரூராட்சி அதிகாரிகள் பேனர் வைக்கப்பட்ட வணிக வளாகத்திற்கு சென்று ஆய்வுகள் செய்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற முயன்றனர்.

  அப்போது அங்கே வந்த திமுக சமூக ஊடாக பிரிவு நிர்வாகிகள் பிரகாஷ், சீனிவாசன் ஆகியோரும், அஜித் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். பேனரை அகற்றகூடாது என்றும் அகற்றினால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அப்போது பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி வணிக வளாக பகுதிகளில் அனுமதின்றி பேனர் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தொடர்ந்தே இங்கே வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

  இதனை திமுக நிர்வாகிகள் மற்றும் அஜித் ரசிகர்கள் ஏற்க மறுத்த தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த கூட்டத்தினரை விரட்டி அடித்தனர். தொடர்ந்து வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டு, அதற்காக அமைக்கபட்டிருந்த இரும்பு தூண்களும் அகற்றப்பட்டது. தொடர்ந்து அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #Viswasam
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தற்போது புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டிருக்கும் மினர்வா தியேட்டரில் விஸ்வாசம் படத்திற்கு ரசிகர்கள் குவிந்துள்ளனர். #Viswasam #Batcha
  சென்னையில் பழமையான தியேட்டர்களில் ஒன்று மினர்வா. பிராட்வேயில் டேவிட்சன் தெருவில் சிறிய குடியிருப்புகள், குடோன்களுக்கு இடையே மினர்வா தியேட்டர் இயங்கி வந்தது.

  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் டபிள்யூ.எச்.மூர்ச் என்ற வெள்ளையர் இந்த தியேட்டரை நிறுவினார். தனது பெயரையே மூர்ச் என சூட்டி 1916-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி ஆங்கில நாளிதழில் விளம்பரம் செய்து திறப்பு விழா நடத்தினார்.

  அதில் சென்னை மாகாணத்தில் முதலாவது குளுகுளு வசதியுடன் கூடிய தியேட்டர் என விளம்பரம் செய்யப்பட்டது. 1930-ம் ஆண்டு இதற்கு மினர்வா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆரம்ப காலம் முதல் இங்கு ஆங்கிலப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தது. அப்போது சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் ஆங்கிலப்படங்கள் தான் திரையிடப்பட்டு வந்தன.

  புகழ்பெற்ற ஆங்கில பட கம்பெனியான பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் மினர்வா தியேட்டரை ஆங்கிலப் படங்களை திரையிடுவதற்கென்றே பல வருடங்கள் ஒப்பந்தம் செய்து இருந்தது. 

  ஆங்கிலம், தமிழ் தவிர மினர்வா தியேட்டரில் இந்திப் படங்களும் வெளியானது. காலப்போக்கில் மினர்வா தியேட்டரின் பெயர் மங்கியது. அதற்கு காரணம் தியேட்டர் அமைந்த இடம் போக்குவரத்து நெருக்கடி மிகுந்ததாக மாறிவிட்டது.  10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எம்.பாட்சா என்பவர் மினர்வா தியேட்டரை விலைக்கு வாங்கி அதைப் புதுப்பித்து மாற்றி அமைத்தார். பாட்சா என்று பெயரை மாற்றி மீண்டும் சினிமா படங்களை திரையிட்டு வருகிறார். மற்ற தியேட்டர்கள் போல் இல்லாமல் இங்கு குறைந்த விலையில் ரூ.15, ரூ.12 என டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  தரைத்தளத்தில் குடோனும், முதல் தளத்தில் பாட்சா தியேட்டரும் இயங்கி வருகிறது. இன்று பாட்சா தியேட்டரில் அஜித் நடித்த விஸ்வாசம் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அஜித் ரசிகர்கள் பாட்சா தியேட்டர் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து படம் பார்க்க வந்து இருந்தனர். இதனால் அந்தப்பகுதி ரசிகர்களால் மீண்டும் களை கட்டத் தொடங்கியது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print