search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Vivekh"

  பள்ளிகளில் அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்றும், விடுமுறை நாட்களில் ஏரி, குளங்களை தூர்வார இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் கொடைக்கானலில் விவேக் கூறினார்.
  மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கடந்த 1978-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் முன்னாள் மாணவரும், நடிகருமான விவேக் கலந்து கொண்டார். பின்னர் அவர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் வறண்டதுடன், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்ய வேண்டும் என்றால் தொடர்ந்து மரக்கன்றுகளை நட வேண்டும். பள்ளிகளில் அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார இளைஞர்கள் முன்வர வேண்டும்.  தற்போது மரக்கன்றுகள் நடவு செய்தால் மட்டும் தான் 10 ஆண்டுகளில் மழை பொழிவை பெற முடியும். ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலும், அரசியான ஊட்டியையும் கிழவியாக மாற்றி வருகிறோம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்துக்கு அதிகளவு மரங்கள் வெட்டப்பட்டதே காரணம் ஆகும். இவ்வாறு அவர் கூறினர். 

  இதையடுத்து அரசியலுக்கு வருவீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நல்ல கருத்துகளை சினிமா மூலம் எடுத்துச் சொல்வதாகவும், வாய்ப்பு இருந்தால் அரசியலுக்கு வருவேன் என்றும் தெரிவித்தார்.

  அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் இளம் நாயகிகள் பலரும் நடித்து வரும் நிலையில், மற்றுமொரு நாயகியாக அம்ருதா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
  விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கால்பந்து போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு படமாக்கி வந்த நிலையில், தற்போது பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்கள்.

  இந்த நிலையில், படைவீரன், காளி உள்ளிட்ட படங்களில் நடித்த அம்ருதா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

  படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

  அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் தலைப்பு என்று சில பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 63 என்று தலைப்பு வைத்துள்ளார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

  இந்த நிலையில் படத்துக்கான பெயரை படக்குழுவினர் தேர்வு செய்துவிட்டதாகவும், விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் 21-ந் தேதி படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் போஸ்டர் வெளியாக இருக்கிறது. அட்லி - விஜய் கூட்டணியில் உருவான தெறி, மெர்சல், சர்கார் படங்களின் தலைப்புகளும் இதே தேதியில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

  அந்த வகையில், தளபதி 63 படத்திற்கு வெறி, வெறித்தனம், மைக்கேல், கேப்டன் மைக்கேல் உள்ளிட்ட பெயர்களில் ஒன்றை தலைப்பாக அறிவிப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.  விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், ஜாக்கி ஷெராப், இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

  ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

  அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Thalapathy63 #Vijay
  அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் விஜய் பேருந்து ஒன்றில் இருந்து இறங்குவது போன்ற ஒரு சிறிய வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அந்த வீடியோவில் விஜய் ஸ்டைலிஷ் தோற்றத்தில் இருந்தார்.

  தற்போது விளையாட்டு மைதானத்தில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இதில் விஜய் களத்திற்கு வெளியே கழுத்தில் காலர் பெல்ட் அணிந்து கொண்டு வீல் சேரில் உட்கார்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.   விஜய்யின் 63-வது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், யோகி பாபு, இந்துஜா, ஆத்மிகா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொலம்மா, ஞானசம்பந்தம், ஆனந்த்ராஜ், சாய் தீனா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

  ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். #Thalapathy63 #Vijay #Nayanthara

  அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மூன்று இளம் நடிகைகள் ஒப்பந்தமாகி உள்ளனர். #Thalapathy63 #Vijay
  அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இதனால் கால்பந்து வீராங்கனைகளாக இளம் நடிகைகள் பலர் படத்தில் இணைந்து வருகின்றனர்.

  ஏற்கனவே இந்துஜா, ரெபா மோனிக்கா ஜான் ஆகியோர் நடித்து வரும் நிலையில் தற்போது 96 படத்தில் விஜய் சேதுபதியுடன் மாணவியாக நடித்த வர்ஷா பொல்லம்மா இணைந்துள்ளார். இந்த மாத இறுதி வரை சென்னையில் படப்பிடிப்பை நடத்தும் படக்குழு அதன்பின் டெல்லி செல்ல உள்ளது. டெல்லியில் மே 3-ந் தேதி முதல் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது.  நயன்தாரா தற்போது தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்துவரும் நிலையில், விரைவில் அவர் இந்தப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #Thalapathy63 #Vijay #Nayanthara #VarshaBollamma

  அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Thalapathy63 #Vijay
  அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் படமாகிறது.

  படப்பிடிப்பு தளத்தில் 100 அடி உயரத்தில் கிரேனில் தொங்கவிடப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்தததில், அங்கிருந்த தொழிலாளி செல்வராஜ் (52) என்பவருக்கு காயம் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Thalapathy63 #Vijay #Nayanthara
  அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. #Thalapathy63 #Vijay
  அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் படமாகிறது.

  இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

  பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. பின்னர் மெர்சல் படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது அட்லி - ஷாருக்கான் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதன்மூலம் விஜய் படத்தில் ஷாருக்கான் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நிலவியது.  இந்த நிலையில், தளபதி 63 படத்தில் ஷாருக்கான் வில்லனாக நடிப்பதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த படத்தில் வில்லத்தனமான மற்றொரு கதாபாத்திரத்தில், கால்பந்து விளையாட்டுக் கழகம் ஒன்றின் தலைவராக ஜாக்கி ஷெராப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #SharukhKhan #Atlee

  விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக், சார்லி, தேவ், சார்லி, பூஜா தேவாரியா, பெய்ஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வெள்ளைப்பூக்கள்' படத்தின் விமர்சனம். #VellaiPookal #VellaiPookalReview
  விவேக் சிக்கலான வழக்குகளை திறமையாக விசாரித்து குற்றவாளிகளை பிடிக்கும் காவல் அதிகாரி. முக்கியமாக குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உளவியலுக்குள் நுழைந்து ஒவ்வொரு வழக்கையும் கண்டுபிடிக்கிறார்.

  அமெரிக்கா சென்ற அவருடைய மகன் அங்கே அமெரிக்க பெண்ணை காதல் திருமணம் செய்து கொள்வதால், அவருடனான பேச்சுவார்த்தை நிறுத்திவிடுகிறார்.   இந்த நிலையில் பணி ஓய்வு பெறும் விவேக், தனது நண்பரின் வற்புறுத்தலால் அமெரிக்காவில் வசிக்கும் தனது மகன் வீட்டுக்கு செல்கிறார். அங்கு தான் வசிக்கும் தெருவில் நடக்கும் மர்மமான சம்பவங்களை விசாரிக்க தொடங்குகிறார். அந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக தொடர் கொலைகள் நிகழ்கின்றன. ஒரு கட்டத்தில் விவேக்கின் மகனும் கடத்தப்படுகிறார்.

  கடைசியில் அந்த கொலையாளி யார்? அவர் கொலைகள் செய்வதற்கான காரணம் என்ன? அதனை விவேக் எப்படி கண்டுபிடிக்கிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.  காமெடியில் இருந்து சீரியசான கதாபாத்திரத்தில் விவேக், கதையின் நாயகனாக படத்தை தாங்குகிறார். விசாரணை காட்சிகளிலும் மகன் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் உணர்வுபூர்வ காட்சிகளிலும் அனுபவ நடிப்பு தெரிகிறது. 

  விவேக்குக்கு கிடைக்கும் அமெரிக்க நண்பராக சார்லி, விவேக் மகனாக தேவ், அவரது மனைவியாக பெய்ஜ் ஹெண்டர்சன், தேவ் தோழியாக பூஜா தேவரியா ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள்.  தமிழ்நாட்டு அதிகாரி அமெரிக்காவுக்கு சென்று விசாரிப்பது என்பது சில படங்களில் பார்த்த கதைதான் என்றாலும், திரைக்கதை புதிதாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது. அன்றாடம் நடக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களை விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக கொடுத்த விதத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் விவேக் இளங்கோவன். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், கடைசியில் ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுக்கிறது.

  ஜெரால்டு பீட்டரின் ஒளிப்பதிவில் வித்தியாசமான அமெரிக்காவை பார்க்க முடிகிறது. ராம்கோபால் கிருஷ்ண ராஜின் பின்னணி இசையும், கேஎல்.பிரவீனின் படத்தொகுப்பும் திகில் கூட்டுகிறது.

  மொத்தத்தில் `வெள்ளைப்பூக்கள்' பூக்கட்டும். #VellaiPookal #VellaiPookalReview #Vivekh

  அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் கதை தன்னுடையது என்றும், படப்பிடிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறும்பட இயக்குனர் செல்வா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #Thalapathy63 #Vijay
  பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து அட்லி ‘தளபதி 63’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  இந்த நிலையில், குறும்பட இயக்குநர் செல்வா, தளபதி 63 படத்தின் கதை தன்னுடையது என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

  பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து நான் 265 பக்கங்கள் கொண்ட கதையை எழுதினேன். அந்த கதையை சில தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்தேன். இந்நிலையில் அட்லி இந்த கதையை இயக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே அந்த படத்தின் படப்பிடிப்புக்கு தடை விதிக்க வேண்டும்.  கதை திருட்டு குறித்த இந்த வழக்கு வருகிற 23-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

  செல்வா தொடர்ந்துள்ள இந்த வழக்கில் இயக்குநர் அட்லி, தயாரிப்பு நிறுவனம் மற்றும் எழுத்தாளர் சங்கத்தை எதிர் மனுதாரர்களாக சேர்த்துள்ளார். #Thalapathy63 #Vijay

  விவகே் இளங்கோவன் இயக்கத்தில் விவேக், சார்லி, பூஜா தேவாரியா நடிப்பில் உருவாகி இருக்கும் `வெள்ளைப்பூக்கள்' படத்தின் முன்னோட்டம். #VellaiPookkal #Vivekh
  இண்டஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அஜய் சம்பத், திகா சேகரன் இணைந்து தயாரித்திருக்கும் படம் `வெள்ளைப்பூக்கள்'.

  விவேக், சார்லி, பூஜா தேவாரியா, தேவ், பெய்ஜ் ஹெண்டர்சன், கஜராஜ், டைலர் ராய், பெய்டன் ஜஸ்டின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  ஒளிப்பதிவு - ஜெரால்டு பீட்டர், இசை - ராம்கோபால் கிருஷ்ணராஜூ, படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல்., பாடல்கள் - மதன் கார்க்கி, ஒலி வடிவமைப்பு - குணால் ராஜன், கலை - சுப்ரியா கிருஷ்ணன், தயாரிப்பு - அஜய் சம்பத், திகா சேகரன், திரைக்கதை - சண்முக பாரதி, விவேக் இளங்கோவன், இயக்கம் - விவேக் இளங்கோவன்.  படம் பற்றி இயக்குநர் பேசும்போது,

  அமெரிக்காவை சேர்ந்த பொறியாளரான விவேக் இளங்கோவன் இந்த படத்துக்காக என்னை அணுகினார். முழு கதையையும் படித்து பார்த்த நான் இந்த கதைக்கு சத்யராஜ் போன்ற ஒருவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கூறிவிட்டேன். ஆனால் அவரோ இந்த வேடத்தில் இதுவரை பார்த்திராத ஒருவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். ஓய்வுபெற்ற டிஐஜி வேடம். முதன்முதலாக இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறேன் என்றார். 

  படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #VellaiPookkal #Vivekh

  வெள்ளைப்பூக்கள் டீசர்: