என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா

X
ஷாருக்கானுடன் அட்லி சந்திப்பு - தளபதி 63 படத்தில் நடிப்பது உறுதியாகுமா?
By
மாலை மலர்10 April 2019 4:41 AM GMT (Updated: 10 April 2019 4:41 AM GMT)

சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியின் போது அட்லி, ஷாருக்கான் இருவரும் சந்தித்த நிலையில், அவர் தளபதி 63 படத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Thalapathy63
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படத்திற்காக பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்று தயாராகி வருகிறது.
விரைவில் அங்கு படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது அட்லி - ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் விஜய் படத்தில் ஷாருக்கான் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #SharukhKhan #Atlee
Vijay 63 Atlee Vijay Nayanthara Vivekh Yogi Babu Kathir Indhuja Anandraj Daniel Balaji Sai Dheena AR Rahman GK Vishnu Muthuraj Gnanasambandam SHarukh Khan விஜய் அட்லி விஜய் 63 நயன்தாரா விவேக் யோகி பாபு கதிர் இந்துஜா ஏ.ஆர்.ரஹ்மான் ஜி.கே.விஷ்ணு முத்துராஜ் ஆனந்த்ராஜ் டேனியல் பாலாஜி சாய் தீனா ஞானசம்பந்தம் ஷாருக்கான்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
