என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் ஷாருக்கான்"

    • தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
    • சிறந்த நடிகை விருதை வென்றார் ராணி முகர்ஜி அறிவிப்பு.

    2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    இதில், இந்தியில் சிறந்த நடிகர் விருது - ஷாருக்கான் (ஜவான்) மற்றும் விக்ராந்த் மாஸி (12 பெயில்)க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த நடிகை விருதை வென்றார் ராணி முகர்ஜி (படம்: சாட்டர்ஜி vs நார்வே) அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகாரி சமீர் வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.
    • புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிகாரி சமீர் வான்கடேவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.

    புதுடெல்லி:

    மும்பையில் போதைபொருள் கடத்தல் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு ஒரு சொகுசு கப்பலில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டார். அவரை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கைது செய்து விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் ஆர்யன்கான் மீது வழக்கு பதியாமல் இருக்க அதிகாரி சமீர் வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது.

    இந்த புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிகாரி சமீர் வான்கடேவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. அதில் அவர் இன்று மும்பை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என கூறியுள்ளது.

    • உடலுக்கு உயிர் போன்றது நாட்டின் பாராளுமன்றம்.
    • இந்திய பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில்.

    மும்பை :

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பாராட்டி திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.

    இந்தி நடிகர் ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நமது அரசியல் அமைப்பை நிலைநிறுத்தும், மகத்தான நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒருதாய் மக்களின் பன்முகத்தன்மையை பாதுகாப்பவர்களுக்கு என்ன ஒரு அற்புதமான வீடு!. மகிமையான இந்தியா என்ற பழைய கனவுடன் புதிய இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம். ஜெய் ஹிந்த். எனது பாராளுமன்றம், எனது பெருமை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் அவர் அதே பதிவில் ஆடியோ மூலம், "உடலுக்கு உயிர் போன்றது நாட்டின் பாராளுமன்றம். ஜனநாயகத்தின் ஆன்மா புதிய வீட்டில் வலுவாக இருக்கவும், சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை பல யுகங்களுக்கு தொடர்ந்து வளர்க்கவும் எனது உருக்கமான பிரார்த்தனைகள்" என கூறியுள்ளார்.

    நடிகர் அக்ஷய் குமார் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத்தின் புகழ்பெற்ற புதிய கட்டிடத்தை பார்த்து பெருமை அடைகிறேன். இது என்றும் இந்தியாவின் வளர்ச்சி கதையில் சின்னமாக இருக்க வேண்டும். டெல்லியில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு இருப்பதை கவனித்து இருக்கிறேன். இன்று இந்த புத்தம் புதிய பிரமாண்ட கட்டிடத்தை பார்க்கும் போது என் இருதயம் பெருமிதம் கொள்கிறது. இந்திய பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில். இது புதிய இந்தியாவின் சின்னம். இந்தியா கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் மட்டும் முன்னோடியாக இல்லாமல், வளர்ச்சி மூலம் உலகத்திலும் முன்னோக்கி செல்கிறது. இந்த நாளை சாத்தியமாக்கிய பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். இந்தியா வரும் ஆண்டுகளில் மேலும் வளர கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் குறித்து பெருமிதமாக கருத்து தெரிவித்த நடிகர் ஷாருக்கான், அக்ஷய் குமார் பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். அவர் டுவிட்டரில் 2 பேரின் கருத்தையும் பாராட்டி பதில் அளித்து உள்ளார்.

    • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
    • இதன் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் ரஜினி சென்றுள்ளார்.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.


    ஜவான்

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வந்தது.

    இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் ஷாருக்கான் சென்னையில் நடந்த படப்பிடிப்பை பற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இந்த 30 நாள் படக்குழுவினருடன் சிறப்பாக இருந்தது. தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார். நயன்தாராவுடன் படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி செய்தது, விஜய் சேதுபதியுடன் ஆழ்ந்து உரையாடியது மற்றும் தளபதி விஜய் தனக்கு சுவையான உணவை தந்தார்.


    ஷாருக்கான்

    மேலும் அட்லீ மற்றும் பிரியா உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி. இப்போது சிக்கன் 65 செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார். ஷாருக்கான் வெளியிட்டுள்ள இந்த அனுபவப் பதிவை ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் அட்லீ தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
    • இவருக்கு ஷாருக்கான் மற்றும் விஜய் நேரில் வாழ்த்து கூறியுள்ளனர்.

    தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.


    அட்லீ

    இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து இயக்குனர் அட்லீ நேற்று (21-09-2022) தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


    விஜய் - அட்லீ- ஷாருக்கான்

    இந்நிலையில், இவருக்கு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரும் நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளனர். இதனை அட்லீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "என் பிறந்தநாளில் நான் இன்னும் என்ன கேட்க முடியும். என் தூண்களுடன் மிக சிறந்த பிறந்தநாள். மைடியர் ஷாருக்கான் சார் மற்றும் என்னோட அண்ணன் என் தளபதி விஜய்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜவான்.
    • ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.


    ஜவான்

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.


    ஜவான்

    இந்நிலையில், ஜவான் திரைப்படத்தில் 200 முதல் 250 பெண்கள் வரை பங்குபெறும் சண்டைக்காட்சி உருவாக இருப்பதாகவும் இதற்காக மும்பையில் இருந்து அவர்கள் சென்னை வர இருப்பதாகவும் ஏழு நாட்கள் இந்தச் சண்டைக் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் ஜவான்.
    • இந்த படம் 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

     

    ஷாருக்கான்

    ஷாருக்கான்

    ஜவான் திரைப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

     

    தீபிகா படுகோனே - ஷாருக்கான்

    தீபிகா படுகோனே - ஷாருக்கான்

    இந்நிலையில் 'ஜவான்' படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 'ஜவான்' படக்குழு இப்படத்தில் நடிக்க வைக்க தீபிகா படுகோனேவை அணுகியபோது ஷாருக்கான் படம் என்றவுடனே உடனடியாக 'ஓகே' சொல்லியிருக்கிறாராம்.

    ஷாருக்கான் நடித்த 'ஓம் சாந்தி ஓம்' படம் மூலமாக தீபிகா படுகோனே சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பீஸ்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

    முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

    அண்மையில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஜவான்

    இந்நிலையில், ஷாருக்கான் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படம் ஜவான். இந்த படத்தில் நடிகர் விஜய் சம்பளமே இல்லாமல் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் அந்த காட்சிகள் ஒரேநாளில் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் ஜவான்.
    • இந்த படம் அடுத்த வருடம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    ஜவான்

    இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


    விஜய் சேதுபதி - ஷாருக்கான்

    சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பலரும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகி வருகின்றனர். அதன்படி, ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    • பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜவான்.
    • ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

    இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    ஷாருக்கான்

    இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், ஜவான் திரைப்படத்தை ஓடிடி நிறுவனம் ஒன்று பெரும் தொகை கொடுத்து வாங்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதாவது, ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின் ஓடிடி-க்கு கொடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் இதனை பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று ரூ. 120 கோடி கொடுத்து வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • நடிகர் ஷாருக்கான் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் நிறைவடைந்து விட்டது.
    • இவர் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஷாருக்கான் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.


    ஷாருக்கான் - அட்லி

    அதில், அட்லி இயக்கும் ஜவான் படம் குறித்து அவர் பேசுகையில், " அட்லியின் படங்களை அனைவரும் பார்த்திருப்பார்கள். இது போன்ற படங்கள் நான் இதுவரை செய்யாத ஒன்று. நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளார். ஒரு நடிகனாக ஜவான் போன்ற படத்தில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

    • சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் "பதான்".
    • "பதான்" படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார்.

    இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் சமீபத்தில் அட்லியின் அடுத்த படமான ஜவான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதைத்தொடர்ந்து அண்மையில் ஜவான் படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

    இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    "பதான்" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

    நடிகர் ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆனதையொட்டி "பதான்"  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முன்னோட்டம் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    மேலும், பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

    ×