என் மலர்

  சினிமா செய்திகள்

  அட்லீ-ஷாருக்கான் படத்தில் இணையும் பிரபல நடிகை
  X

  ஷாருக்கான் - அட்லீ

  அட்லீ-ஷாருக்கான் படத்தில் இணையும் பிரபல நடிகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் ஜவான்.
  • இந்த படம் 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

  ஷாருக்கான்

  ஜவான் திரைப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

  தீபிகா படுகோனே - ஷாருக்கான்

  இந்நிலையில் 'ஜவான்' படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 'ஜவான்' படக்குழு இப்படத்தில் நடிக்க வைக்க தீபிகா படுகோனேவை அணுகியபோது ஷாருக்கான் படம் என்றவுடனே உடனடியாக 'ஓகே' சொல்லியிருக்கிறாராம்.

  ஷாருக்கான் நடித்த 'ஓம் சாந்தி ஓம்' படம் மூலமாக தீபிகா படுகோனே சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×