search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "SHarukh Khan"

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • சிறந்த நடிகைக்கான விருது ஜவான் படத்தில் நடித்த நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.
  • ஜவான் படம் மூலம் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமானார்.

  2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன. இதில் சிறந்த நடிகை விருதை ஜவான் படத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.

  இதே போன்று சிறந்த நடிகர் விருது ஜவான் படத்தில் நடித்த ஷாருக் கானுக்கு வழங்கப்பட்டது. இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் ஆக்ஷன் மற்றும் திரில்லிங் காட்சிகளை கொண்டிருந்தது. 

   


  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ஜவான் படம் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்து அசத்தியது. இந்த படம் மூலம் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமானார்.

  இந்த படத்தில் ஷாருக் கான், நயன்தாரா மட்டுமின்றி விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, ரித்தி தோக்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  • மிக பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர் பெப்சி உமா.
  • இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அதனை மறுத்துவிட்டார்.

  தமிழ் சினிமாவில் நடிகர்களை தாண்டி ஒரு சில தொகுப்பாளர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் தான் பெப்சி உமா என்ற உமா மகேஸ்வரி. 15 வருடங்களாக ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இவர்.


  அந்த நாட்களில் இவரின் நிகழ்ச்சியில் ஒருமுறையாவது பேசிவிட வேண்டும் என்று தவம் இருந்த ரசிகர்கள் ஏராளம். இப்படி பிரபலமான தொகுப்பாளினியாக இருந்த பெப்சி உமாவிற்கு சினிமாவில் இருந்து பல வாய்ப்புகள் வந்தும் அதையெல்லாம் அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

  ரஜினியை அவரின் இரண்டு படங்களில் நடிக்க பெப்சி உமாவை கேட்டும் அவர் மறுத்துவிட்டாராம். அதுமட்டுமல்லாமல் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பையும் தவிர்த்துவிட்டாராம். இப்படி தொகுப்பாளினியாக மட்டும் இருந்து பிரபலமான பெப்சி உமா நேர்காணல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


  அதில், "இதை நான் எங்கும் சொன்னது இல்லை. இது ராக்கிங் மாதிரி இருக்கும். ரஜினிகாந்த் ஒரு முறை என்னை தொடர்புகொண்டுஉங்க பக்கத்துல எந்த பிரபலம் இருந்தாலும் கண்ணு அங்க போகாம உங்க பக்கமே போகிறது" என்று சொன்னதாக கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  இதற்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் செய்தது குறித்து ரம்பா பேசிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

  • ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டங்கி’.
  • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'டங்கி'. இந்த படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேக கதாபாத்திரங்களுடன் நடித்துள்ளனர்.


  ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். 'டங்கி' திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது.


  டங்கி போஸ்டர்

  இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'டங்கி' திரைப்படம் ரூ.323.77 கோடியை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


  • 'டங்கி' திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
  • 'டங்கி' திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்து, பாக்ஸ் ஆபிஸில் தனது இருப்பிடத்தை உறுதி செய்தது.

  ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'டங்கி'. இந்த படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேக கதாபாத்திரங்களுடன் நடித்துள்ளனர்.


  ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். 'டங்கி' திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது.


  'டங்கி' திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்து, பாக்ஸ் ஆபிஸில் தனது இருப்பிடத்தை உறுதி செய்தது. தற்போது இந்த திரைப்படம் 250 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. 'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இந்த ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'டங்கி' திரைப்படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்த மூன்றாவது திரைப்படமாகும்.


  டங்கி போஸ்டர்

  இத்திரைப்படம் சுமார் 29.25 கோடி ரூபாய் முதல் 30.25 கோடி ரூபாய் வரை வசூலித்து, ஞாயிற்றுக்கிழமையன்று அதன் மொத்த வசூல் 102.50 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் பத்தாவது படமாக 'டங்கி' இடம்பெற்றது. இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இத்திரைப்படம் 250 கோடி ரூபாயை எட்டி, 250 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது.

  • நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டங்கி’.
  • இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார்.

  ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'டங்கி'. இந்த படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேக கதாபாத்திரங்களுடன் நடித்துள்ளனர்.


  ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். 'டங்கி' திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.  இந்நிலையில், 'டங்கி' திரைப்படம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கிவிட்டது. இத்திரைப்படம் இதுவரை ரூ.30 கோடியை வசூலித்திருந்தாலும், முதல் நாளில் இருந்ததை விட வார இறுதியில் 40 முதல் 50 சதவீதம் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. குடும்பங்கள் 'டங்கி' திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். அழகான ரொமான்ஸ் டிராமா திரைப்படமான 'டங்கி' பாக்ஸ் ஆபிஸிலும் கலக்க ஆரம்பித்துள்ளது.

  • நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ’டங்கி’.
  • இப்படம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டங்கி'. இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் டாப்சி பன்னு, போமன் இரானி, விக்கி கவுசல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


  இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, 'டங்கி' திரைப்படம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  இந்நிலையில், டங்கி படத்தின் டிராப்-4, ராஜ்குமார் ஹிரானியின் அன்பான உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது. ரயிலில் நடிகர் ஷாருக்கான் பயணிப்பதுடன் தொடங்கும் கதையானது, அதைத் தொடர்ந்து படத்தில் நடைபெறும் சாகசத்துக்கான தொனியில் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.


  பஞ்சாபில் உள்ள ஒரு அழகிய கிராமத்துக்கு சென்று நண்பர்கள் மனோ, சுகி, புக்கு, மற்றும் பாலி ஆகிய இருவரும் லண்டனுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கனவைக் கொண்ட குழுவைச் சந்திக்கும் ஹார்டியுடன் (நடிகர் ஷாருக்கானின் கதாபாத்திரம்) தொடங்கிறது. அற்புதமான விசித்திரக் கதாபாத்திரங்களை இந்த டிராப்-4 அறிமுகப்படுத்துகிறது.  • ஷாருக்கானின் மகள் சுஹானா கான்.
  • இவர் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

  பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன் கான் என்ற மகனும் சுஹானா கான் என்ற மகளும் உள்ளனர்.


  இதில் ஆர்யன் கான் விரைவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இவரது மகள் சுஹானா கான் ஜோயா அக்தர் இயக்கியிருக்கும் 'ஆர்ச்சீஸ்' படம் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் சுற்று சூழலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், நடிகை சுஹானா கானிடம் நடிகை ஆலியாபட் தேசிய விருது வழங்கும் விழாவில் தனது திருமண உடையை அணிந்திருந்தது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு சுஹானா, "புதிய உடைகளை தயாரிக்கும் பொழுது எவ்வளவு கழிவுகள் வெளியாகுகிறது என்பதை நாம் உணர்வதில்லை. ஆலியாவின் முன்னெடுப்பு சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் விதமாக இருந்தது.


  ஆலியாவே ஏற்கனவே அணிந்த உடையை உடுத்துகிறார் என்றால் நாமும் பார்ட்டி அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது ஆலியா பட்டை பின்பற்றி ஏற்கனவே அணிந்த உடையை அணியலாம்." என்று ஆலியாவை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார்.

  நடிகை ஆலியா பட் 'கங்குபாய் கத்தியவாடி' திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ’ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் அதிரடி காட்டியது.
  • ஷாருக்கான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

  இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து பாக்ஸ் ஆபீஸில் அதிரடி காட்டியது.


  இந்நிலையில், 'ஜவான்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ஷாருக்கான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் 'ஜவான்' படத்தை Extended Cut-வுடன் வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்து வருகின்றனர்.


  • அட்லீ ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
  • இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.


  இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் அட்லீ வாயில் சுருட்டுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


  • அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘ஜவான்’.
  • இப்படம் தொடர் வசூல் சாதனை படைத்து வருகிறது.

  இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.


  ஜவான் போஸ்டர்

  இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் உலக அளவில் ரூ.1117 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. ஜவானின் தொடர் வசூல் சாதனை ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.