என் மலர்

  நீங்கள் தேடியது "Vijaykanth"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் அட்லீ தற்போது ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
  • ஜவான் படத்தின் கதை திருடப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

  இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.


  அட்லீ -ஷாருக்கான்

  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'ஜவான்' படத்தின் கதை விஜயகாந்த் நடித்து 2006-ஆம் ஆண்டு வெளியான 'பேரரசு' படத்தின் கதை எனக் கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரித்து உரிய விளக்கம் அளிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது."


  ஜவான்

  இதற்கு முன்பு அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படம் 'மௌன ராகம்' படத்தைப் போல் இருப்பதாகவும் 'மெர்சல்' படம் 'மூன்று முகம்' படம் போல் உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் வலது கால் விரல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்ட அறிக்கையில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் டாக்டரின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது.

  விஜயகாந்த் - சத்யராஜ் 

  விஜயகாந்த் - சத்யராஜ் 


  மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  விஜயகாந்த் - கமல் -  ரஜினி - சத்யராஜ்

  விஜயகாந்த் - கமல் -  ரஜினி - சத்யராஜ்

  இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். அந்த வீடியோவில், வணக்கம் கேப்டன் என்று எல்லோராலும் பாசத்துடனும் நேசத்துடனும் அழைக்கப்படும் என் அன்பு நண்பன் விஜி பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் வலது கால் விரல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்ட அறிக்கையில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் டாக்டரின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  ரஜினிகாந்த் - விஜயகாந்த்

  ரஜினிகாந்த் - விஜயகாந்த்


  இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜயகாந்துக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • விரைவில் நலம்பெற்று, நல்ல உடல் நலத்துடன் இல்லம் திரும்ப வேண்டும்.

  நீரிழிவு பிரச்சனையால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் விரல் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து விஜயகாந்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

  இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல் நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில், தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குன்றி சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்ததாகவும், அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

  ×