என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிங்கு சிங்"

    • எங்களின் காதல் உருவானது 2022 கொரோனா காலக்கட்டத்தில் தான்.
    • இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரியா சரோஜின் புகைப்படத்தை லைக் செய்தேன்.

    மும்பை:

    இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் இளம் எம்பியான ப்ரியா சரோஜ் இருவருக்கும் நவம்பர் 18-ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.

    இந்த நிலையில் சமாஜ்வாதி எம்பி ப்ரியா சரோஜ் உடன் காதல் உருவானது எப்படி என்று நட்சத்திர வீரர் ரிங்கு சிங் பகிர்ந்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எங்களின் காதல் உருவானது 2022 கொரோனா காலக்கட்டத்தில் தான். அப்போது ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக மும்பையில் முகாமிட்டிருந்தேன். அப்போது இன்ஸ்டாகிராமில் என்னுடைய ரசிகர் பேஜ் ஒன்றில் ப்ரியா வின் புகைப்படம் பதிவிடப்பட்டு வாக்கு கோரப்பட்டது.

    ப்ரியா சரோஜின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரின் சகோதரி எடுத்து பதிவிட்டு வந்தார். அவர் என்னுடைய ரசிகரின் பேஜ் ஒன்றில் புகைப்படத்தை பதிவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த உடன் மிகவும் பிடித்துப் போய்விட்டது.

    உடனடியாக அவரின் புகைப்படத்தை லைக் செய்துவிட்டேன். மெசேஜ் அனுப்பலாமா என்று யோசித்த போது, அது சரியாக இருக்காது என்று நிறுத்திவிட்டேன். அதன்பின் சில நாட்களுக்கு பின் ப்ரியா சரோஜ் என்னுடைய இன்ஸ்டா புகைப்படங்களை லைக் செய்திருந்தார்.

    அதன்பின் நானே நேரடியாக மெசேஜ் அனுப்பினேன். அப்படிதான் எல்லாமே தொடங்கியது. ஓரிரு வாரங்களில் நாங்கள் தொடர்ச்சியாக பேச தொடங்கிவிட்டோம். போட்டி தொடங்குவதற்கு முன், போட்டிக்கு பின் என்று பேசிக் கொண்டே இருந்தோம். அதன்பின் எனக்குள் காதல் ஏற்பட்டது.

    என்று ரிங்கு சிங் கூறினார்.

    • கடைசி 14 பந்துகளில் 51 ரன்களை ரிங்கு சிங் விளாசினார்.
    • ஆசியக் கோப்பை தொடருக்கு முன் தன் பார்மை நிரூபிக்கும் வகையில் அவர் இந்த ஆட்டத்தை ஆடி இருக்கிறார்.

    லக்னோ:

    உத்தரப் பிரதேச டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கோரக்பூர் லயன்ஸ் மற்றும் ரில் மீரட் மேவரிக்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கோரக்பூர் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மீரட் மேவரிக்ஸ் அணி, தொடக்கத்திலேயே தடுமாறியது. 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தபோது, கேப்டன் ரிங்கு சிங் களம் புகுந்தார்.

    ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய ரிங்கு சிங், 34 பந்துகளில் 57 ரன்களை எட்டியிருந்தார். அதன் பிறகு பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். குறிப்பாக, கடைசி 14 பந்துகளில் 51 ரன்களை விளாசி மைதானத்தை அதிர வைத்தார். மொத்தமாக 48 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதன் காரணமாக மீரட் அணி 18.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

    வரவிருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கு முன் தன் பார்மை நிரூபிக்கும் வகையில் அவர் இந்த ஆட்டத்தை ஆடி இருக்கிறார்.

    இதனால் அணி நிர்வாகத்துக்கு ரிங்கு சிங்கை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • ரிங்கு சிங்கு எம்.பி. பிரியா சரோஜிக்கும் இந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
    • இவர்களது திருமணம் 3 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங், சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் அசத்தியதன் மூலம் இந்தியாவுக்கு அறிமுகம் ஆனார். இந்திய அணியிலும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார்.

    கடந்த 8-ம் தேதி ரிங்கு சிங்குக்கும், எம்.பி. பிரியா சரோஜிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அத்துடன் இவர்களது திருமணம் இந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி வாரணாசியில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இவர்களது திருமணம் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் பிப்ரவரி 2026-ல் நடைபெறும் என குடுப்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பிப்ரவரியில் நடைபெறும் திருமணத்திற்கான இறுதி தேதி விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளனர்.

    நவம்பர் மாதத்தில் ரிங்குவின் கிரிக்கெட் பணிகள் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர்
    • இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி (SP) எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார்.

    இன்று லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில், ரிங்கு சிங், சமாஜ்வாதி எம்.பி. பிரியா சரோஜின் திருமணம் நவம்பர் 18ம் தேதி நடைபெறவுள்ளது.

    இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், நவம்பர் 18 அன்று திருமண தேதி குறித்துள்ளதாகவும், இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் பிரியாவின் தந்தை தூஃபானி சரோஜ் தெரிவித்தார்.

    ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர். இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது.

    25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாதி எம்.பி. ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர்.
    • இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது.

    இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி (SP) எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார்.

    இந்நிலையில், இன்று லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

    ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர். இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

    25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாதி எம்.பி. ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்ததாக முன்பு தெரிவித்திருந்தார்.
    • அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

    இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் விரைவில் குடும்பஸ்தனாக மாற உள்ளார்.

    அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி (SP) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார்.

    இருவருக்கும் ஜூன் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விழாவிற்கான இடமாக லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    பிரியாவின் தந்தையும் எம்.எல்.ஏ.வுமான துபானி சரோஜ், ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்ததாக முன்பு தெரிவித்திருந்தார்.

    அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதாகவும், இரு குடும்பங்களின் பெரியவர்களும் தங்கள் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இந்த சூழலில், அவர்களின் நிச்சயதார்த்த விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

    மறுபுறம், ரிங்கு சிங் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக நற்பெயரைப் பெற்றுள்ளார். அவர் தற்போது இந்திய டி20 அணியில் உள்ளார். 

    • டெல்லி- கொல்கத்தா போட்டி முடிந்த பிறகு வழக்கம் போல இரு அணி வீரர்களும் நட்பாக பேசிக்கொண்டனர்.
    • கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் கன்னத்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் இருமுறை அறைந்தார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி- கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டி முடிந்த பிறகு வழக்கம் போல இரு அணி வீரர்களும் நட்பாக பேசிக்கொண்டனர். அப்போது கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் கன்னத்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் இருமுறை அறைந்தார். இதனால் ரிங்கு சிங் சோகமான ரியாக்ஷன் கொடுத்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

    இது ரசிகர்களிடையே பெரும் விவாதமாக மாறியது. இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் விசாரிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ-யை கேட்டுக் கொண்டனர்.

    இந்நிலையில் குல்தீப் யாதவ் - ரிங்கு சிங் ஆகியோருக்கிடையே எந்த சண்டையும் இல்லை என்று கொல்கத்தா மற்றும் டெல்லி அணி நிர்வாகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

    அதாவது குல்தீப் யாதவ் 2016 முதல் 2021 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த காலகட்டங்களில் இருவரும் ஹோட்டலில் ஒன்றாக தூங்குவது, சாப்பிடுவது உட்பட பல விஷயங்களில் நட்பாக இருந்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை ஒன்று சேர்த்து எக்ஸ்தளத்தில் வீடியோ ஆதாரமாக கொல்கத்தா பதிவிட்டுள்ளது.

    மேலும் குல்தீப் - ரிங்கு ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து வித்தியாசமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட வீடியோவையும் கொல்கத்தா நிர்வாகம் சேர்த்து பதிவிட்டுள்ளது. அதில் இது தான் ஊடகங்களில் வெளியாகும் செய்தி மற்றும் உண்மைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ற தலைப்புடன் கொல்கத்தா நிர்வாகம் பதிவிட்டுள்ளது. அதே வீடியோவை "நட்பு மட்டுமே" என்ற தலைப்பில் டெல்லி அணியும் வெளியிட்டுள்ளது.

    • கடந்த சீசனில் ஐதராபாத் அந்த அணி 250 ரன்களுக்கும் அதிகமாக 3 முறை குவித்தது.
    • இந்த சீசனில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 286 ரன்கள் குவித்தது.

    கடந்த ஐ.பி.எல். போட்டி யில் 200 ரன்களுக்கும் அதிகமாக ரன் குவிப்பதை அடிக்கடி பார்க்க முடிந்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் கடந்த சீசனில் மிகவும் எளிதாக 250 ரன்களுக்கும் அதிகமாக பலமுறை குவித்தது.

    ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 300 ரன்களை முதலில் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

    இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் எந்த ஒரு அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஜியோ ஹாட்ஸ்டாரில் கூறியதாவது:-

    எங்களால் 300 ரன்கள் குவிக்க முடியும். 300 ரன்களை தொடுவது முக்கியம் எனும் நிலையை இந்த தொடர் எட்டியுள்ளது. கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் 262 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்தது. தற்போது இந்த தொடரில் அனைத்து அணிகளும் வலுவாக உள்ளன. எந்த ஒரு அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும்.

    இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.

    கடந்த சீசனில் ஐதராபாத் அந்த அணி 250 ரன்களுக்கும் அதிகமாக 3 முறை குவித்தது. இந்த சீசனில் அந்த அணி ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 286 ரன்கள் குவித்தது.

    ரன் குவிப்புக்கு இம்பேக்ட் பிளேயர் விதியும் (தாக்கத்தை ஏற்படுத்துதல்) முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

    • விராட் கோலியை கிங் ஆஃப் கிரிக்கெட், கோட் என ஷாருக்கான் பாராட்டினர்.
    • ஆர்சிபி அணிக்காக 18 வருடமாக விளையாடும் விராட் கோலிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    ஐபிஎல் 2025 சீசன் ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஷ்ரேயா கோஷல் பாடல்கள் பாடி அசத்தினார். இஷா பதானி கவர்ச்சி நடனம் ஆடினார்.

    அதன்பின் ஷாருக்கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆர்சிபி அணிக்காக 18 வருடங்கள் தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலியை புகழந்து பேசினார். அப்போது கிங் ஆஃப் கிரிக்கெட், கோட் என விராட் கோலியை பாராட்டி வரவேற்றார். அதற்கு விராட் கோலியை நன்றி தெரிவித்தார்.

    பின்னர் விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் உடன் சற்று உரையாடினார். விராட் கோலியை கோல்டன் தலைமுறை எனவும், ரிங்கு சிங்கை இளம் தலைமுறை எனவும் ஷாருக்கு கூறினார்.

    பின்னர் இருவருடன் ஆட்டம் போட்டார். ஷாருக்கான் உடன் விராட் கோலியும், ரிங்கு சிங்கும் சேர்ந்து ஆடினர். பின்னர் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாக தலைவர்களை மேடைக்கு அழைத்தார். ஐபிஎல் கோப்பை மேடைக்கு கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கேகேஆர் அணி கேப்டன் ரகானே, ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.

    பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, விராட் கோலிக்கு 18 வருடமாக ஆர்சிபி அணிக்காக விளையாடுவதை கவுரவப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    • கடைசி வரை நம்பிக்கையுடன் பேட்டிங் செய்தேன்.
    • கடந்த ஆண்டு லக்னோவுக்கு எதிராக இதுபோன்ற இன்னிங்ஸ் விளையாடியதால் என்னால் அதிரடியாக ஆட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து சாதனை புரிந்தார்.

    அகமதாபாத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது.

    205 ரன் இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணிக்கு ஆட்டத்தின் கடைசி ஓவரில் 29 ரன் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட் இருந்தது. ரிங்கு சிங், உமேஷ் யாதவ் களத்தில் இருந்தனர்.

    யாஷ்தயாள் கடைசி ஓவரை வீசினார். உமேஷ் யாதவ் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார். 5 பந்தில் 28 ரன் என்ற நிலை இருந்தது. இதை எடுக்க முடியாமல் கொல்கத்தா அணி தோற்று விடும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் ரிங்கு சிங் தொடர்ச்சியாக 5 சிக்சர்கள் விளாசி புதிய சாதனை நிகழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார். மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற ரிங்கு சிங் கூறியதாவது:-

    நான் 5 சிக்சர்களை அடிப்பேன் என்று நினைக்கவில்லை. தொடர்ந்து அடித்தேன். எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. நாங்கள் வெற்றி பெற்றோம். இதற்காக நான் அதிகம் யோசிக்கவில்லை. கடைசி வரை நம்பிக்கையுடன் பேட்டிங் செய்தேன்.

    கடந்த ஆண்டு லக்னோவுக்கு எதிராக இதுபோன்ற இன்னிங்ஸ் விளையாடியதால் என்னால் அதிரடியாக ஆட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. கேப்டனும் என்னை ஊக்குவித்தார். நான் அடித்த ஒவ்வொரு பந்தும் மைதானத்துக்கு வெளியே அர்பணிக்கப்பட்டது.

    இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.

    ரிங்கு சிங் இந்த ஆட்டத்தில் 21 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சர்கள் அடித்து 48 ரன் எடுத்தார்.

    25 வயதான அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து கிரிக்கெட்டுக்குள் நுழைந்தவர் ஆவார். சிறு வயதிலேயே துப்புரவு பணியாளராக வேலை செய்து இருந்தார்.

    16 வயதில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி முதல் ஆட்டத்திலேயே 83 ரன்களை எடுத்தார். 2017-ம் ஆண்டு ஐ.பி.எல்.லில் பஞ்சாப் அணிக்காக அறிமுகம் ஆனார். கடந்த ஆண்டு கொல்கத்தா அணியில் இடம் பெற்றார். அதில் அவர் திறமையை வெளிப்படுத்தினார். இதனால் அணி லெவனில் தொடர்ந்து இடம் பெற்றார்.

    தற்போது தனது அதிரடியான ஆட்டத்தால் நம்ப முடியாத வெற்றியை ரிங்கு சிங் பெற்றுக் கொடுத்து அனைவரது உள்ளங்களிலும் இடம் பெற்று உள்ளார்.

    • கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் படைத்துள்ளது.
    • கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த டோனியின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.

    பின்னர் கடின இலக்கை துரத்திய கொல்கத்தா அணி கடைசி 18 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங் தனி ஒருவராக போராடி அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். ஜோஸ்வா வீசிய 19-வது ஓவரில் ரிங்கு சிங் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்க விட்டார். கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. யாஷ் தயாள் பந்து வீசினார். உமேஷ் யாதவ் முதல் பந்தில் 1 ரன் எடுத்தார். அதன் பிறகு 5 பந்துகளில் 5 சிக்சர்களை பறக்க விட்டு சாதனை படைத்தார். இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் படைத்துள்ளது. 20-வது ஓவரில் 30 ரன்கள் அடித்ததன் மூலமாக உலக டி20 கிரிக்கெட்டில் சேசிங்கில் கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரிங்கு சிங் படைத்துள்ளார். கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த டோனியின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

    ரிங்கு சிங் - 30 ரன்கள் (குஜராத் டைட்டன்ஸ்)

    எம் எஸ் தோனி - 24 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

    நிக்கோலஸ் பூரன் - 23 (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    ரோகித் சர்மா - 22 (டெக்கான் சார்ஜஸ்)

    எம் எஸ் தோனி - 22 (பஞ்சாப்)

    ஒரே ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:

    கிறிஸ் கெயில் - ராகுல் சர்மா ஒவர் - 2012

    ராகுல் திவேதியா - ஷெல்டான் காட்ரெல் ஒவர் - 2020

    ரவீந்திர ஜடேஜா - ஹர்ஷல் படேல் ஓவர் - 2021

    மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் - ஷிவம் மவி ஓவர் - 2022

    ரிங்கு சிங் - யாஷ் தயாள் ஓவர்- 2023

    • கொல்கத்தா அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
    • அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டி செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது.

    பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆண்ட்ரே ரசல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரது அதிரடி காரணமாக அந்த அணி திரில்லிங்கான வெற்றியை பெற்றது.

    அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு புதிய பினிஷர் கிடைத்து விட்டார் என ரசல் கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டியில் பனியின் தாக்கம் இருந்ததால் பவுலர்கள் கிரிப் செய்வது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த வகையில் பவுலர்கள் லென்த்தை தவறவிட்டதால் எங்களால் சிக்சர்கள் அடிக்க முடிந்தது. அதோடு கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் தேவை என்றால் கூட அடிக்க முடியும் என்று உறுதியாக இருந்தோம். நான் அடித்த சில சிக்ஸர்கள் இங்கு மிகவும் எளிதாகவே இருந்தது. அதனால் போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

    ஆனால் கடைசியில் நான் ரன் அவுட்டாகி வெளியேறி விட்டேன். இருந்தாலும் இந்த வருடம் எங்களுக்கு புதிய பினிஷராக ரிங்கு சிங் கிடைத்துள்ளார். நான் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட போது பந்தை ஒருவேளை தவறவிட்டால் ஒரு ரன் ஓடி வாருங்கள் என்று ரிங்கு சிங் என்னிடம் சொன்னார். நானும் பந்தை அடிக்க நினைத்து தவறவிட்டதால் ஓடிவந்து ரன் அவுட் ஆகி விட்டேன்.

    இருந்தாலும் நிச்சயம் கடைசி பந்தில் ரிங்கு சிங் போட்டியை முடித்து விடுவார் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. ஏனெனில் இந்த சீசன் முழுவதுமே அவர் விளையாடி வரும் விதம் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த சீசனில் அவர் எங்கள் அணியின் சிறந்த பினிஷராக இருந்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×