என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuldeep Yadav"

    • டெல்லி டெஸ்டில் குல்தீப் யாதவ் 55.5 ஓவர்கள் வீசி 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
    • ஜடேஜா 52 ஓவர்கள் வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு அணிகளிலும் சேர்த்து நான்கு சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

    முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீசை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் எளிதாக அவுட்டாக்கிவிட்டனர். ஆனால், 2ஆவது இன்னிங்சில் கடுமையான வகையில் பந்து வீச வேண்டியிருந்தது.

    இந்திய பந்து வீச்சாளர்கள் 118.5 ஓவர்கள் வீசினர். சுழற்பந்து வீச்சாள்கள் 95 ஓவர்கள் வீசி 5 விக்கெட் வீழ்த்தினர். பும்ரா, சிராஜ் ஆகியோர் முறையே 3, 2 என 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    முதல் இன்னிங்சில் 8 விக்கெட் வீழ்த்திய நிலையில், 2ஆவது இன்னிங்சிலா் 5 விக்கெட்டுதான் கிடைத்தது.

    குல்தீப் யாதவ் 55.5 ஓவரில் 186 ஓவர்கள் வீசி 8 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 36 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டும், ஜடேஜா 52 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    சுழற்பந்து வீச்சுக்கு சவாலான இந்த ஆடுகளத்தில், குல்தீப் யாதவ் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் கூடுதலாக விக்கெட் வீழ்த்தினார் என்று வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வாஷிங்டன் சுந்தர் கூறியதாவது:-

    குல்தீப் யாதவ் உண்மையிலேயே நன்றாக பந்து வீசினார் என்று நினைக்கிறேன். அவர் மிகவும் சிறப்பான சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தார். அவர் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால், இங்கே சற்று கூடுதலாக அறுவடை செய்துள்ளார். இங்கு உண்மையிலேயே உதவியதாக இருந்தது.

    எல்லா பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் கூட தைரியமாக வீசினார். ஆகவே, இந்த ஆடுகளத்தில் 20 விக்கெட் வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

    • ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற சாதனை படைத்தார்.
    • குல்தீப் யாதவ் நடப்பு தொடரில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன்மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

    ஆசிய கோப்பையில் சிறப்பாக பந்துவீசி வரும் குல்தீப் யாதவ் நடப்பு தொடரில் மட்டும் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

    இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரனைப் பின்னுக்கு தள்ளி குல்தீப் யாதவ் 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

    மேலும், ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    இதுவரை குல்தீப் யாதவ் மொத்தம் 31 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்தப் பட்டியலில் 33 விக்கெட்களுடன் மலிங்கா முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் ஆட்டநாயகானக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

    ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த எமிரேட்ஸ் அணி 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4, வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய வீரர் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் ஆட்டநாயகன் விருதை குல்தீப் தட்டிச் சென்றுள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் கடைசியாக அவர் 2018 -ம் ஆண்டு ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.

    மேலும் 7 ரன் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஆசிய கோப்பை டி20 போட்டியில் இது 2-வது சிறந்த பந்துவீச்சாகும். புவனேஷ்வர் குமார் 2022-ம் ஆண்டு துபாயில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 4 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாகும்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது.
    • வரும் 9-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி 28-ம் தேதி வரை நடக்கிறது.

    புதுடெல்லி:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது. இந்தத் தொடர் டி20 போட்டி முறையில் நடக்கிறது.

    இந்நிலையில், ஆசியக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு குல்தீப் யாதவ் விளையாடுவது முக்கியம் என முன்னாள் வீரர் மதன்லால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதன்லால் கூறியதாவது:

    திறமையான அணியாக இருப்பதால் இந்தியா ஒரு வலுவான அணியாக உள்ளது. இருப்பினும் கணிக்க முடியாத டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்தும் செயல்பாடுகளைப் பொறுத்து இந்தியா கோப்பையை வெல்வது அமையும்.

    ஆப்கானிஸ்தான் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அனைத்தும் வலுவான போட்டியாளர்கள்.

    குல்தீப் யாதவ் கண்டிப்பாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும். அவரது தனித்துவமான பந்துவீச்சு ஸ்டைலை டி20 கிரிக்கெட்டில் எதிரணிகள் அடித்து நொறுக்குவது கடினமாக இருக்கும். அவரது தேர்வு பற்றிய இறுதி முடிவு ஆடுகளம் மற்றும் கால சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும்.

    துபாயில் 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாட வேண்டும். இந்திய அணி தன்னுடைய திறன் காரணமாக கோப்பையை வெல்வதற்கு வலுவான அணியாக இருக்கிறது என தெரிவித்தார்.

    • 5ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் இணைத்து, சரியான அட்டாக் பந்து வீச்சை தேர்வு செய்ய வேண்டும்.
    • 4ஆவது போட்டியை போன்று பேட்டிங் செய்தால் ஓவல் மைதானத்தில் வெற்றி பெற முடியும்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி நாளைமறுநாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் எனத் தெரியவில்லை. வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா சுழற்பந்து வீச்சாளராக உள்ளனர். இதனால் குல்தீப் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்காமல் உள்ளது. பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் 5ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என கவுதம் கம்பீருக்கு கங்கலி அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    5ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் இணைத்து, சரியான அட்டாக் பந்து வீச்சை தேர்வு செய்ய வேண்டும் என கம்பீரை அறிவுறுத்துகிறேன். இது போன்று பேட்டிங் (4ஆவது போட்டி) செய்தால் ஓவல் மைதானத்தில் வெற்றி பெற முடியும்.

    இது இளம் வீரர்களை கொண்ட அணி. அணி கட்டமைப்புக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். மான்செஸ்டர் 4ஆவது இன்னிங்சில் இந்தியா பேட்டிங் செய்ததை பார்க்கும்போது, லார்ட்ஸ் போட்டியில் தோல்வியடைந்ததற்காக கவலைப்படும்.

    மான்செஸ்டர் டெஸ்டிடில் 5ஆவது நாள் உண்மையிலேயே சிறப்பாக பேட்டிங் செய்தது, லார்ட்ஸ் மைதானத்தில் 190 இலக்கை எட்டியிருக்க வேண்டும். பல வருடங்களுக்குப் பிறகு வெளிநாட்டு மண்ணில் இந்திய வீரர்கள் பல டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணிக்கு நல்லது.

    இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    • காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமார் விலகி உள்ளார்.
    • காயம் காரணமாக 4-வது போட்டியில் மட்டும் அர்ஷ்தீப் சிங்கு விலகியுள்ளார்.

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமாரும், 4-வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் அவதியுறும் நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் களம் இறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.

    4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

    இந்திய அணி; சுப்மன் கில் (C), ரிஷப் பண்ட் (VC & WK), ஜெய்ஸ்வால், KL ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ஜடேஜா, துருவ் ஜூரல் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ்

    • பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் பவுலர் மீது குறைகள் இருந்தாலும் அதை விமர்சனம் செய்வது நியாயமற்றது.
    • ஆனால் ஜடேஜாவை நான் விமர்சிப்பேன்.

    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

    இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 373 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய அனுபவத்தை வீணடித்து விட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிட்ச் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை. அந்த பிட்ச்சில் பும்ராவால் கூட எதையும் செய்ய முடியவில்லை. காற்றிலும் உதவியும் கிடைக்கவில்லை. இதுபோக பும்ரா, ஜடேஜாவுக்கு எதிராக பென் டக்கெட் சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளார்.

    அவரை சொந்த மண்ணில் நடைபெற்ற 2024 தொடரில் கூட ஜடேஜா அவுட்டாக்கியதாக எனக்குத் தெரியவில்லை அப்படி உங்களுடைய 2 முன்னணி பவுலர்களுக்கு எதிராக செட்டிலான இங்கிலாந்து பேட்ஸ்மேன் விளையாடினால் அவர்களுக்கு வெற்றி உறுதியாகி விடும்.

    பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் பவுலர் மீது குறைகள் இருந்தாலும் அதை விமர்சனம் செய்வது நியாயமற்றது. ஆனால் ஜடேஜாவை நான் விமர்சிப்பேன். ஏனெனில் கடைசி நாளில் பிட்ச்சில் அவருக்கு உதவி செய்ய ரஃப் இருந்தது. அது வழக்கமான இங்கிலாந்து சூழ்நிலைகள் கிடையாது. அந்த காலடிகளை பென் ஸ்டோக்ஸ்க்கு எதிராக ஜடேஜா பயன்படுத்தவில்லை. மிகவும் தாமதமாக பென் டக்கெட்டுக்கு எதிராக பயன்படுத்தினார்.

    ஆனால் அவரைப் போன்ற அனுபவமிக்க பவுலர் அதை அதிகம் பயன்படுத்துவார் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அங்கே தான் ஜடேஜா ஏமாற்றத்தைக் கொடுத்தார் என்று நினைக்கிறேன்.

    ஒரு காலத்தில் இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்கும். அது நியூசிலாந்தாக இருந்தாலும் சரி, இங்கிலாந்தாக இருந்தாலும் சரி. குல்தீப் உங்கள் அணியில் இருந்தால், அவரை விளையாட விடுங்கள். இங்கிலாந்தில் விளையாடுவதால் மட்டும் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்யாதீர்கள்.

    நான் ஒரு வேகப்பந்து வீச்சாளரை விட்டுவிட்டு குல்தீப் யாதவை அணியில் சேர்ப்பேன். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம் பெற வேண்டும்.

    என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறினார்.

    • லீட்சில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற வேண்டும்.
    • ஆடுகளத்தின் தன்மை மாறினால், குல்தீப் யாதவ் , ஜடேஜா இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள்.

    புதுடெல்லி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ந்தேதி லண்டன் லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்தப் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் இடம்பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    லீட்சில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற வேண்டும். அவருடன் கண்டிப்பாக ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெற வேண்டும். 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 வேகப் பந்துவீச்சாளர்களு டன் இந்திய அணி களம் இறங்க வேண்டும்.

    ஆடுகளத்தின் தன்மை மாறினால், குல்தீப் யாதவ் , ஜடேஜா இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள். ஆடுகளத்தின் தன்மையில் மாற்றம் இல்லாவிட்டாலும், விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை அவர்களுக்கு உள்ளது. எந்த ஒரு ஆடுகளத்திலும் அவர்களால் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிச்சதார்த்த நிகழ்வில் ரிங்கு சிங் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின்பு இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் தனது சிறுவயது தோழியான வன்ஷிகாவை கரம் பிடிக்கவுள்ளார்.

    நேற்று லக்னோவில் உள்ள ஒரு ஓட்டலில் இருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் ரிங்கு சிங் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின்பு இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

    • மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
    • டெல்லி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    இப்போட்டியில் ரிக்கல்டன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி குல்தீப் யாதவ் அசத்தியுள்ளார். 

    • டெல்லி- கொல்கத்தா போட்டி முடிந்த பிறகு வழக்கம் போல இரு அணி வீரர்களும் நட்பாக பேசிக்கொண்டனர்.
    • கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் கன்னத்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் இருமுறை அறைந்தார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி- கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டி முடிந்த பிறகு வழக்கம் போல இரு அணி வீரர்களும் நட்பாக பேசிக்கொண்டனர். அப்போது கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் கன்னத்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் இருமுறை அறைந்தார். இதனால் ரிங்கு சிங் சோகமான ரியாக்ஷன் கொடுத்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

    இது ரசிகர்களிடையே பெரும் விவாதமாக மாறியது. இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் விசாரிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ-யை கேட்டுக் கொண்டனர்.

    இந்நிலையில் குல்தீப் யாதவ் - ரிங்கு சிங் ஆகியோருக்கிடையே எந்த சண்டையும் இல்லை என்று கொல்கத்தா மற்றும் டெல்லி அணி நிர்வாகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

    அதாவது குல்தீப் யாதவ் 2016 முதல் 2021 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த காலகட்டங்களில் இருவரும் ஹோட்டலில் ஒன்றாக தூங்குவது, சாப்பிடுவது உட்பட பல விஷயங்களில் நட்பாக இருந்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை ஒன்று சேர்த்து எக்ஸ்தளத்தில் வீடியோ ஆதாரமாக கொல்கத்தா பதிவிட்டுள்ளது.

    மேலும் குல்தீப் - ரிங்கு ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து வித்தியாசமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட வீடியோவையும் கொல்கத்தா நிர்வாகம் சேர்த்து பதிவிட்டுள்ளது. அதில் இது தான் ஊடகங்களில் வெளியாகும் செய்தி மற்றும் உண்மைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ற தலைப்புடன் கொல்கத்தா நிர்வாகம் பதிவிட்டுள்ளது. அதே வீடியோவை "நட்பு மட்டுமே" என்ற தலைப்பில் டெல்லி அணியும் வெளியிட்டுள்ளது.

    • சென்னையுடன் மோதும் நாளைய போட்டியில் நடராஜன் விளையாட மாட்டார்.
    • அவர் முழுமையாக உடற்தகுதி பெற்றபிறகு, அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    ஐபிஎல் தொடரின் நாளைய 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் டெல்லி அணி வீரர் குல்தீப் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது இந்த போட்டியில் டெல்லி அணிக்காக தமிழக வீரர் நடராஜன் விளையாடுவரா என கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு விளையாடமாட்டார் என்று சக அணி வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் காயம் காரணமாக சென்னையுடன் மோதும் நாளைய போட்டியில் நடராஜன் விளையாட மாட்டார். அவர் முழுமையாக உடற்தகுதி பெற்றபிறகு, அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என நம்புகிறேன் என குல்தீப் யாதவ் கூறினார்.

    ×